எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. இதனையடித்து மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனால் அதிமுக […]
Tag: திமுக
மக்கள் ஆசி யாத்திரையை பாஜக தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நேற்று முதல் தொடங்கினார். இந்நிலையில் தாராபுரத்தில் நடைபெற்று வரும் எல். முருகனின் இரண்டாம் நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.. அதனை தொடர்ந்து இன்றைய விவாதத்தில், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]
புத்தகங்களும் இருக்கும், அதே நேரத்தில் டிஜிட்டலாகவும் புத்தகங்கள் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, காகிதமில்லா பட்ஜெட்டிற்கு பாராட்டுகள். இதே போல அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்க வேண்டும்; மதுரையில் திறக்கப்படவுள்ள நூலகத்தில் புத்தகங்கள் தான் இருக்க […]
மாவுப்பூச்சி கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலம் ஈரோடு,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க […]
சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள், கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.. இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். மு க ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், மக்களை […]
இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நாங்களும்… நாட்டு மக்களும் மறக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நீங்கள் நிறைவேற்றியதில்லை, அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், ஒருவருக்க்காவது கொடுத்தீர்களா ? ஆவின் பால் பாக்கெட்டுக்கு 25 ரூபாய்க்கு விற்கப்படும் என்று சொன்னீர்கள்… செய்தீர்களா ? ஏழை மக்களுக்கு […]
தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில் திமுக வழங்கி இருக்கக்கூடிய உறுதி மொழிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே பின் வாங்குவதற்காக முயற்சி என்று பொருள்பட கருத்தை எடுத்து பேசியுள்ளார்கள். நான் நேற்று முன்தினம் நூறாவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்கு பாராட்டு ஏற்புரையிலே சொன்னேன். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்து இருக்கக்கூடிய வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாய கடனை […]
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1,000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்போ ஏழை இல்லத்தரசிகளுக்கு மட்டும் என சொல்றீங்க” என்று ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் இ-பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.. இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதிமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா ? என்ற கேள்வியை எழுப்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி நாலாயிரத்து கொடுத்துள்ள திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத 14 வகையான மளிகைப் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திருப்புவனம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்துவதற்காகவே வெள்ளை அறிக்கை என்பது வெளியிடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், பல்வேறு விஷயங்களில் கடந்த காலங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறீர்களா ?என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். முன்னுரையில் […]
அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பெரிய பட்டியலே இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார். அதேபோல திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக என்ற கேள்வியை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார் முன்னுரையில் திட்டம் வரும் என்று கூறினீர்களே.. கொண்டு வந்தீர்களா என்ற கேள்வியும் அதிமுகவை நோக்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் வரி, மின்சாரக்கட்டணம் உயர போகுது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை விதிகளை மதிக்காமல்…. எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு, இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் […]
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமகவின் தலைவர் ஜிகே மணி, சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி […]
சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.. பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. மேலும் மருத்துவர் எஸ். காமேஸ்வரன் மதுரை ஆதீனம் உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை […]
கடனை வாங்கி கடனை அடைத்த ஒரே அரசு திமுக அரசாங்கம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார். தமிழக அரசின் பட்ஜெட், அதற்க்கு முன் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடன் வாங்காத நாடே கிடையாது. கடன் கெப்பாசிட்டி பொருத்தவரை… நான் உங்ககிட்ட கடன் கொடுக்கின்றேன் என்றால்…. அந்தக் கடன் கொடுக்கிறவுங்க நினைக்கணும் உங்களால திருப்பி செலுத்த முடியுமானு…. ஆனா நாங்க திருப்பி செலுத்துகின்ற கேப்பாசிட்யோடது தான் எங்களுடைய கவர்மெண்ட் […]
தமிழகத்தில் விலையேற்றம், வரி உயர்வு கண்டிப்பாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெள்ளை அறிக்கையில் 2006இல் இருந்து இவர்கள் கணக்கெடுக்கின்றார்கள். 2001 எடுங்க, 1996எடுங்க. 1996 – 2001இல் கஜானாவும் காலி. ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டு தான் திமுக போச்சு. 2001இல் அம்மா வந்த பிறகு தான் கருவூலத்தை நிரப்பினார்கள். அப்படி நிரப்பி பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், […]
வெள்ளை அறிக்கையை வெளியில் வெளிடாமல் சட்டமன்றத்தில் வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை விதிகளை மதிக்காமல்…. எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு, இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் […]
தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று இது தான் திமுக உடைய வாடிக்கையான சொற்கள். திமுக ஆட்சியில் டிவி கொடுத்தாங்க…. ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கொடுத்தாங்க…. உணவு பங்கீட்டு அட்டை மூலமாகத்தான் கொடுத்தாங்க என தெரிவித்தார். மேலும், பெண்களுக்கான உரிமை தொகை […]
இந்த ஆட்சி தொடர உறுதுணையாக இருந்ததற்கு நான் முக்கியமான காரணம் என்பதால் திமுக தலைவருக்கு என் மீது கோபம் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக […]
அதிமுக அரசில் ரேஷன் கார்ட் மூலமாக 6000 கொடுத்து இருக்கோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு முழுமையான அளவுக்கு நிறைவேற்றல.. இன்றைக்கு கடன் என்று சொன்னால் ஏறக்குறைய 5 லட்சம் கோடி என்று சொல்கிறார்கள்… 5லட்சம் கோடி கடன் எப்போ ?2022ஆம் ஆண்டு தான் அந்த கடன் வரும் என பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போ 2021ல் […]
நீட் குறித்து மாணவர்களை குழப்பி விட்டதால் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே ஒரு நிதிநிலை அறிக்கையில் சொல்கிறார்கள் ஒரு வருஷத்தில் நிறைவேற்ற முடியாததை 5வருஷத்தில் நிறைவேற்றுவோம் என்று. ஆனால் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் இதே போல எங்கயாவது சொல்லி இருக்கீங்களா ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்…. […]
தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பட்ஜெட் தாக்குதலுக்கு முன்பு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும் மக்கள் சார்ந்த பிரச்சனை குறித்து பேச அனுமதி கோரி எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார். அவருக்கு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் […]
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுப்பேன் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நேற்றை சட்டப்பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது, வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் உரிமையான உள்ள விளக்கத்தை நான் சட்டமன்றத்தில் என்னுடைய வாதத்தில் அத்தனைக்கும் பதில் வரும். ஏற்கனவே 10 ஆண்டுகாலம் நான் சொன்ன பதில்…. அதில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 100-வது நாளை எட்டி […]
யானை பசிக்கு சோள பொறி போல என தமிழக பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் யானை பசிக்கு சோள பொறி போல பெட்ரோல் விலை குறைப்பு பெட்ரோல் – டீசலுக்கு 5 ரூபாய், 4 ரூபாய் குறைக்கணும், அதுதான் வாக்குறுதி. உண்மையில் ஒரு ஜென்டில்மேனாக இருந்தால் மக்களை ஏமாற்றக்கூடாது. பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய் குறைப்போம் என்று சொன்னாங்க, […]
திமுக அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகைக்கடன் கூட்டுறவு வங்கியில் வைத்திருந்தாலும், தேசிய வங்கியில் வைத்திருந்தாலும் நாங்கள் தள்ளுபடி செய்வோம். கல்வி கடன் அனைத்துமே ரத்து செய்வோம். பெட்ரோல், டீசல் மீதான விலை சுமையை, விலை ஏற்றத்தை மக்களுக்கு குறைக்கின்ற வகையில் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு […]
தமிழகத்தில் 2026-க்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருக்கும் பொழுது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான வகையில் பணம் சேர்த்ததாக கூறி அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே எஸ் பி வேலுமணிக்கு […]
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]
திமுக கட்சியில் இணைந்த பத்மபிரியா இப்போதுதான் அனுபவ பாடம் படிக்க தொடங்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுசூழல் ஆர்வலராக இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் களம் கண்ட பத்மப்ரியாவும் ஒருவர். இவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அண்மையில் விலகியநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். […]
மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டை மாற்றுவது உறுதி என அக்கட்சியின் புதிதாக இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்த இவர் அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து திமுக கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மேற்கு மண்டலத்தை […]
மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது முதல் டுவீட்டை மகேந்திரன் பதிவிட்டுள்ளார். அதில், பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும், அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவையும் தொடர்ந்து சுமந்து சென்ற சுயமரியாதை சூரியன் […]
தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பின்னர், கமல்ஹாசன் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி மநீம துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார் மகேந்திரன். மேலும் அவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 78 பேர் மட்டுமே நேரில் வந்து […]
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதராவாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார். அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசயிலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனால் அமமுக நிர்வாகிகள் பலர் அதிர்ப்தியில் இருந்தனர். சசிகலாவும் தொடர்ந்து தொலைபேசியில் தொண்டர்களுடன் […]
நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவினரின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர் எஸ் ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட்தேர்வு பாதிப்பு சம்பந்தமாக […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து திமுக அரசு தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு கோஷ்டிப் பூசலே காரணம் என்று சர்ச்சை எழுந்த நிலையில் திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு […]
சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து முன்னதாக அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகளை ஓபிஎஸ் – இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் மேலும் சசிகலாவிடம் பேசியதாக கூறி அதிமுக நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கினர். இந்நிலையில் சசிகலாவுடன் பேசியதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் புதிய திருப்பமாக திமுகவில் இணைந்தனர். திமுக விலிருந்து நீக்கப்பட்ட மாநிலத் துணைச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். அப்போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் […]
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமா நிதி வழங்குவேன் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளை கொண்டுவந்து வழங்கி வருகின்றார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள். அமெரிக்கவால் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், வட அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அமெரிக்க தமிழ் மருத்துவ […]
தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்கி வருகின்றது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமானதாக இருக்கின்றது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கின்றது. கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் […]
தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் கொரோன பற்றி பேசியபோது கொரோனா என்ற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழகம் இப்பொழுது 2 மிக முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. ஒன்று கொரோனா என்கின்ற நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிக்க பல முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக […]
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பார்கள் என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் தவிப்பதை அறிந்த முதலமைச்சர் முக. ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் உரிய பயணத்தை மேற்கொள்ள முடியாமல் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இந்த செய்தி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தவிர்த்து வந்த அந்த பயணிகளின் குறையை போக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முக .ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ரயில் நிலையத்தில் காத்திருந்த […]
நடந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு முக. ஸ்டாலினுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டி மற்றும் வேதபண்டிதர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வரை சந்தித்த அவர்கள் லட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கியும் வேத ஆசீர்வாதம் கோரியும் வாழ்த்துகளை கூறியுள்ளனர். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறுகையில், . கொரோனா பரவுகின்ற சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை மனதில் வைத்து மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும். அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முக கவசம் அணியுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். பயம் மட்டும் வேண்டாம் இது குணப்படுத்தக் கூடிய நோய்தான். இது கஷ்டமான காலம் […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது, . ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்கிற சூழலில், பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகின்றது. பால், மருத்துவமனைகள், மருந்து கடைகள், பத்திரிக்கைகள், வேளாண்மை விற்பனை மையங்கள் நீங்களாக மற்ற சேவைகள் இருக்காது. பலசரக்கு, காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். சாலையோர காய்கறி, பூ கடைகளுக்கு அனுமதி உண்டு. மற்ற கடைகளுக்கு […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறுகையில், . கொரோனா தொற்று பரவல் தொடர்பாக நேற்று மூன்று மணி நேரத்திற்குமேல் மாநிலத்தில் இருக்கின்ற முக்கிய அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களோடு நான் ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். கொரோனா பரவல் குறித்த முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். உண்மையை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த வகையில் கொரோனா என்கின்ற பெரும் […]