திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தக்காளிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை சாலையோரம் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், நெய்க்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டுகள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால் தக்காளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த […]
Tag: திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் புதூர், பெரும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர், குத்துக்காடு, வெள்ளரிக்கரை, மூலக்கடை, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை […]
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 21 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் நேற்று திரும்ப ஒப்படைக்கும் பணி ஆரம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 5,000 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படவுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வாகன உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நேற்று ஆரம்பித்தது. இதுகுறித்து […]
நிலக்கோட்டை அருகே மூலப்பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த லாரி வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண்கள் ஆவர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரத்தி 554 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு பழனியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பழனி பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் ஆதரவற்றோர் 500 பேருக்கு […]
நிலக்கோட்டையில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு தற்காலிகமாக பூ மார்க்கெட் அமைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரசு நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி பிரிவு பகுதியில் தற்காலிகமாக பூமார்க்கெட் செயல்பட அனுமதி அளித்ததையடுத்து […]
பழனி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் இயங்காத நிலையில் மது பிரியர்கள் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதினை தடுக்கவும், மது விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு மைசூரிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்த ரெயிலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை […]
திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் ஆந்திராவிலிருந்து 2,450 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பு வைத்து வழங்கப்படுகிறது. இதற்காக ரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக மாவட்டங்களுக்கு இந்த பொருள்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,450 டன் ரேஷன் புழுங்கல் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து முருகபவனம் நுகர்பொருள் வாணிப […]
திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு அதிரடியாக “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் நகர் முழுவதும் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரண்டு மளிகை கடைகளில் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரண்டு மளிகை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் கருப்பு பூஞ்சை நோயால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக கண்ணில் கட்டிபோல் இருந்துள்ளது. அது வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமிக்கு கண்ணில் வலியும், கட்டியும் குறையவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். […]
தற்காலிக பூ மார்க்கெட் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்படும் பூக்கள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் பூக்களை சாலையோரங்களில் விற்பனை விற்பனை செய்து வந்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்ததோடு […]
திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி. முத்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய வத்தலகுண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் முத்துஉடையார் என்பவர் தும்மலப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் பசியால் வாடுவதை கண்டுள்ளார். மேலும் அந்த முதியவர் கிழிந்த ஆடை, சடை முடியுடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த […]
திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓவியம் வரைந்துள்ளனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ஓவியத்தின் மேல்புறத்தில் “தனித்திரு, […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காவல்துறையினர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி வாலிபர் ஒருவர் உலா வந்துள்ளார். மேலும் தன்னை அவர் கொரோனா நோயாளி என்று சொல்லி கொண்டு, தனக்கு உதவி செய்யுங்கள் என்று அங்கு வாகனங்களில் சென்றவர்களிடமும், பொதுமக்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடமும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை துரத்தி கொண்டு அவரை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுளிபட்டியில் கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடையில் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 கூட்டுறவு ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. அதன்படி கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டி கூட்டுறவு ரேஷன் கடையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுநாயக்கன்பட்டியில் மணிகண்டன் ( 24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பழனி டவுன் காவல்துறையினர் சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அடிவாரம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் 986 மதுபாட்டில்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் மது பாட்டில்களை தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கீரனூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, மானூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவற்றை விவசாயிகள் விற்பனைக்கு தயாராக அறுவடை செய்து வைத்துள்ளனர். இந்த பகுதியில் விலையை நெல்லின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 162 பெண்கள் உட்பட 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 66 வயது முதியவர், திண்டுக்கல்லை அடுத்த ஒபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே விவசாயி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலையூர் பள்ளத்துகாட்டில் வசித்து வந்த விவசாயியான வெள்ளைக்கண்ணுக்கும், அவருடைய உறவினரான தங்கராஜ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பொன்னர், பழனிச்சாமி, சின்னச்சாமி, ராஜாங்கம், முத்து என்ற மீசை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29-ஆம் தேதி வெள்ளைக்கண்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வெள்ளைக்கண்ணு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சைரனுடன் நின்று கொண்டிருந்த ரோந்து மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வடமதுரை ரயில் நிலையம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ.கீரனூரில் செல்லம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் செல்லமாளை மிரட்டி அந்த வாலிபர் அவர் காதில் இருந்த அரைப்பவுண் கம்மலை பறித்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்துச் சென்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை முதல் வருகின்ற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபான கடைகள் இன்றும், நேற்றும் இரண்டு நாட்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மது பிரியர்கள் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்து செல்ல தொடங்கினர். அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 158 மதுபான […]
திண்டுக்கல்லில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் மூக்குப்பொடி சித்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் நீண்ட சடைமுடி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதால் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, வேடசந்தூர், குரும்பபட்டி, அய்யர்மடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காயை அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் வெண்டைக்காய் அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டதால் மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் வரத்து அதிகமானது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரல்பட்டியில் சிவக்குமார் ( 40 ) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் . சிவகுமார் கூலித்தொழில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. அதே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி ( 24 ) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிற்பக்கூடத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சிற்பக் கலைக்கூடத்தில் வழக்கம்போல் நேற்று ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது விரீயன் பாம்பு ஒன்று அங்கு திடீரென்று புகுந்துள்ளது. அதனைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பாம்பை தேடி பார்த்தனர். அதற்குள் அந்த பாம்பு அங்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே சினை பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதூரில் வினோத்குமார் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டு மாத சினையான பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாடு அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் கடந்த 1-ஆம் தேதி மாலையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்துள்ளது. […]
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இளநீர், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு சக்தியும், குளிர்ச்சியும் தருகின்ற நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் நகரில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் ஏராளமானோர் நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வயதானவர்கள், குழந்தைகள் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கோவிந்தபுரத்தில் வசித்து வந்த 57 வயது ஆண் ஒருவர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையம் அருகே பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பதேவன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேலும் அவர் எப்படி இறந்தார் ? என்ற தகவலும் தெரியவில்லை. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே போலீஸ்காரர் முனீஸ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தங்கபாண்டியன் ஆகியோர் சித்தரேவு முத்தாலம்மன் கோவில் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை கண்டதும் மோட்டார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 16,281 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து 244 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் நேற்று முன்தினம் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 73 வயது முதியவர், 76 வயது முதியவர், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண், 66 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 220 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து […]
திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனி சிகிச்சை பிரிவுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]
திண்டுக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அலை மோதியது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை முன்னிட்டு மெயின் ரோடு, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை […]
திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டி பகுதியில் குருநாதன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் தங்கவேல் (38), பெருமாள் (58) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோனிமலை புலக்கரை பகுதியில் விவசாயியான ரெங்கராஜ் (50) வசித்து வருகிறார். இவர் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பன்றிகளை தனது நாய் மூலம் வேட்டையாடி அதில் கிடைக்கும் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்பேரில் கன்னிவாடி வனவர் ரங்கநாதன், வனச்சரகர் சக்திவேல், வனகாப்பாளர் நாகராஜ் […]
திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனி முத்துசாமி குளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக மிதந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]