சென்னை ராயபுரம் தொகுதி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் அவரை கண்டித்து வீட்டிற்க்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் “நாங்கள் ஆளும் கட்சியினர் அவ்வாறு தான் செய்வோம். எங்களை எதிர்த்தால் உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம்.!” என கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தக் காவலர் வண்ணாரப்பேட்டை காவல் […]
Tag: திமுகவினர்
வேலூர் மாநகராட்சி மாமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக இருந்தது குற்றங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் கணிசமான அளவில் குறைந்திருந்தன. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நடுநிலை தன்மையுடன் செயல்பட முடியவில்லை. அதோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் […]
சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று களப்பணியாளர்கள் நீக்கிவிட்டு நாங்கள் சொல்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்கவேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா. அதாவது அரசு பணிகளில் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் அதன் பொருள். இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுகவின் செயல்பாடுகள் உள்ளது என்று […]
அம்மா உணவகத்தை திமுகவினர் மீண்டும் சரிசெய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், “மே 6ஆம் […]