பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
Tag: தள்ளுமுள்ளு
இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில் திடீரென அங்கு ஏற்பட்ட தகராறினால் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். மேலும் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் விமானத்தின் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை படம்பிடித்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை தாக்கி அதிமுகவினர் கேமராக்களைப் பரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆஇஅதிமுக ஆலோசனை கூட்டம் செய்யூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 500 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் […]
ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை. நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் […]