திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவிகள் கிடைக்காததால் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளின் தோழிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]
Tag: திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு […]
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத. இதன் காரணமாக அணையில் […]
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]
பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]
கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை கண்டு ரசிக்கலாம். இந்த நிலையில் தற்போது “ஸ்பாத்தோடியா கம்முலேட்டா” என்ற பெயர் கொண்ட பூக்கள் ஆப்பிரிக்கன் துலிப் மரங்களில் செந்நிறத்தில் பூத்து குலுங்கி வருகின்றது. இந்த பூக்கள் உக்கார்த்தே நகர், வில்பட்டி, பேத்துப்பாறை, ஆனந்தகிரி போன்ற மலைப்பாதைகளில் கொத்து கொத்தாய் பூத்து வருகின்றது. இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கி காணும் இடமெல்லாம் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றது. வருடத்திற்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது. இதே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நந்தவன பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் மற்றும் மயில் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் வளர்க்கும் ஒரு பசு மாடு கன்று இல்லாமல் 24 மணி நேரமும் பால் கறக்கிறது. இந்த மாட்டிற்கு சினை ஊசி கூட போடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கன்று இல்லாமல் சினை ஊசி போடாமல் ஒரு மாடு 24 மணி நேரமும் பால் கறப்பது மிகவும் அதிசயமாக […]
பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார். […]
விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]
திண்டுக்கல் பழனிச்சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திரைப்பட நடிகையுமான விந்தியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை […]
குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு மாலைகோவில் தெருவில் மின்வாரிய ஊழியரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பூண்டு வியாபாரியான கோபால் என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அவரவர் வீட்டிற்கு முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல் கல்லூரி பேராசிரியரான […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கால் புதுப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சற்குண பாண்டி(24) புவனேஷ்குமார்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் என்பவரின் கணவரும் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டியம்மாளும், பாண்டியும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த சற்குண பாண்டியும், […]
ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதே தெருவில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகளை குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசி மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குவிந்து கிடந்த குப்பைக்கு யாரும் தீ வைத்ததால் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே குப்பையில் கிடந்த பட்டாசுகளும் திடீரென […]
கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் விவசாயியான பிரபாகரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி […]
பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் […]
விலங்கை வேட்டையாடிய வாலிபருக்கு வனத்துறையினர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனச்சரகர் பழனி குமாரின் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அழகாபுரியில் வசிக்கும் வீரன்வல்லரசு(21) என்பது தெரியவந்தது. இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். பின்னர் அதன் 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது வனத்துறையினரிடம் […]
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தீபாவளி பண்டிகை கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடச்சந்தூர் குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வடித்த நான்கு பேரை போலீசார் […]
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]
வேடந்தூர் அருகே பட்டாசு வெடித்து விவசாயின் கட்டைவிரல் துண்டானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் ரோசாப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சௌந்தரராஜன் நேற்று மதியம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அவர் கையில் பிடித்து பட்டாசை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அவரின் இடது கையின் கட்டை விரல் துண்டானது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல […]
மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய ஆட்சியர் +2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி முகாம் நடந்து வருகின்றது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி […]
வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் பபியோன்ராஜ்-செலின் ரோஸ் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது “எனக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் இரண்டு டிப்பர் லாரிகளும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தத்தின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் முருகன் கோவிலின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த நாளில் மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் […]
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]
கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரை பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிலம்பரசி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிலம்பரசி தனது கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]
சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து […]
ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]
தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் மாரிமுத்து, ஜெய பாண்டி ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் குவியல் சரிந்து மாரிமுத்து மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து ஜெயபாண்டி அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் […]
தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னத்துப்பட்டி கிராமத்தில் ராஜா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய கிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே வசிக்கும் முத்து(8), தனலட்சுமி(8) ஆகியோருடன் சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் ஆழமான பகுதிகள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் இருப்பவர்களிடம் நடந்தவற்றை […]
தேள் கொட்டியதால் மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மனாம்பட்டி பகுதியில் விவசாயியான ஜெய்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும் வெற்றிவேல் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜெயகண்ணன் தனது மகனுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலை செந்தேள் ஒன்று கையில் கொட்டியதால் சிறுவன் வலியால் அலறி துடித்தான். […]
விபத்தில் சிக்கி வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமிநாதபுரத்தில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கருங்காலக்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நத்தம்- மூன்றுலாந்தர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பேருந்தை வழிமறித்தார். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் வாலிபர் திடீரென அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் படுத்து கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனரும், கண்டக்டரும் கீழே இறங்கி வாலிபரை எழுந்து வருமாறு கூறியும் அவர் வரவில்லை. இதுகுறித்து […]
உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் சாரங்க சரவணன் என்பவர் உதவி வருவாய் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்தது. அதன்படி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். நேற்று சரவணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, சரவணன் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது […]
சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் […]