நெல்லை உழவாரப்பணி குழுமம் சார்பில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் பற்றியும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் கடந்த […]
Tag: தாமிரபரணி
தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் விதமாக மக்கள் செயல்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையரை உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் தனியார் மருத்துவ நிறுவனம் மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட […]
கன்னியாகுமரியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் சாய்ந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்பின் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குழித்துறை […]
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பாறையை தகர்க்க வைத்த வெடி பயங்கரமாக வெடித்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் அந்த பாறையை தகர்ப்பதற்க்கு எந்த வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் பணி மேற்கொண்டவர்கள் பாறையில் வெடி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நம்மளுடைய தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கிறது. நம்முடைய மாநிலத்தில் உற்பத்தியாகி மாநிலத்தில் ஓடி கடலில் கலக்கக்கூடிய ஒரே நதி தாமிரபரணி நதி தான். ஆகவே தாமிரபரணி கடலில் கலக்க கூடிய அந்த தண்ணியை தடுத்து அதை நம் பகுதிக்கு வைப்பார் நோக்கி திருப்பி விட்ட வேண்டும். அப்படி திருப்பி விட்டால், ராஜபாளையம் பகுதி பிரச்சனை, சிவகாசி பகுதி பிரச்சனை, சாத்தூர் பகுதி பிரச்சனை, விருதுநகர் பகுதி பிரச்சனை, சிலுத்தூர் […]
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]
ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. […]
தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று அதிகாலையில் அணைக்கு 3 […]
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரியில் எப்போதும் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நான்காவது நாளாக 8000 […]