தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் விதவிதமான முறையில் திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை உள்ளகரம் அடுத்துள்ள பகுதியில் இருக்கும் வீட்டில் திருடர்கள் நள்ளிரவில் கொள்ளை அடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்து சற்றும் பயமில்லாமல் அதற்கு மாறாக போதையில் முத்த மழை பொழிந்துள்ளனர். திருடர்கள் சிசிடிவி கேமராவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை […]
Tag: திருடர்கள்
குஜராத் மாநிலத்தில் உள்ள சல்தான் பகுதியில் ரியா (வயது 18) என்ற கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனது தேர்வுக்காக இரவில் தூங்காமல் படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சத்தம் குறித்து ரியா பெரிய அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் ரியாவின் […]
வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக சென்னை சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில் சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த […]
ஜெர்மனியில் பொது கழிவறைகளில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுளனர். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் பொது கழிவறைகளை பயன்படுத்துவதற்கு 0.50 யூரோக்கள் செலுத்த வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே 500 கழிவறைகளில் திருட்டு சம்பவம் நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெர்லினில் கடந்த புதன்கிழமை அன்று கழிவறைகளில் திருடிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நாணயங்கள், ஸ்குரூடிரைவர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் கழிவறைகளில் திருடி கொண்டிருக்கும் போது சிக்கியுள்ளனர். […]
அமெரிக்காவின் யூனியன் பசிபிக் ரயில் நிறுவனமானது, சரக்கு ரயில்களில் பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் சரக்கு ரயில்களில் திருடப்பட்டிருப்பதாக யூனியன் பசிபிக் என்ற ரயில் நிறுவனம் கூறியிருக்கிறது. சரக்கு ரயில்களில் இருக்கும் கண்டெய்னர்களின் பூட்டை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை திருடிவிட்டு, வெறும் பெட்டிகளை திருடர்கள் தூக்கி வீசுகிறார்கள். அவ்வாறு தூக்கி வீசப்பட்ட காலி பெட்டிகளை சிலர் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மட்டும் வருடத்திற்கு சுமார் 160% திருட்டு அதிகரித்திருக்கிறது […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மோசடிகளை தவிர்ப்பதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க OTP முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.எஸ்பிஐ வாடிக்கையாளர் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அவரது மொபைலுக்கு OTP பாஸ்வோர்ட் வரும். அந்த OTP பாஸ்வோர்டை பதிவிட்ட பிறகே வாடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்தான் எடுக்கிறார் என்பதையும், மோசடிக்காரர்களின் தலையீடு இல்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. OTP என்பது […]
புதுச்சேரியில் ஆடு திருடிய 2 இளைஞர்கள் போலிஸ்ஸில் பிடிபட்டுள்ளனர். புதுசேரி திருவாண்டார்கோயில் பகுதி இந்திரா நகரில் வசித்து வருபவர் சற்குண பாண்டியன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் எப்போதும் ஆடுகளை திருவாண்டார்கோயில் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.இதேபோல் சம்பவத்தன்று மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பியபோது அதனை சரிபார்த்துள்ளார். அப்போது, சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பின ரக ஆடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சற்குணப்பாண்டியன் திருபுவனை காவல்நிலையத்தில் […]
போலீசார் கைது செய்து கொண்டிருந்த குற்றவாளியிடம் இருந்து இருவர் சங்கிலியை பறிக்க முயலும் காட்சியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் போலீசார் ஒருவர் குற்றவாளியை கைது செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த குற்றவாளி தரையில் முகம் குப்புற கவிழ்ந்து கிடக்க போலீசார் அவரின் இரு பக்கங்களிலும் கால்களை வைத்து நின்று கைகளுக்கு விலங்கு மாட்டி விட முயற்சி செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். @lasvegasscoop1 caught […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்த திருடர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது கதவில் எழுதிவைத்த வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் புண்டாக் என்ற பகுதியில் கடந்த 10 நாட்களாக சுமார் பல வீடுகளில் சிறிது திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. திருடர்கள் ஒரே வீட்டில் திருடாமல் ஒரு கும்பலாக இணைந்து ஒரு நாளில் பல வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 12 சனிக்கிழமை இரவு அந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் இருக்கும் காவல் […]
உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாசியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் கோட்டாசியர் ராஜ்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற சுயேச்சை வேட்பாளர் தனசேகரன், தேர்தலில் அதிகப்படியாக பணபட்டுவாடா நடந்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் 90 லட்சத்திற்கு வீடு வாங்கி சுரங்கப்பாதை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 200 கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டியிலிருந்து வெள்ளி பொருள் திருடு போனதாக கூறியிருந்தார். மேலும் அவர் தன் வீட்டின் அருகே ஒரு சுரங்கப் பாதை அமைந்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். […]
உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள். மேலும் இந்து, முஸ்லிம் […]
கோலார் தங்க சுரங்கம் கத்தில் 1000 அடி ஆழம் இறங்கி தங்கம் திருட முயன்ற 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் […]