திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது திருப்பூர் நோக்கி […]
Tag: திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தயகவுண்டம்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்தார். இவர் சில நாட்களாக பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியான பாண்டிமீனா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பித்தளைபட்டியில் உள்ள ஓடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியுள்ளது. இதில் விஜயகுமார் […]
வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என கொண்டாடப்படுகிறது. அங்கு நிலவி வரும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு […]
திண்டுக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளரிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துபழனியூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலசுப்ரமணியம் குஜராத்தில் தனியார் நிறுவனம் வைத்து வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் லாப பணத்தை தனது வங்கி […]
திண்டுக்கல்லில் பழனி மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாசித்திருவிழாவில் தேரை இழுத்து விழாவை சிறப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மாரியம்மன் கோவில், பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் சென்ற மாதம் 12ஆம் தேதி மாசி திருவிழா தொடங்கியுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி கொடியேற்றமும், 16ஆம் தேதி கம்பம் சாட்டுதலும் மற்றும் பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து […]
திண்டுக்கல்லில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இசைக் கலைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ் என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருக்கு வசந்த் என்ற மகன் இருந்தார். வசந்த், ஹரிஷ் ஆகிய இருவரும் பேண்ட் இசைக்குழுவில் இசைக் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலக்கோட்டை பகுதிக்கு […]
திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டியபட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிக்கும் நீரை கூட விலைக்கு வாங்கி உபயோகித்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை […]
திண்டுக்கல்லில் உடல்நலக்குறைவால் மனவேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யாபட்டி பகுதியில் பூங்கோதை என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பூங்கோதை தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் குளிர் பருவம் இருந்த போதிலும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இரவில் திடீரென பயங்கரமாகத் […]
திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது […]
திண்டுக்கல்லில் அரசு அறிவித்த உணவு வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நோயாளிகளுக்கான உணவு பட்டியலின்படி தினமும் காலை கஷாயம், மிளகுப்பால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று […]
திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன், அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி வழங்கக்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மலைக் கோவிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. முன்னதாக அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. பழனி கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவராக அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீன்குமார் என்ற கணவரும், குழந்தைகளும், உள்ளனர். இவரது மாமனார் கருணாகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இந்நிலையில் சில மாதங்களாக ஊராட்சி மன்ற பணிகளில் மாமனார் கருணாகரனும், கணவர் பிரவீன்குமாரும் தலையீடு செய்வதாக கூறப்படுகிறது. இதை ஊராட்சி […]
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒடச்சந்திரம் விராலிப்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பாண்டி மாற்றுத்திறனாளியான இவர் தனியார் மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் பேருந்தின் முலம் நாள்தோறும் வேலைக்கு செல்லும் பாண்டி தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்கும் தனக்கும் அரசு மானிய […]
தன்னை மிரட்டிய அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரசை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி புகார் அளித்து உள்ளார். திண்டுக்கல்லில் ஆட்சியாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய அவர் சிலகரடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்ககூடாது என வலியுறுத்தினார்.
திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் விச்சி குடும்பத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் வெங்கடாஜலம் என்பவரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது […]
திண்டுக்கல்லில் வீட்டையின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க செயினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் புறவழிச்சாலையில் உள்ளது எஸ்.பி.ஆர் நகர் இரண்டாவது தெருவில் சௌந்தரராஜன் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களது சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தரராஜன் இறந்த பிறகு தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மகள் சசிரேகா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டு வேலைக்காக […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அடுத்துள்ள கொழுமம் கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்களில் மயில்கள் அதிகளவில் இருப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கரிசல் குளம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் வனத்துறைக்கு […]
திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் திண்டுக்கல் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் […]
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை, பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளரர். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்தின் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. A.கருத்தராஜின் மனைவி திருமதி. K. இந்திராணி உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றதாக தெரிவித்துள்ளார். திருமதி. இந்திராணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் […]
கொடைக்கானலில் பெங்களூரு கத்திரிக்காய் நல்ல விளைச்சலை கண்டும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், வாழைகிரி, ஊத்து , மற்றூர், பண்ணைக்காடு, தாண்டிக்கொடி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காபி, அவகடோ, மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலங்களிலேயே விவசாயிகள் ஊடுபயிராக பெங்களூரு கத்திரிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த பரவலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆண்டு […]
ஒட்டன்சத்திரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒருவழி சாலை, இருவழி சாலையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தர சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைகள் சிராபுரம் அருகே உள்ள அரச மரத்து பட்டி மற்றும் இரட்டை வேப்பமர பகுதியில் […]