Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு காரணமானவங்கள கைது பண்ணுங்க..! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு போராட்டம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கி நடத்தினார். நிர்வாகிகள் முருகன், திருச்சித்தன், அன்பரசு, மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் பேசினார். அப்போது அரக்கோணத்தில் நடைபெற்ற அர்ஜுனன், சூர்யா ஆகியோரின் படுகொலையை கண்டித்தும், அதற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… மடக்கிப் பிடித்த காவல்துறை… 2 பேர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதரேயன்பட்டி கண்மாயில் இரண்டு பேர் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியநல்லூரில் நிக்சன்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக நிர்வாகி. அதே பகுதியில் வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அலெக்ஸ், நிக்சன்பால் ஆகிய இரு தரப்பினருக்கும் அலெக்ஸ் வீட்டின் அருகே இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… குவிந்த உண்டியல் காணிக்கை… எண்ணப்பட்ட மொத்த வருவாய்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் பழனி முருகன் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்கள் வெள்ளி, பணம், தங்கம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கையில் செலுத்துவர். கோவில் நிர்வாகம் சார்பில் இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி எண்ணப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பால் ஏற்றி சென்ற லாரி… வழியில் நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர விபத்து..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புளிய மரத்தின் மீது வேகமாக மோதியதில் டிரைவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. திண்டுக்கல்லுக்கு பால் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேடசந்தூர் தாலுகா டி.கூடலூரில் இருந்து புறப்பட்டது. லாரியை கூடலூர் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் ஓட்டியுள்ளார். லாரி நேற்று முன்தினம் அதிகாலையில் வேடசந்தூரில் ஆத்துமேட்டு திண்டுக்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோரம் கடைகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி… இரண்டாம் இடத்தைப் பிடித்து… திண்டுக்கல் வீரர் சாதனை..!!

வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திண்டுக்கல் வீரர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். வேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்றனர். அதில் இரண்டாவது இடமான வெள்ளி பதக்கத்தை திண்டுக்கல் சார்பில் பங்கேற்ற சரவணன் வென்றுள்ளார். மேலும் அவர் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உடற் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… அலறியடித்து எழுந்த பெண்கள்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவில் வீடு புகுந்து பெண்களிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாடி நவீன் நகரில் நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடிட்டராக திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி வெளியே சென்று விட்டார். அன்று இரவில் நவாஸ் தாய் மும்தாஜ் பேகம், தந்தை அகமது பாட்சா, பாட்டி ஜான் பக்புல் பீவி ஆகியோர் வீட்டில் தூங்கிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இதையடுத்து அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பறக்கும் படையின் அதிரடியால்… இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை… ஆவணத்தை காண்பித்து திரும்ப பெறலாம்..!!

திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 3/4 கோடி சட்டமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 32 பறக்கும் படைகள், 16 வீடியோக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுவினர் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சட்டென்று நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன அய்யன் குளம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சுமைதூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மனோகரன் மீது வேகமாக மோதியது. அதில் அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… மொத்தம் பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் மொத்தம் 78.95 சதவீதமும், நிலக்கோட்டை தொகுதியில் 75.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 30 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணிய தேடி இங்க வந்திருக்கு… எப்படியாவது விரட்டிருவோம்… வனத்துறையினர் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் பேத்துப்பாறை கிராம பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு ஆகிய கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று உலா வருகிறது. மேலும் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… தேர்தலன்று பதிவானவை… மொத்த வாக்கு சதவீதம் வெளியீடு..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 80.16 சதவீதமும், திண்டுக்கல் தொகுதியில் 69.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 30 ஆயிரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… மொத்தம் பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் மொத்தம் 83.08 சதவீதமும், ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 77.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதியில்… மொத்தம் பதிவு செய்யப்பட்டவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் மொத்த வாக்கு பதிவு சதவீதம் 73.33 ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 379 பெண்கள், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் விழிப்போடு கண்காணிங்க..! வாக்கு எண்ணும் மையத்தில்… டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு..!!

திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வாக்கு எண்ணும் மையத்தை திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரிக்கின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இவ்ளோ மோசமா இருக்கு..! தகவல் குடுத்தும் கேட்கல… டிரைவரின் தர்ணாவால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்து டிரைவர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 400 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஸ்வரூபம் எடுத்து வருகிறது… ஜனவரி 16-ல் தொடங்கி இதுவரை போடப்பட்டவை… அதிகாரி தகவல்..!!

கொரோனா தடுப்பூசி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் என அனைத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதில் முதல்கட்டமாக காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உட்பட முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு… குவிந்த உண்டியல் காணிக்கையை… எண்ணிய பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து உண்டியல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் மாசி திருவிழா பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருவிழா நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பெண்கள் விளக்கு பூஜை சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செல்வபகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பெத்தனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூன்று நாள் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா வந்து முதல் நாளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து ஊர்காவலன் காவு வாங்கும் நிகழ்ச்சி இரண்டாவது நாளில் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று முன்தினம் பெண்கள் விளக்கு ஏற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 2-ஆம் தேதி வரை இப்படி தான்..! வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும்… 24 மணிநேர பாதுகாப்பு பணி..!!

திண்டுக்கல் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்போ எல்லாம் பெருசாயிடுச்சு..! போட்டி போட்டு பிடித்த கிராம மக்கள்… களைகட்டிய திருவிழா..!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான் குளத்தில் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான்குளம், புகையிலைபட்டியில் உள்ளது. இந்த குளம் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இதனால் கிராம மக்கள் அந்த குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் குளத்தில் தற்போது தண்ணீர் வற்றி கொண்டிருக்கிறது. மேலும் குளத்தில் விடப்பட்ட மீன்களும் பெரிதாகி விட்டன. இதனால் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில்… துணை ராணுவ வீரர்களுடன்… 3 அடுக்கு பாதுகாப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் துணை ராணுவ வீரர்கள் உள்பட 226 பேர் வாக்கு எண்ணும் மையத்தில் நியமிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து இப்படி பண்ணிருக்காங்க..! நடவடிக்கை எடுக்கலனா சும்மா விடமாட்டோம்… அ.தி.மு.க.வினர் சாலை மறியலால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே தி.மு.க.வைச் சேர்ந்த ரவி, அ.தி.மு.க.வை சேர்ந்த குமரேசன் ஆகியோர் இடையே வாக்கு சேகரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் குமரேசன் வீட்டிற்கு ரவி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கடந்த 6-ஆம் தேதி சென்றுள்ளனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை..! விவசாயிக்கு நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாயி ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னக்கலையம்புத்தூர் கிழக்குத் தெருவில் சுப்புராயலு என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. அதில் 45 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. சுப்புராயலு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது யாரு செஞ்ச வேலைன்னு தெரியல… அதிர்ச்சியில் உறைந்த வாக்காளர்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி வாக்குச்சாவடியில் பா.ம.க. சின்னம் மறைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியை அடுத்த சுரைக்காய்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு எந்திரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. அதனை வாக்களிக்கச் சென்ற வாக்காளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் சின்னத்தை மறைத்தவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த ஓட்டு எப்படி வந்தது..? நாங்க கையெழுத்து போடமாட்டோம்… வாக்குச்சாவடி மையத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்தில் இறந்தவரின் ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையம், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலன்று கூடுதலாக ஒரு ஓட்டு வாக்குப்பதிவின் போது பதிவாகியிருந்தது. அதாவது யாரோ ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன அம்பேத்கர் என்பவருடைய ஓட்டை பதிவு செய்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… குத்துவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு… திரளான பெண்கள் பங்கேற்ப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டாளம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மல்லியம்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டாளம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம், அம்மன் அழைப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனிவரும் காலங்களில் அதிகரிக்கலாம்… அப்போது இது செயல்பட தொடங்கும்… நலப்பணிகள் இணை இயக்குனர் தகவல்..!!

கொரோனா சிகிச்சை மையம் திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயல்பட்டு வருகிறது. இதுதவிர கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும், பழனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வந்து விற்பனையாகுது..! இதனால இதோட விலையே போச்சு… வியாபாரிகள் தகவல்..!!

மைசூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலை பகுதிகளில் தரகுமண்டி இயங்கி வருகின்றது. இந்த தரகுமண்டிகளுக்கு திருப்பூர், திண்டுக்கல்லின் சுற்றுப்புற பகுதிகள், மராட்டியம் உட்பட வட மாநிலங்களில் இருந்து பல்லாரியும், தாராபுரத்தில் இருந்து சின்ன வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது. சின்ன வெங்காயம் கடந்த மாதம் ரூ.70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்பு ரூ. 35 முதல் ரூ. 50 வரை விலை குறைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க..! காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதுப்பட்டியில் ரம்யா (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் படிப்பை முடித்து விட்டு அதன் பின் வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியில் விக்னேஷ் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். ரம்யா, விக்னேஷ் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது”… பாஜக தலைவர் பேச்சு..!!

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் கார் மூலம் நேற்று முன்தினம் பழனிக்கு சென்றுள்ளார். மேலும் மலைக்கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து ரோப்கார் மூலம் சென்றார். அதன்பின் பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். மேலும் அதனை தொடர்ந்து தங்கரத புறப்பாடுகளிலும் பங்கேற்றார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும் போது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியலயே..! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் அல்போன்ஸ் (34) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர் கடும் வயிற்று வலியால் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தான் காரணமா..? காதல் மனைவியின் கண்முன்னே… கணவன் செய்த கொடூரம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் லாரி டிரைவர் காதல் மனைவியின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீலப்பாடி கே.ஆர்.நகர் பூங்கோடையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரிபுரஜோதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிபுரஜோதியை, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… முன்னேற்பாடு நடவடிக்கையாக… தயார் நிலையிலுள்ள தனிவார்டு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனா தொற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்கள கைது பண்ணுங்க..! தி.மு.க.வினர் சாலை மறியலால்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் திடீரென தி.மு.க. முகவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையம் பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. நிர்வாகிகள் காளிமுத்து, சரவணன், ரஞ்சித்குமார், திமுக முகவர்களாக நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தி.மு.க. முகவர்கள் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு… துணைவேந்தர் நியமனம்… மத்திய உயர் கல்வித்துறை உத்தரவு..!!

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புதியதாக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணைவேந்தராக பணியாற்றி வந்த நடராஜன் ஓய்வு பெற்றார். அதன்பின் துணைவேந்தராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து துணைவேந்தராக தற்போது பல்கலைக்கழக பேராசிரியர் தேவேந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்திற்கு மத்திய உயர் கல்வித்துறையின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இதயத்தை வருடும் இதமான வானிலை”… குவிந்த சுற்றுலா பயணிகள்… நிரம்பி வழிந்த விடுதிகள்..!!

கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அதனை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் பாயிண்ட், அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வெயிலுக்கு இது தான் நல்லா இருக்கும்..! விரும்பி சாப்பிடும் பொதுமக்கள்… விற்பனை அமோகம்..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் பொதுமக்கள் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி பழங்களையே அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி பழங்கள் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக திண்டுக்கல்லுக்கு கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… தொடர் விடுமுறையை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வெப்பநிலை சற்று குறைவாக காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தேர்தலை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய சாலைகள் திணறியது. மேலும் அதிகரித்து வரும் கோடை வெயில், வார விடுமுறை மற்றும் தேர்தல் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் அவ்வப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் தீவிர ரோந்து பணி… அடுத்தடுத்து சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கார்த்திக் (24), […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்களையும் நம்ப முடியலயே..! காவல்துறையின் அதிரடி வேட்டையில்… வாசமாக சிக்கிய பெண்..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவரின் வீட்டில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

107 வயதிலும் ஜனநாயக கடமை… அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திப்பேன்..! நெஞ்சை நெகிழ வைத்த பேச்சு..!!

திண்டுக்கல்லில் 107 வயது முதியவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பழையூரில் சின்னப்ப உடையார் (107) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவருடன் நேற்று சிறுமலை துறையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அதன்பின் அவர் ஆதார் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் இப்படி மாறிபோய் இருக்கு..! திமுக வேட்பாளர் வேண்டுகோள்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு வாக்குவாதம்..!!

திண்டுக்கலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வரிசைக்கு மாறாக இருந்தால் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்கள் 1 முதல் 16 வரை முதல் வரிசை மின்னணு இயந்திரத்திலும், 17 முதல் 21 வரை இரண்டாவது வரிசை மின்னணு எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 46-வது வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இதுக்கு தான் அதிக மவுசு..! அமோக விளைச்சலால்… விலை திடீர் வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகரில் புளி வரத்து அதிகரிப்பால் வாரச்சந்தையில் புளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நத்தம், கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் புளிய மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்களில் விளையும் புளி அதிக சுவை கொண்டதாக இருக்கும். இதனால் நத்தம் புளி மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நத்தம் தாலுகாவில் மக்கள் புளி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே கடந்த வருடம் முடிவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோளாறு… ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு … தாசில்தார் சிறப்பு ஏற்பாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே அம்மாபட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க சென்ற முதியவர்… தடுமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ராஜகோபாலபுரம் வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டிக்கு வாக்களிக்க துணையாக சென்ற அலுவலருக்கு அதிமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக அண்ணாநகரை சேர்ந்த லட்சுமி என்னும் மூதாட்டி வந்திருந்தார். அவர் அங்கு தடுமாறியபடி சென்றார். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கிருந்த அலுவலர்கள் துணையாக வாக்களிக்க சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிமுக முகவர்கள் சிலர் அலுவலர் துணையாக செல்லக்கூடாது. ரத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு..! சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட காலதாமத்தால் வாக்காளர்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேத்தள முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுக்குவார்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்கள் வாக்களிப்பதில் தாமதம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா இதுக்கு சரின்னு சொல்லலயே..! மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி சூசையார்புரத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் ஏழாம் வகுப்பு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் ராஜேஸ்வரியிடம் தனது நண்பர்களுடன் விளையாட போவதாக கூறியுள்ளான். அதற்கு அவரது […]

Categories

Tech |