மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.டி.வி. தினகரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக கடந்த புதன்கிழமை வந்தார். அங்கிருந்து வியாழக்கிழமை பெரம்பலூருக்கு சென்று விட்டு திருநெல்வேலிக்கு செல்வதாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு சரியாக சாப்பிடாமல் கிருமி தொற்று, குடல் தொற்று, […]
Tag: தினகரன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்து உள்ளனர். இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் போன்றோர் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து 3 மணி […]
அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பிற்கு பின்னர் சசிகலா தினகரன் உள்ளிட்டோர் முழுவதுமாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டனர். இதன் பின்னர் தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அவர் தனக்கு ஆதரவு அளிப்பார் என தினகரன் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் சசிகலாவோ நான் பொது வாழ்க்கையில் இருந்து ஒரேடியாக விலகிக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இதனால் தினகரனின் எதிர்பார்ப்பு சுக்கு நூறானது. […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு திமுக அரசு மாற்ற திட்டமிட்டு இருந்தால் அதனை உடனே கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் புத்தாண்டு என்பதை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு திமுக அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும். கருணாநிதி செய்த தவறினை அம்மா […]
தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சி பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தமிழகத்தில் 3வதாக உருவாகும் அணியின் முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\ தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]
தமிழகத்தில் அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அமமுக தீர்மானம் செய்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளத்தை சேர்ந்த சுரேஷ் நெப்போலியன் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது டிடிவி தினகரன் எங்களுக்கு ஊத்தி கொடுத்தார். அவர்களது குலத்தொழில் அது, என்று தினகரன் சார்ந்த எங்களது சமூகத்தை இழிவாக பேசியுள்ளார். இது எங்கள் சமுதாய மக்களிடம் மனவருத்தத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திடையே […]
கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தான் ஊத்தி கொடுத்தார் என்று அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய டிடிவி தினகரன் சசிகலா வருகிற 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று கூறியுள்ளார். அவர் தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் […]
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]
லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைதாகியுள்ள வேலூர் துணை ஆட்சியர் தினகரன் பலகோடி சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பது அம்பலமாக்கிருக்கிறது. வேலூரில் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பதாக கூறி ரூ.50,000 லஞ்சமாக வாங்கியதாக தனி துணை ஆட்சியர் தினகரன் தனது கார் ஓட்டுனருடன் கைதாகியுள்ளார். அவரது வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ .76 லட்சம் பறிமுதல் செய்யயப்பட்டது. இதை குறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. போலீசார் கைப்பற்றிய ரூ .76 லட்ச பணம் […]