Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த….. கூடுதல் கட்டணம் கூடாது….. ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள்…!!

நேற்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்ட நிலையில் ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோட்டல்களில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, நேற்றிலிருந்து  ஹோட்டலில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருமையான யோசனை…. இனி நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டாம்… காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு….!!

முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய யுத்தியை போக்குவரத்து காவல்துறையினர் கையாண்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனம் வரிசையாக நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் வரும்பொழுது அடிக்கடி நெரிசலில் சிக்கும் நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். அவ்வகையில், முக்கிய சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் இரட்டைப் படையில் வரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் நோக்கி பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் படுகாயம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா. இவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்று விவேக் சர்மா தனது அக்கா விக்டோரியா, அக்காவின் கணவர் குமரேசன் மற்றும் தாய் வேளாங்கண்ணி  ஆகியோருடன் சேர்ந்து தனது காரை கொடைக்கானல் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் 1வது கொண்டை ஊசி வளைவில் இவர்களது கார் சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி முதல் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!

திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கொடுமை… கொரோனா உருவாக்கியுள்ள நவீன தீண்டாமை..!!

கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை  கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

வீட்டிலிருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை – அள்ளிக்கொடுக்கும் திண்டுக்கல் …!!

சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர், சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க சமூக விலகல் மிகவும் அவசியம், அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து.  ஆனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றவில்லை, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – திண்டுக்கல் அருகே வெளிநாட்டு தம்பதி…பொதுமக்கள் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெளிநாட்டை சேர்ந்த தம்பதியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லப்பட்டி சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் இருந்த  வெளிநாட்டு தம்பதியினரை  கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொடைக்கானலில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி கொண்டு சென்னைக்கு செல்வது  தெரிந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது ஏற்கனவே 6 முறை தங்களை […]

Categories
கரூர் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு! பேருந்து கிடைக்காததால்… அவர்கள் எடுத்த திடீர் முடிவால் விபரீதம் .!!

பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முக்கிய மாவட்டமான மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 அல்லது […]

Categories

Tech |