Categories
மாநில செய்திகள்

திமுக தொழிலதிபர் வீட்டில் ஐ.டி ரெய்டு…. வருமானம் வரித்துறையினர் அதிரடி….!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் வசிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமானம் வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |