திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]
Tag: திருச்சி
நிவர் புயல் காரணமாக சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நிவர் புயல் சென்னை நெருங்கிக் கொண்டிருப்பதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, கண்ணூர், விஜயவாடா மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய 12 விமானங்களும், நகரங்களுக்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் முதற்கட்டமாக 24 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து […]
போலியாக சோனி பெயரில் குறைந்த விலைக்கு டிவி விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நந்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் குறைந்த விலையில் சோனி டிவி கிடைப்பதாக பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் அமைந்துள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்து 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். பில் வாங்காமல் சென்ற அவர் வீட்டிற்கு சென்று டிவியை ஆன் […]
திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை […]
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் […]
பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். […]
அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சட்டைப்பையில் நிறைய மாத்திரைகள் இருந்தன.இதனால் அவர் கொரோனாவால் பாதிப்படைந்து […]
திருச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போது, வருகின்ற 2021ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும், பழுதான சிஸ்டத்தை சரி செய்வதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்தச் செய்தியை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை […]
நாகர்கோவிலில் காதலனுடன் சேர்த்து வைக்க, சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்ற முகநூல் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 24ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதுதொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமாரை […]
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது சிறுமியான இவர் தனது சாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிப்பதற்காக எடுத்துக்கொண்டு வயல் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பாலமுருகன் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டுக்குள் இழுத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பாலமுருகன் […]
தாடியை கிண்டல் செய்த நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் லட்சுமணன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து இருவரும் மணிக்கூண்டு அருகே சாலையோரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வேண்டி கொண்டு லட்சுமணன் வளத்தை தாடியை பெருமாள் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு உருவாகியுள்ளது. இதில் கோபம் […]
திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- லட்சுமி தம்பதியினருக்கு 4 வயதில் கௌதம் வாசுதேவன் என்ற மகன் இருந்தான். இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லணை அருகே உள்ள கிளிக்கூண்டு கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த […]
வெங்காய விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாநகரில் உள்ள 14 பசுமை பண்ணை அங்காடிகளில் 11 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கேகே நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து […]
விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணச்சநல்லூர் அருகே உள்ள சிலயாத்தி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேம்பு, ஊதியம் போன்ற மரங்களைக் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி உள்ளார். லாரி சாலையில் பள்ளத்தில் மாட்டி இருப்பதால் அவ்வழியாகச் சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். தகவலறிந்து […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகா உடன் இணைக்க வேண்டும். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடங்கு பட்டியில் குழந்தைகளின் கல்வி அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சான்றிதழ் வாங்க மருங்காபுரிக்கும் மணப்பாறை என இருவேறு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கும் வீணாக அலைய வேண்டி உள்ளதால் கொடங்கப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கிராமங்களை சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகாவில் சேர்க்கக்கோரி கொடங்குபட்டியின் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் […]
மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் […]
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் திருநங்கை சம்யுக்தா பிறந்த நாளான நேற்று அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். […]
திருச்சி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டு குழந்தைகள் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே உள்ள கரையோரத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் ஆறுவயது தர்ஷினி மற்றும் நாலு வயது நரேன் ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். அனிதா திருச்சி தில்லைநகரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் காரணத்தால், அனிதாவின் தாய் இரு குழந்தைகளையும் […]
ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் முறையை கைவிட வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம். கட்டுமானம் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நலவாரிய ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் மற்றும் பதிவு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி அருகே சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். திருச்சி மணிகண்டம் அடுத்த வடக்கு பாகனூரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய இருதயசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் […]
மனைவியின் ஆபாச படத்தை இணையதளத்தில் விட்ட கணவனுக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர். 2006-ம் ஆண்டு இவருக்கும் , கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் திருமணம் ஆனது. அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் சென்னையில் வசித்தனர்.பெண் என்ஜினீயர் 2007ஆம் ஆண்டு சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு அளித்தார் .மனுவில் அவர் கூறியதாவது,”எனது கணவர் நான் குளிக்கும் […]
தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கும் பட்டியல் என மானவனுக்கு 8 லட்சம் ரூபாய் அளித்தால்தான் மாற்றுச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ஒட்றைப்பிடாரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற மாணவன் இந்த புகாரை கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டம் சிறுதன் ஊரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஎஸ்சி மேலாண்மை படிப்பை அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் […]
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அலகாபாத் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகள் […]
திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் […]
தொட்டியம் அருகே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே இருக்கின்ற சித்தூர் என்ற கிராமத்தில் பொய்யாமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது உடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக பாஜகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனாம்குளத்தூர் பகுதியிலுள்ள சமத்துவபுரத்தில் நுழைவுவாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையினை சுத்தம் செய்தனர். இவ்விவகாரத்தில் […]
திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை […]
தொப்புள் கொடியுடன் குழந்தையொன்று மூட்டை கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்து பிரித்தனர். அதில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கி குழந்தையின் உண்மையான தாய் யார் என்று […]
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு […]
திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் […]
திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகள் நல்ல நலிவடைந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த பூம்புகார் நகரில் கொலுபொம்மை பொருட்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலைஞர்களின் கலைத்திறமையை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் இந்த பூம்புகாரில் இருக்கும் கொலு பொம்மைகளை வேங்கி பயன்பெறுமாறு அப்பெண்மணி கேட்டுக்கொண்டார்.
திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]
நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]
திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு […]
10 லட்சம் நிவாரணம் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ தொறிற்சங்கம் சார்பில், சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு அரசால் தற்கொலைக்குத் தூண்டப்படும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து […]
சமீபத்தில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தனர். இதேபோல அமைச்சர் பாண்டியராஜனும் மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தென் மாவட்ட அமைச்சர்கள் கருது தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்வார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சி […]
திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.42 […]
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அக்பர்.. இவரை திருச்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள செங்கலாக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அங்கு, அவரை கயிற்றால் கட்டிவைத்து அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அக்பர் பலியாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]
மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின் வாரிய தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை கண்டித்தும் , திருச்சியில் மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. திருச்சி தெண்ணூறு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு, மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும், மத்திய அரசு […]
திருச்சியில் 15 நாட்களில் சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் கையில் பணம் இன்றி தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பா சாகுபடி விவசாயத்தை பெரிதும் நம்பியிருக்கும் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சாகுபடி சிறப்பாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் போதியளவு நீர் வரத்து, நெல்மணிகள் கையிருப்பு என அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், ஊரடங்கால் சம்பா சாகுபடி செய்வதற்கு தேவையான பணம் கையில் இல்லை விவசாயிகள் […]
அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்தவர்களிடம் சுங்க துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக விமானங்கள் அனுமதிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]
திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட […]