Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் கட்டிடம்… தவறி விழுந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தோளூர்பட்டி கிராமத்தில் திருமுருகன் என்ற சென்ட்ரிங் தொழிலாளி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரசலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்வதற்காக திருமுருகன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருமுருகன் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருமுருகனை அக்கம் பக்கத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆதரவின்றி சுற்றித்திரிந்த மூதாட்டி…. மகனுடன் சேர்த்த போலீசார்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார். இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மத்திய பேருந்து நிலையத்தில்…. வழிந்து ஓடும் கழிவுநீர்…. அவதியில் பயணிகள்….!!!!

வழிந்து ஓடும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றது. இங்கிருந்து ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பேருந்துகள் நிற்கும் இடத்தில் கட்டண கழிப்பிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கால்வாய் நிரம்பி பேருந்துகள் நிற்கும் இடத்தில் வழிந்து ஓடியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். அது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் ரூபாய் 82,000 மோசடி…. தவிக்கும் வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

ரூபாய் 82 ஆயிரத்து மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் பகுதியில் வசந்தவேலு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் whatsapp மற்றும் telegram வாயிலாக பதிவு ஒன்று வந்துள்ளது. இதனை வசந்த வேலுவும் திறந்து பார்த்துள்ளார். இதனை அடுத்து மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ரூபாய் 1600 முதலீடு செய்தால் 600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வசந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த கடைகளில்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

பல கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பால் ஏஜென்சி கடையை நடத்தி வருகின்றார். இவர் இவருடைய கடையின் பூட்டை உடைத்து ₹2900மும், பக்கத்து தெருவில் உள்ள மீரா மொய்தின் என்பவருடைய செருப்பு கடையில் ரூ.2000மும், சீனிவாசன் என்பவருடைய கடையில் 1700 ரூபாயும், பக்கத்து தெருவில் உள்ள சாமுவேல் ராஜ் என்பவருடைய பழக்கடையில் ரூபாய் 2500, கோகுல்ராஜ் என்பவர் நடத்தி வரும் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைவு…? வெளியான தகவல்…!!!!

திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண […]

Categories
மாநில செய்திகள்

“பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி காட்டுகிறார்கள்”…? அமைச்சர் கே என் நேரு பேட்டி…!!!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறிய போது, வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள் பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி காட்டுகின்றார்கள். அதனால் அதிமுக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 1 1/4 லட்சத்துடன் நின்ற முதியவர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் சூப்பர் திட்டம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் தொடக்கம்….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதனை போல நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூல்கர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பாகவத், இணை இயக்குனர் பொது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்த சென்ற மூதாட்டி…. நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கில் கலவரம்…. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அடித்துக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து…. தோட்டாக்களை திருடிய ரவுடி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இணையதளம் மூலம்…. பெண்ணிடமிருந்து ரூ. 4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்திய பெண்…. குழந்தைகளோடு திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!!

குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து … காரால் வழிமறித்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போதும் பேருந்து கார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி” தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்….. சென்னையில் இருந்து நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரயில் எப்போது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்,‌ தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து…. திருச்சியில் இருந்து என்னென்ன ஊருக்கு சிறப்பு பேருந்து தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24 ஆம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூர் பயணங்களும் திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பில் மாவட்ட வாரியாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியப் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 150 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொது கழிவறைக்கு சென்ற பெண்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு தயார்…. பலத்த போலீஸ் பாதுகாப்பில் பணிகள் தீவிரம்….!!!!

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“டீக்கடைகளுக்கு சீல்”…. என்ன காரணம்….? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு அருகில் 90 காபி பார் ஒன்று உள்ளது. இதே போல் கரூர் பைபாஸ் ரோட்டில் அகிலாண்டேஸ்வரி டீ கடை ஒன்று உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் அந்த கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனையில் அந்த கடைகளில் புகையிலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி…. பள்ளி மாணவர் பலி…. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!!

வேன் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அருண் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் இருந்தார். இவரும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மாணவனும் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டியூஷனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்புறமாக சரக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோதிஸ்காந்த்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர் களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் புகழ்ந்து பேசியவரா இப்படி..! பெண் இன்ஸ்பெக்டருடன் நிர்வாணமாக இருந்த டிஎஸ்பி…. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்ட டிஜிபி.!!

பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில்  தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட பணிகள்….. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் லாரி ஓட்டுனரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக புலிவலம் சாலை விரிவாக்க பணியின் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணியை விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கையில் குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபர்….. பத்திரமாக மீட்ட சாந்திவனம் மனநல காப்பகத்தினர்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய ரோடு, மணப்பாறை கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுமக்களிடம் பிஸ்கட், டீ போன்ற வச்சி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் கம்பி அல்லது குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பார்த்ததும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

பெருமாள் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இனி 108 பெருமாளும் ஒரே இடத்தில்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தை நம்பி ஏமாற்றமடைந்த பொதுமக்கள்…. அலுவலகம் முன்பு திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்த திருநங்கை”…. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ராமஜெயம் கொலை வழக்கு – 2 பேரிடம் விசாரணை ..!!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம்  2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்டோபர் 9 வரை…. இதெல்லாம் நடத்த தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஊர்வலங்கள் நடத்த திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரில் இன்று முதல் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 கீழ் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருநங்கையை திருமணம் செய்த நபர்….. கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் திருநங்கையான பபிதா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் நான் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டேன். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். இதனால் சிறப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கடலூர் மாவட்டத்தைச் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம் – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் நேற்று (செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு ” 3 1/2 லட்ச ரூபாயை இழந்த பெண்….. இந்து முன்னணி நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 3 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியில் சாந்தி(56) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியராஜூக்கு அரசு வேலை வாங்குவதற்காக சாந்தி முயற்சி செய்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி நிர்வாகியான மணிகண்டன் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அரசு வேலை வாங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரு கோடி ரூபாய் கடன்….. கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட தம்பதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சேகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்த சேகருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக சுமார் 1 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 கோடி ரூபாய் பணம்” பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு ஏமார்ந்த முதியவர்…. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதவத்தூர் பகுதியில் நிர்மல் குமார்(67) என்பவர் வசித்து வருகிறார். இவர் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நிர்மல் குமாரின் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது செல்போன் எண்ணுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. 2 மடங்கு உயர்ந்த கட்டணம்….. அதிர்ச்சியில் பயணிகள்..!!

தீபாவளி நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு இடங்களில் பணி புரியக்கூடியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களுக்கான மதுரை, கோவை, திருச்சி, சேலம் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அரசு சில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து…. குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி ..!!

திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
திருச்சி திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இறந்த 2 தமிழர்களின் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு..!!

வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி”…. பல்வேறு பள்ளிகள் பங்கேற்பு…!!!!!

திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஹேண்ட்பால் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றது. இந்த போட்டியை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்க ஹேண்ட்பால் சங்க செயலாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பம்”….. 16-ம் தேதியே கடைசி நாள்…!!!!!

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த தகவலின் பேரில்…. “விரைந்து திருடர்களை மடக்கிப் பிடித்த போலீசார்”…. கமிஷனர் பாராட்டி சான்றிதழ்…!!!!!

செல்போன் திருடர்களை மடக்கிபிடித்த காவலரை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சென்ற இருபதாம் தேதி நள்ளிரவு ஆனந்த் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க போலீஸ் கமிஷனர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தார். அப்பொழுது செல்போன் பறித்து மூவரும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு ஆட்டோ…. “தூக்கி வீசப்பட்ட இருவர்”….சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….. இறந்த தாயின் உடல்…. “சக்கர நாற்காலியில் மயானத்திற்கு கொண்டு வந்த மகன்”…. பரபரப்பு…!!!!!

இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள்…. “10-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்”….!!!!!

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஐந்து மாதம் பாலத்தின் மீது போக்குவரத்தை வருகின்ற 10-ம் தேதி இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆகையால் வாகன ஓட்டிகள் மாற்றிப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி…. “சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற திருச்செந்துறை அரசு பள்ளி”….!!!!!

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது. திருச்சி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்டபட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் பிஷப்ஹீபர் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 17 வயது குட்பட்ட பிரிவில் திருச்செந்துறை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பல வருடங்களாக வேலையில்லாமல் இருக்கின்றீர்களா…?” இதோ உதவித்தொகை…. விண்ணப்பம் ஆரம்பம்….!!!!!

திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 10ஆம் தேதி முதல் மூடப்படும் – ஆட்சியர் அறிவிப்பு..!!

திருச்சி காவிரி பாலம் 10ஆம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவிரி பாலம் வரும் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். அதன்படி, காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் போக்குவரத்து வழி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காவிரி பாலத்தில் 2 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். திருச்சி – சென்னை செல்லும் […]

Categories

Tech |