யெரெவன் சந்தையில் உள்ள பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவன் நகரத்திற்கு தெற்கே சுர்மாலு என்ற சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் மாலை நேரத்தில் அதிக அளவு மக்கள் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும், 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]
Tag: திடீர் தீ விபத்து
ரஷியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்திலுள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி நிறுவனமொன்றில் 280க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் இந்த இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். […]
திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் ஒரு குடிசையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வேகமாக தீ அருகே இருந்த குடிசைக்கு பரவியது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். […]
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் […]
சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டது அந்நாட்டின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகம் சர்வதேச சட்ட விதியினை மீறிய குற்றத்திற்காக அத்தகைய தூதரகத்தை உடனே மூட வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகைய முடிவை மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த இயலாத […]