பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவா, அக்கட்சியின் பெண் நிர்வாகியான டெய்ஸியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ 2 நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக பாஜகவில் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், டெய்சியை ஆபாச வார்த்தைகளால் சூர்யா சிவா வசைப்பாடிய ஆடியோ இணையயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம் என்று டெய்சி தெரிவித்துள்ளார். தம்பி போல்தான் சிவா என்றும் […]
Tag: திருச்சி சிவா
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது… தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்… அண்ணா சொன்னது, தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால், ஆனா, ஆவன்னாவில் இருந்து […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]
மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநிலங்களவை நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் அரசு முப்பத்தி ஐந்து மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளது என்று கூறிய திருச்சி சிவா எம்பி, இது ஆளும் […]
இதர பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் பட்டியலை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 127வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயமரியாதை கட்சியாக விளங்கும் திமுக அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கிறது என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடுத்த வழக்கால் OBC பிரிவுக்கு 27% இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது. OBC பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50 சதவீதம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. இதனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியில் மட்டுமே இருந்தது. எனவே மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினை ஒன்றை திமுக MP. திருச்சி சிவா எழுப்பினார். மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியான மத்திய அரசு துறை பணியிடங்களில் மிகச் சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பபட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90% இடங்களை உள்ளூர் […]