தமிழகத்தில் பெண்கள் மத்தியில் “தாலிக்கு தங்கம்” திருமண நிதியுதவி திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் மூலம் பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “இராமாமிர்தம் அம்மையார் நினைவு […]
Tag: தாலிக்கு தங்கம்
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த தாலிக்கு தங்கம் திட்டம் ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழக அரசால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 25,000 பணமும், 8 […]
அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்பொழுது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறம்பட செயலாற்றி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அக்கழகம் எதிர்க்கட்சியான போதும் சிறிதும் தொய்வில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏழைப் பெண்களுடைய திருமணத்திற்கு உதவி செய்யும் வகையில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் […]
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக செயல்படுத்தாத காரணத்தினால் சுமார் 3.35 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த 2 லட்சத்து 703 கோடி தேவைப்படுகிறது. இதுவரை விண்ணப்பித்து காத்திருக்கும் 3.35 லட்சம் பேருக்கு தங்கம் வழங்கிய பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.