கிரிமியன் தீபகற்பத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விமானத்தளத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய கிரிமியன் விமான தளத்தில் தொடர்ந்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அந்த தீபகற்பத்தில் இருக்கும் கடலோர ரிசார்டுகளுக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் விமான தளத்தை குறிவைத்து தொடர்ந்து மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. இதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் வானுயரத்திற்கு புகை மூட்டம் […]
Tag: தாக்குதல்கள்
உக்ரேன் நாட்டில் இருக்கும் உணவு விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் நெறிப்படி மீண்டும் கருங்கடலை திறக்கக்கூடிய ஒப்பந்தங்களை செய்ய இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகள், தங்கள் நாட்டின் விவசாய பொருட்களுக்கான முனையங்கள் ரஷ்யப் படைகள் தாக்கி அழித்ததாக கூறியிருக்கிறார்கள். உலக அளவில் உணவு […]
ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் இடைக்கால தூதரான நசீர் அகமது ஃபய்க், பாகிஸ்தான் தங்கள் நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக புகாரளித்திருக்கிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரான பர்பரா வுட்வர்ட் என்பவரிடம் ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தானினின் இடைக்கால தூதர் தாக்கல் செய்திருக்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் கோஸ்டில், குனாா் ஆகிய கிழக்கு மாகாணங்களில் இம்மாதத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இது மட்டுமன்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தானை சேர்ந்த படை, பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொத்தமாக 400 பொதுமக்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களுக்கு தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. எனினும், தலிபான்கள் தொடர்ந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தனர். இந்நிலையில், அந்நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்தது. மேலும், […]
உலக சுகாதார மையமானது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள், முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேகொள்வதாக தெரிவித்து, அந்நாட்டிற்குள் நுழைந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், இந்த தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்துகிறது. […]
ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய அரசு, தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களை உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கும் பணிகளுக்கு ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, […]