Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்….. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சாவு….. பெரும் அதிர்ச்சி….!!!

கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி. அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(63). இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு நந்தினி (24), சரவணகுமார் (20), சிவா (17) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினிக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது, இரண்டு மகன்களுடன் காளியப்பனும், அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள்…. கூட்டுறவு அமைச்சர் திறப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான பூங்கா, பாலம், தார்சாலை ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சித்தையன்பேட்டை பேரூராட்சி புதுத்தெரு எஸ்.ஏ.கே நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார் அதன் பிறகு ஆலமரத்து வாய்க்கால் முதல் கொம்பை வரை ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான தார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய ஓட்டல் உரிமையாளர்….. போலீசார் அதிரடி….!!!!

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள்…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி அருள்மலையில் பழமையான ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த மலைக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு 5 உலோக சிலைகளை புதிதாக அமைப்பதற்கு பக்தர்களின் பங்களிப்போடு நிதி திரட்டப்பட்டது. அதன்பிறகு அந்த நிதியின் மூலம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகிய 5 உலோக சிலைகள், சுவாமி மலையில் உள்ள புகழ்பெற்ற சிற்பி மூலம் செய்யப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் பக்தர்களுக்கு….. ரோப் காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“போலியான முகநூல் கணக்கு” பெண்ணை பழிவாங்கிய இன்ஜினியர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண்ணின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி தவறாக சித்தரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 30 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு துவங்கி தன்னை ஒருவர் அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(32) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரசாந்த்(31) என்பவர் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரசாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில்…. ரயிலை நிறுத்தி தரிசனம் செய்த ரயில்வே ஊழியர்கள்….!!!!

வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி  நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டுள்ளனர். இதனால் […]

Categories
திண்டுக்கல்

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருகிறேன்… வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் அபேஸ்… அதிரடியாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்…!!!!

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக  கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழா”… அருந்ததி படம் பாணியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்பாக காப்புகட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியிலிருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அதன்பின் நேர்த்திக்கடன் செலுத்தவந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜைசெய்து, […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு யாருமே இல்லை”… விரக்தியில் விபரீத முடிவு…. அனாதையான குழந்தைகள்… பெரும் சோகம்…!!!!

துணைக்கு யாருமே இல்லாத காரணத்தினால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டியை  சேர்ந்த ரஞ்சிதா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகளுடன் வாழ்ந்து வருகின்றார். சிறுவயதிலேயே தாயை  இழந்த ரஞ்சிதா கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது தம்பியும், தந்தையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விடுமுறை அளிப்பதில் முறைகேடு” 101 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படவேண்டும். இதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிய…? முக்கிய வரலாற்று ஆவணமான கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர்  தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாய திருவிழா”…. காண வந்த ஊர் பொதுமக்கள்…. விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய திருவிழாவானது நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், சிறுதானிய உணவுவகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுப்பொருட்கள், பாரம்பரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுதந்திரதின விழா எதிரொலி!…. பேருந்து நிலையத்தில் மூவர்ணத்தில் ராட்சத பலூன்….!!!!

நாடு முழுதும் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி பறக்கவிடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 40,000 வீடுகள், பழனி நகராட்சியில் 12,875 வீடுகள், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற நகராட்சிகளில் தலா 12,000 வீடுகள், 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 100 வீடுகள், 306 ஊராட்சிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 437 வீடுகள் என மொத்தம் 5 லட்சத்து 91 ஆயிரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி: 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம்…. வெளியான புகைப்படம்….!!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக பழனியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனக ராஜ் தலைமை தாங்கினார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பழனி தேரடியிலுள்ள நேதாஜி சிலை பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் போது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக் கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர். பழனி நகரின் முக்கியமான வீதிகள் வழியே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்து அட்டுழியம் செய்யும் யானைகள்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக் காடு, கொக்குப்பாறை ஆகிய பகுதிகளில் சென்ற சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தோட்டங்களுக்கு போக முடியாமல் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில் சோலைக்காட்டை சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்துவேல், கோபி, பரமேஸ்வரி போன்றோரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானைகள் நுழைந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகியவற்றை சேதப்படுத்தியது. அத்துடன் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாரியம்மன் கோயில் திருவிழா”…. பக்தியுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் திருவிழா 8- ஆம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகேயுள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். இதையடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு, அங்கு இருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதன்பின் குடங்களில் கொண்டுவந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு…. வனத்துறையினரின் திடீர் ஆய்வு…. சமூக ஆர்வலர் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி இருக்கிறது. இந்த அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக வனத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பாரதி அண்ணா நகர், கோம்பை ஆகிய இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக புகாரின்படி மாவட்ட வனஅலுவலர் டாக்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உணவு திருவிழா: போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…. எங்கேன்னு தெரியுமா?…!!!!!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்கு நேற்று உணவு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட், திண்டுக்கல் கடலை மிட்டாய், பிரபல ஓட்டல்களின் பிரியாணி, அசைவ உணவுகள், சத்தான தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், கேக்வகைகள், மரச்செக்கு மற்றும் கல்செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. மொத்தம் 45 அரங்குகளில் உணவுகள், உணவுபொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவிற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். அதேபோன்று துணை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய கராத்தே போட்டி…. திண்டுக்கல் மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 20 வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று, போட்டியில் சிறப்பாக விளையாடி பரிசுகளை குவித்தனர். அதன்படி கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 வீரர்கள் 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…… உடனே விண்ணப்பியுங்கள்…..!!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரத்தில் ராக்கம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நாகலட்சுமி(44) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக ராக்கம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ!…. தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள எட்டிக்குளத்துப்பட்டியில் சின்னதண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் கோவிலில் விழா தொடங்கியது. அப்போது கோவிலில் சன்னதியில் இருந்து மின்னொளி ரத்தத்தில் சாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாவ்…. பிரியாணி, கேக் வகைகளுடன் நாளை உணவு திருவிழா….. உடனே கிளம்புங்க….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுக்கின்றது.இதனையடுத்து பி.வி.கே. திருமண மண்டபத்தில் நாளை காலை உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பராம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றது. இதற்காக 45 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டி…. தஞ்சாவூர் வீரர்-வீராங்கனைகள் சூப்பர் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கௌரவிக்கக்கூடிய வகையில் இந்திய தடகளம் சார்பில் நாடு முழுவதும் நீரச் சோப்ரா தங்கம் வென்ற அதே நாளில் ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழக தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளியின் நீர்வீழ்ச்சியில் வாலிபர் அடித்து செல்லப்பட்டாரா…..? தேடும் பணிகள் தீவிரம்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல சத்திரத்தை சேர்ந்த நாகநாத சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் அஜய் பாண்டியன் இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம் கொம்புவில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்துவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் தனது நண்பர் கல்யாண சுந்தரம் என்பவரிடம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்று இருக்கின்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய் பாண்டியனை கல்யாணசுந்தரம் செல்போனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு….. விரைவில் ரோப் கார் சேவை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில் தினசரி மாதாந்திர மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டி…. பழனி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, சேலம், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.  இந்த போட்டி வயது மற்றும் எடை அடிப்படையில் தனி தனியாக நடைபெற்றது. இதனையடுத்து இந்த போட்டியில் போட்டியில் பழனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். அதன்படி 46 கிலோ எடை பிரிவில் அன்பு கார்த்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி தொழிலாளி கொலை வழக்கு….. மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் மாவட்ட சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்நிலையில் ஓமந்தூரான் தனது மனைவி பாண்டியரின் பெயரில் ஒரு சொத்தை விற்று பணம் தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறி கிரிக்கெட் மட்டையால் அடித்து ஓமந்தூரான் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… முறிந்து விழுந்த மரங்கள்….. போக்குவரத்து பாதிப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை சில நிமிடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டி உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டு மற்றும் மேல்மலை செல்லும் பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்ற மகனையே…. தமிழகத்தில் இப்படியும் ஒரு கொடூர தாய்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

திண்டுக்கல்லில் கணவனை கொலை செய்து விட்டு மகனை தாய் ஜெயிலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது பழனியை சேர்ந்தவர் ஓமந்தூரார். ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  இவர் தன் மனைவி பாண்டீஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதனால் பாண்டீஸ்வரி உறவினர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார். அதன் பிறகு மகனுக்கு 15 வயது என்பதால் அவனுக்கு தண்டனை குறைவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை… இளம் பெண் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு…!!!!!!!

சாணார்பட்டி அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அபய குரல் எழுப்பியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நந்தினி உடலில் பற்றி எரிந்த தீயை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை….. கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் 3 இடங்களில் மண்சரிவு….. அவதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர். அதன்படி திண்டுக்கல், தேனி, நிலக்கரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் பலத்த மழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்-அதுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. ALERT-ஆ இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முத்தழகுபட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுகன்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கால்பந்து போட்டி”…. பங்கேற்ற மாணவ-மாணவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் போன்றவை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியானது விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். இதையடுத்து மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கதலைவி சர்மிளா பாலகுரு போன்றோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புகள் இப்படி தான் வாழும்…. நடைபெறும் புகைப்பட கண்காட்சி…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள்  புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷம்மற்ற  பாம்புகள், பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் ஆகியவை  குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாம்புகள் பற்றிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 46 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கு 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர்  குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 46 பேர் முயலை பிடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பழனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் மகாநதி அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!!!!!

பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் பகுதியில் கருணாநிதி அணை அமைந்திருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் இந்த அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணையின்  நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனை அடுத்து உபநிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு  தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டம்…. பெட்ரோலுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அடிப்படை வசதிகள், உதவித்தொகை உட்பட பல கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் விசாகன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அகரம் பேரூராட்சி வி.காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் அடிப்படைவசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடா விருந்து” மயங்கி விழுந்து உயிரிழந்த ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மயங்கி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  பாலமுருகன் அய்யலூர் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்திற்கு  சாப்பிட சென்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாலமுருகனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!!

புல்லாவெளி  நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன்  கனமழை பெய்தது. இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில்   குளிப்பதற்காக வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“யோகாசன போட்டி”…. திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல்லில் யோகாசனசங்கம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் விளையாட்டு மைதானம் அருகே உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் வயது அடிப்படையில் பல சுற்றுகளாக நடைபெற்றது. இதை மாவட்ட யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றில் கலந்துகொண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடைவிடாது பெய்த மழை…. நிரம்பி வழியும் வரதமாநதி அணை…. கண்டு ரசிக்கும் மக்கள்….!!!!!

திண்டுக்கல் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர்பாசன ஆதாரமாக பாலாறு, பொருந்தல்ஆறு, வரதமா நதி, குதிரைஆறு அணைகள் இருக்கிறது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். சென்ற சில வாரங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை பெய்ததை அடுத்து பழனியிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் குறிப்பாக வரதமாநதிஅணை தன் முழு கொள்ளளவான 66.47அடியை எட்டிநிரம்பியது. இந்நிலையில் சென்ற 2 நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. பேருந்து நிலையத்தில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் செம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. செம்பட்டி பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதன் காரணமாக பயணிகள் சிரமமடைந்தனர். அத்துடன் செம்பட்டியிலுள்ள ஆத்தூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர்…. என்ன காரணமாக இருக்கும்?….. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகன் பிரகாஷ்(24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடன மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வலிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மோகன் பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யக்கூடாது…. புகார் அளித்த மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர்….!!!!!

மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர் புகார்  மனு ஒன்று அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நமது மாவட்டத்தில் சாலை ஓரங்களில் 3  சிம் கார்டு நிறுவனத்தினர் குடை அமைத்து குறைந்த விலையிலும், இலவசமாகவும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிம் கார்டுகளை வாங்குபவர்கள் 1  மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசி விடுகின்றனர். இதனையடுத்து […]

Categories

Tech |