அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.
Tag: #திருக்குறள்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலக அமைதிக்கும் மனித வாழ்வு வழிகாட்டும் திருக்குறள் என்ற மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மொழிபெயர்ப்பட்ட போது, அதிலிருந்து ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் மறைத்து விட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானது இல்லை என்று கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து வைரமுத்து […]
தலைநகர் டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கி இருக்கின்றனர். சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகின்றது. டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணி பார்க் கொழும்பு நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் சுப்பிரமணியன் பேசும் போது மிகுந்த […]
திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக நிறைவடைந்து தற்போது அச்சிடும் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருக்குறளில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு ஒரு குடும்பத்தினர் அசத்தி வருகின்றனர். அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பல்மருத்துவர். இவர் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ராஜவேல், மணிவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜவேலு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். […]
மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி திருச்சி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அமுதா(48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் புதுச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர் போட்டியில் பங்கேற்று உள்ளார். இந்த போட்டியில் 30 மா இலைகளில் 1330 திருக்குறளையும் 20 மணி நேரத்திற்குள் எழுதி சாதனை படைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அமுதாவுக்கு பாண்டிச்சேரி இந்தியா […]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மற்றும் மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் இணைந்து, பல்கலையிலுள்ள திருவள்ளுவர் இருக்கை சார்பாக திருக்குறள் பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. அப்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி பேசினார். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமும், அறமும் உடையவனாக இருக்கவும், நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் வழிகாட்டி நுாலாக திருக்குறள் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த திருக்குறளை, தமிழர் மட்டுமின்றி வெளி நாட்டு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கான பணியை பல்கலை செய்யும். […]
தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தின் கீழ் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கி வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளம் முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28190448, 044-28190412, 044-28190448 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை […]
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருக்குறள் ஏற்கனவே ஆங்கிலத்தில் 18 உரைகளுடன் வெளிவந்துள்ளது. 21 மொழிகளில் 5 மொழிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது மேலும் இந்திய மற்றும் வெளிநாடு என்று 22 மொழிகளில் […]
திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு சேர்த்து திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் 2 கோடி செலவில் திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள் உடன் இணைந்து இணைய வடிவிலும், அசைவூட்டம் […]
இன்றைய மாணவர்கள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துவதால் சமூக வலைதங்களிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமானது தற்போது அதிக அளவில் குறைந்து வருகிறது. வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குபி .ஏ தமிழ் 3 ஆண்டுகள் இளங்கலை வகுப்பு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு கரூர் வள்ளுவர் அறிவியல் […]
திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் கொண்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருக்குறளுக்கு என தனி சிறப்பு உண்டு. அரசு பேருந்துகள் தொடங்கி பள்ளி பாடங்கள் வரை அனைத்திலும் திருக்குறள் இன்றியமையாததாக உள்ளது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மீண்டும் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பாடமாக […]
கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். குறிப்பாக சில குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல […]
கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர். கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 14 முதல் இந்த ஊக்க […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் பொது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 2021-2022 க்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். இதனால் நிறுத்தியமைச்சருக்கு தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த வருடமும் இதே போன்று திருக்குறளை மேற்கோள் கட்டி பேசிய போதும் அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் […]
திருக்குறள் என்பது மூலம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதில் அடக்கிய திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வோம். திருவள்ளுவர் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருக்குறள்தான். பள்ளிப்பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் திருக்குறளை கற்று வருகிறோம். மனித குலத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருக்குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.அப்படிப்பட்ட திருக்குறளை உலகம் மக்கள் அனைவரும் அவரவர் மொழியில் மொழிபெயர்த்து கற்று வருகிறார்கள். திருவள்ளுவர் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுகிறார். மேலும் தமிழர்களின் ஒரு பண்பாட்டு சின்னமாகவும் திகழ்கிறார். திருவள்ளுவரின் […]
திருக்குறளை எழுதியது அவ்வையார் என்று பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]
திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]
திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர், இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன் இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை செய்யணும். […]