Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: திருச்சியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு …!!

கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார்.  அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில் – பொதுமக்கள் அவதி!

திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிந்து வருகிறது. வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் குறைந்தபட்சம் 83 டிகிரியாக உள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி முதல் குறைந்தபட்சம் 84 டிகிரியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 10 நகரங்களில் இன்று கொளுத்திய வெயில்…. சென்னையில் மட்டும் 107 ℉ வெப்பநிலை பதிவு!!

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. வெயிலின்  தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழநாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 105, கடலூரில் 104, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாகை மற்றும் தூத்துக்குடியில் 102, திருச்சியில் 101, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் 100 டிகிரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ.20,000 நிவாரணம் கொடுங்க… ”கோவணத்துடன் போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகின்றார். மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடி அறிவித்திருந்தார்கள் அது அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கொரோனா பாதிப்பால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, சந்தை படுத்த முடியவில்லை. பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிள்ளோம். உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் ஓய்வூதியம் […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புறாவால் வளர்ந்த காதல்…! ”சேர்த்து வைத்த ஊரடங்கு” பூட்டிய கோவிலில் கல்யாணம் ….!!

ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மலேசியா, துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு: மத்திய அரசு

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மானம் தான் முக்கியம்… மகள்களை கொலை செய்த தாய்… காரணம் என்ன?

குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்கள் ஊதியம் முதலமைச்சர் நிதிக்கு”…. அசத்திய திருச்சி கிராம நிர்வாகிகள்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை  திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க…. டீ வியாபாரி, கிடையாதா ? போலீசுக்கு டப் கொடுத்த பெண் …!!

திருச்சியில் டீ கேனில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தது நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கள்ளசாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டதோடு, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் சட்டத்த்தை மதிக்காமல் போலிஸுக்கு தெரியாமல் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் நடைபெற்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதை போலீசார் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் : ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,204 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. திருச்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார். திருச்சியில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு… இதுதான் காரணம்!

திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று  58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள்  இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு  சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]

Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 நாட்கள் கொரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோடு இளைஞன்… குணமடைந்து வீடு திரும்பினார்..!!

19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை.. காவல்துறையின் நூதன முறை..!!

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள்  காவல்துறையினர். தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது. திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் கோரோனோ விழிப்புணர்வு…அம்மன் TRY நிறுவனம்…!!

கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா  விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆதரவற்றோருக்கு உதவிய காவலர் – குவியும் பாராட்டு

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில்  ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

#lockdown: பைக்கில் இருவர் வந்தால் வாகனம் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் கொரானாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிகிச்சை பிரிவில் 110 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்  ஈரோட்டைச் சேர்ந்த நபருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒரு நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி 2 பேர் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் மேலும் 25 பேர் அனுமதி …!!

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்தியாவில் வேகமாக பரவி வரும்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி : தூக்கிச் சென்ற போலீஸ்!

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை  காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருச்சி வாலிபருக்கு கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு!

தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. #UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth — Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020 துபாயில் இருந்து […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை பேருந்து சேவைகள் நிறுத்தம்!

தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட […]

Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள்

திருச்சியில் 4 பேர்.. ஈரோட்டில் 13 வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி!

திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறி ? சிறப்பு வார்டில் சிகிச்சை …!!

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உணரப்பட்டதால் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் : காரணம்?

திருச்சியில் அனுமதி இன்றி இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்க  வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருச்சியில் பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் தங்கப் புதையல்… 504 தங்க நாணயங்கள்!

திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் 504 தங்க நாணயங்கள் நிறைந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான விளங்குகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள் தூய்மைப்படுத்திய போது அங்கு குழிதோண்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து ஏதோ தட்டுப்படுவது போல வித்தியாசமான சத்தம் கேட்க அங்குள்ள மண்ணை தள்ளி பார்த்தபோது, செப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 3.5 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன சிலநாட்களில் கணவனின் செல்போனை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!

திருச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்த மனைவிக்கு அவர் குறித்த அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லூயிஸ் விக்டர்  இவரது மகன் எட்வின் ஜெயக்குமார்(36) இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக (cashier ) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ரெஜினா (32) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண்ணுடன்   திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு […]

Categories

Tech |