Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு உறுதியான தொற்று… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி ஊராட்சி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பகுதியில் வசித்து வரும் 54 வயது பெண் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விருப்பாச்சி ஊராட்சி தலைவர் மாலதி வெண்ணிலா சந்திரன் தலைமையில் அந்த பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவில் வீட்டிற்கு சென்றவர்களுக்கு… காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 28-ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். அதன்பின் டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் காலையில் திறக்க வந்த போது கடையில் உள்ள மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..! கமிஷனர் உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தினமும் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 270 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுனே தெரியல..! பரிதாபமாக இறந்த உயிர்கள்… மருத்துவர்கள் பரிசோதனை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மூன்று மாடுகள் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக பலியாகின. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளத்துப்பட்டியில் விவசாயியான சக்திவேல் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 2 மாடுகள் மர்ம நோய் தாக்கியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவருடைய பசுமாடுக்கும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த மனைவி… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் அரசு அதிகாரி ஒருவர் காரில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.காலனி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குப்புசாமி (68) வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களாக வெளியூரில் வேலை பார்த்து வருவதால் குப்புசாமி அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… பறந்து நொறுங்கிய ஆஸ்பெட்டாஸ்… சேதமடைந்த கடைகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் மூன்று கடைகளில் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் போடப்பட்டிருந்த மேற்கூரை சாலையில் விழுந்து நொறுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நேற்று முன்தினம் மாலை பிலாத்து பகுதியில் சூறாவளி காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள சில கடைகள் எதிர்பாராதவிதமாக சேதமடைந்தது. அதிலும் குறிப்பாக வாலிசெட்டிபட்டி செல்லும் சாலையில் திருமலைசாமி என்பவருடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாம இப்படி பண்றாங்க..! திண்டுக்கல்லில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அனுமதியின்றி கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் பொக்லைன் இயந்திரம் இயக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி, கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா..! பிளஸ்-1 மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு முத்துநகரில் வில்சன் செபாஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபியா செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இன்பென்ட் (17) என்ற மகன் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வில்சன் செபாஸ்டின் வேலைக்கு சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு விவேகானந்தர் நகரில் தங்க பாண்டியன் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் போலீஸ் ஏட்டு மற்றும் 78 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க..! காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மில் தொழிலாளியை காதல் திருமணம் செய்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே அய்யலூர் களர்பட்டியில் பிரவீன்பாண்டி (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த மில்லில் வடமதுரை அருகே உள்ள நன்னி ஆசாரியூரில் வசித்து வரும் கவிதா என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்பாண்டி, கவிதா ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… தெப்பகுளத்தில் இறங்கிய பெருமாள்… மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்புவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு கோவில் சிறப்பு வாய்ந்த சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வருடம் கொரோனா இரண்டாவது வேகமாக பரவி வருவதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு விவேகானந்தர் நகரில் தங்க பாண்டியன் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாள் தான் ஆகுது…! கோபமடைந்த கிராம மக்கள்… சாலை மறியலால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி அருகே புதிதாக போடப்பட்டிருந்த தார்சாலை சேதமடைந்ததால் கோபமடைந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைபட்டியிலிருந்து வேலன்சேர்வைகாரன்பட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்து 11 ஆயிரம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதுவும் ஒரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிரிழப்பை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சி..! 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளது… அதிகாரிகள் தகவல்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம் மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 360 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் வட மாநிலங்களில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல்… அரசின் அதிரடி உத்தரவால்… அமலுக்கு வந்த புதிய கட்டுபாடுகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சலூன் கடைகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி பக்தர்களுக்கு வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சலூன் கடைகள், சினிமா தியேட்டர்கள், மதுபான பார்கள் உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை நேற்று முதல் மூடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுனால எங்க வாழ்வாதாரம் பாதிப்படையும்..! இதற்கு அனுமதி குடுங்க… முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு..!!

திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சலூன் கடைகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க கோரி மனு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த கட்டுபாடுகள்… கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படாத நிலையிலும்… பக்தர்கள் வழிபாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கோவிலினுள் அனுமதி வழங்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தமிழகத்தில் வேகமெடுத்து பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் பள்ளிவாசல்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊழியருக்கு கண்டறியப்பட்ட தொற்று… அதிரடியாக மூடப்பட்ட கோர்ட்… தீவிரம் காட்டும் சுகாதார பணியாளர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோர்ட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வேலை பார்க்கும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட் மூடப்பட்டது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் கோர்ட் வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 199 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பீகார் மாநிலத்திலிருந்து வந்த மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழ் புலிகள் கட்சியினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் தமிழ் புலிகள் சார்பில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார். மேலும் சார் பதிவாளரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அதில் மண்டலச் செயலாளர் மருதை திருவாணன், மாநில […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் பக்காவா இருக்கு..! எந்த பயமும் இல்ல… காவல்துறையினர் தகவல்..!!

திண்டுக்கல்லில் காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 123 காவல்துறையினர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் 44 கேமராக்கள் வெளிப்புற பகுதியிலும், 80 கேமராக்கள் உள்பகுதியிலும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! ஆய்வில் சிக்கிய நிறுவனங்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, திண்டுக்கல் கிழக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் அநாகரீக செயல்… புகை மண்டலமாக மாறிய சாலை… பொதுமக்கள் அவதி..!!

திண்டுக்கல்லில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து சென்றதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் இறக்கம் அருகே நேற்று முன்தினம் காலையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். அதன் பின் சிறிதுநேரத்தில் அப்பகுதி முழுவதும் தீ பரவியது. இதனால் அந்த சாலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதன்பின் இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடனான கடைசி தருணம்…! பிளஸ் 2 மாணவனின் விபரீத முயற்சி… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலுக்கு, கோடீஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது லோகேஸ்வரன் நீச்சல் தெரியாததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமலில் இருந்த முழு நேர ஊரடங்கை மீறிய 1,326 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுநேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மீன்பிடி தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன்பிடி தொழிலாளி பாலத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் பகுதியில் வசித்து வந்த மீன்பிடி தொழிலாளியான பூம்பாண்டி சம்பவத்தன்று அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்திலிருந்து தவறி விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி… ஆள் நடமாட்டம் இன்றி… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் நேற்று முழு ஊடரங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் முழு ஊரடங்கு நேற்று முறையாக பின்பற்றப்பட்டது. மேலும் மக்கள் அனாவசியமாக வெளியில் வரக்கூடாது, வாகன போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளால் பழனி நகரில் பெரும்பாலான சாலைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதிலும் குறிப்பாக மலை அடிவார பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் மயான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 288 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 228 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 56 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள கிளம்பிடுச்சு..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே முதியவர் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி செட்டியார் தெருவில் பழனிச்சாமி (65) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் பள்ளபட்டிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து வந்தார். ஆனால் அவர் பள்ளப்பட்டியில் இறங்குவதற்கு முன்னதாகவே பேருந்து புறப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் உடனே கவுண்டன்பட்டி பிரிவு அருகே பேருந்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… பக்தர்கள் இன்றி… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி..!!

திண்டுக்கல் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கடந்த வருடம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 15-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம், ரிஷப ஹோமம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டு அதன் பின் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கொடிமரத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படிலாம் போக கூடாது..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… திட்ட இயக்குனர் அறிவுரை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் பலரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பழனி பகுதியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கொரோனா விதிகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி பேருந்து நிலையம் பகுதியில் முககவசம் அணியாமல் சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாகுபடி வரத்து அதிகரிப்பால்… விலை திடீர் வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டூர், குட்டம், அழகாபுரி, கல்வார்பட்டி, எரியோடு, புது ரோடு ஆகிய பகுதிகளில் தக்காளியை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தக்காளி விலை கிலோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க தேடியும் கிடைக்கல..! வாலிபர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேலை கிடைக்காத மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூவனூத்து புதூர் கிராமத்தில் செல்வராஜ் எனும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ முடித்து விட்டு அதன் பின் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் பல இடங்களுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்குமார் சம்பவத்தன்று வீட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ கூட்டமா வருதே..! பீதியில் அலறிய பொதுமக்கள்… கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காட்டெருமைகள் நகருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடினர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நண்பகல் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வலம் வந்தனர். அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் இப்படி வீணா போகுதே..! புலம்பி சென்ற பொதுமக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனியில் குழாயில் இருந்து அதிக அளவு குடிநீர் வீணாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அண்ணா காலனி அருகே அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து சுமார் அரை மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியேறியதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்கோம்..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் எதிர்ப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி கடைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்ககோரி பல்வேறு சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னைக்கு எங்கேயும் போக முடியாது..! நேற்றே அலைமோதிய கூட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், மீன், இறைச்சி ஆகியவற்றை வாங்கி குளிர்பதனப்பெட்டியில் இருப்பு வைக்க தொடங்கினர். இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய முதியவர்… மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போலீஸ் அதிகாரி… அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!!

திண்டுக்கல்லில் இரவு நேர ஊரடங்கால் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த முதியவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்து உதவிய சம்பவம் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல் என அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் இரவு நேரத்தில் யாரேனும் வெளியே சுற்றித்திரிகிறார்களா ? என்று கண்காணிக்க ரோந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதோட தேவை அதிகமா இருக்கு..! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்… மாநில துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நிபுணர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று அச்சுறுத்தல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்த ஆக்சிஜனை வெளிநாடுகள் மூலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவி வருகிறது… 11 தெருக்களுக்கு அதிரடி “சீல்”… தீவிரம் காட்டும் சுகாதார பணியாளர்கள்..!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இதுவரை 11 தெருக்களுக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ராஜீவ்காந்தி தெரு, மேட்டுப்பாடி ரோடு, எம்.டி.எஸ். காலனி, அழகர் தெரு ஆகிய தெருக்களில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அந்த தெருக்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம வச்சிருக்காரு..! தண்டனை கடுமையா இருக்கணும்… மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கோபாலபுரத்தில் வசித்து வரும் வில்சன்குட்டி பாபு என்பவர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததால் சத்திரப்பட்டி காவல் துறையினரால் சென்ற 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 4 தெருக்களுக்கு “சீல்”… அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் தகரத்தால் அடித்து “சீல்” வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 21-ஆம் தேதி இந்திராகாந்திநகர், நாயக்கர் புதுத்தெரு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கிட்ட இப்படி கேக்குறாரு..! மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு… விசாரணையில் சிக்கிய ஊழியர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இ-சேவை மைய தற்காலிக ஊழியர் ஆதார் கார்டு எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் யுவராஜா என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நிலக்கோட்டை புதுச்சேரி பகுதியில் வசித்து வரும் தேன்மொழி என்பவர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்கு தனது 2 வயது குழந்தைக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் பின்பற்றுகிறார்களா..? வணிக நிறுவனங்களில்… உதவி ஆட்சியர் அதிரடி ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கடைகள், தியேட்டர்களில் உதவி ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் சராசரியாக 30 என்ற அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி உதவி ஆட்சியர் ஆனந்தி கொரோனா கட்டுப்பாடுகள் வணிக நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறதா என்று நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டான்..! இதுதான் ஒரே வழி… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தமநாயக்கன்பட்டி காந்திநகரில் சவுந்திர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேடசந்தூர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன்பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி செஞ்சா உங்களுக்கு வராது..! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக… காவல் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீராவி வைத்தியம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு நீராவி வைத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா, இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு அனுமதி குடுங்க..! உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேமுதிக பிரமுகர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தே.தி.மு.க. பிரமுகரையும், அவருடைய மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! விவசாயிகள் சங்கத்தினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே விவசாயிகள் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து புதுரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் சவடமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… ஆர்ப்பரித்து கொட்டி அருவி… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சீரான இடைவெளியுடன் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருமேகங்களுடன் சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மேலும் ஒரு மணி நேரம் பெய்த இந்த கனமழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories

Tech |