செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வரும் திவ்யாவும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அர்னவ்வுக்கும் திவ்யாவுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது நடிகை திவ்யாவை அர்னவ் அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க பார்த்ததாக அவர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகை திவ்யா காவல் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். அந்த […]
Tag: திருநங்கை
சீரியல் நடிகை திவ்யாவைநடிகர் ஆர்ணவ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்துவதாக திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து ஆர்ணவ தொடர்ந்து பல பெண்களுடன் பேசுவதாக ஆடியோ லீக் ஆனது. இந்நிலையில் கொடுமைப்படுத்திய வழக்கில், அவரின் கணவர் நடிகர் அர்ணவ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த ப்ரியதர்ஷினி என்ற திருநங்கை, திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், “அர்ணவ் மிகவும் மோசமானவன். என்னிடம் நெருக்கமாக இருந்தான். […]
சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்திருக்கின்றார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர் 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக அளவில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் […]
திருநங்கைகளுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஊடகங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் அவர்கள் அச்சுறுத்துதழில் வாழ்கின்றனர். செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு […]
ஒடிசா மாநிலத்திலுள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். சென்ற வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. எனினும் பஹிர் தன் காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் பஹிரின் காதலை அவரது மனைவி கண்டறிந்தார். இது தொடர்பாக தன் கணவருடன் மனைவி பேசினார். இதையடுத்து அவர்களின் காதலை பஹிரின் மனைவி அங்கீகரித்தார். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதம் […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த லோகேஷ் சென்ற 2018-2019 ஆம் ஆண்டு பொன்னேரியிலுள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடபிரிவில் படித்தார். அப்போது முதல் ஆண்டு படிக்கும்போது லோகேஷ் திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 ஆம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-ம் வருடம் முதல் 2022-ம் ஆண்டுவரை லோகேஷ் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் 2022-2023 […]
திருநங்கைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை மாநில சமூக நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இதன் முதல் கட்டமாக நாக்பூர் நகரில் உள்ள திருநங்கைகளுக்கு 450 சதுர அடியில் 150 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் பிளாட் விலையில் 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகை பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில […]
திருநங்கைகள் போல வேடம் அணிந்து இளம் பெண்களிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி அவரிடம் இருந்து குழந்தைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல்நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி அந்த […]
மிகவும் பிரபலமான, ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸின் ஃபுஷியா அன்னே ரவேனா வென்றுள்ளார். மிஸ் இன்டர்நேஷனல் குயின் என்னும் அழகி போட்டியானது திருநங்கைகளுக்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த இந்த அழகிப்போட்டி இந்த வருடம் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரத்தில் நடந்திருக்கிறது. இறுதி போட்டி, இன்று நடைபெற்றுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஃபுஷியா அன்னே ரவேனா பட்டம் வென்றிருக்கிறார். சுமார் 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் […]
பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருநங்கையின் பெயர் கின்சா. இவருக்கு 23 வயதாகிறது. இவர் நேற்று முன்தினம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்பொழுது அங்கு […]
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கேரள நடிகையும், மாடலுமான செரீன் செலியின் மாத்யூ இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். திருநங்கையான இவர் ஆலப்புழையைச் சேர்ந்தவர். பல நாட்களாக இந்த குடியிருப்பில் பல திருநங்கைகள் உடன் சேர்ந்து வசித்து வருகிறார். நேற்று முதல் இவரை காணாததால் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் வீடியோ அழைப்பு செய்தபடி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் யாருக்கு வீடியோ அழைப்பு செய்தார் என்பது […]
ஆதரவற்றவா்களாக கருதி 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையா்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என சமூகநலத்துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் அறிவித்தாா். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது ” 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நான் அறிந்தவவரை தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணா்வை வீட்டில் வெளிப்படுத்திய […]
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் 3ஆம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச கல்வித் திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் இலவசமாக பயின்று வரும் நிலையில், சென்னை பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். சிண்டிகேட் குழு ஒப்புதல் தந்தவுடன் இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒருசில 3ஆம் பாலினத்தவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரை மாநகராட்சி தேர்தலில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் அதிக ஆர்வத்துடன் இறங்கியிருக்கிறது. முதல் தடவையாக மதுரை மாநகராட்சி தேர்தலில் திருநங்கைகள் 2 பேர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரதிகண்ணம்மா என்ற திருநங்கை லட்சுமிபுரம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் சுய உதவி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் பல்வேறு பெண்கள் திருநங்கைகள் தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும், முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியை சேர்ந்த வசந்தி என்ற திருநங்கையுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது வசந்தி கூறியதாவது, நான் பிபிஎம் படித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். நான் திருநங்கையாக மாறி தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அப்போது, மக்கள் என்னை ஒன்பது, […]
பணம் கொடுக்காத கடைக்காரரை திருநங்கை கட்டையால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் சங்கீதா டிரேடர்ஸ் என்ற மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை கணேஷ் என்பவர் பார்த்து வருகிறார். இங்கு திருநங்கைகள் சிலர் தினசரி வந்து 10, 20 ரூபாய் பணத்தை பெற்றுச்செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கடைக்கு திருநங்கை ஒருவர் வந்து 300 ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க மறுத்த கணேஷ் […]
திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் வின்சிகா என்பவர் வசித்து வந்தார். இவர் திருநங்கை ஆவார். இதனையடுத்து வின்சிகா தன் சக திருநங்கைகளுடன் மாங்குடியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வின்சிகா, ஆண்டிரியா ஆகிய 2 பேரும் திருவாரூர் வந்து உள்ளனர். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் இருவருக்கு இடையில் மனவருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வின்சிகா பாதியிலே […]
விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது. இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் […]
பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது உடைய திருநங்கை ஒருவர் பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறார். ஏனென்றால், மலேசியாவில் ஒரு திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாமயை அவமதிக்கும் செயலாகும். இந்த அழகி மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். இதனால் அவர் தான் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி […]
மதுரையில் உள்ள, கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் புதிதாக திறந்துள்ள ட்ரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிலேயே உணவை சமைத்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா சக திருநங்கைகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை தொடங்கியுள்ளனர். திருநங்கைகளின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற அனைத்து விதமான பணிகளையும் திருநங்கைகளை செய்கின்றனர். […]
உத்தரபிரதேச மாநிலத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா என்பவர் ஒரு திருநங்கை இவர் அதே பகுதியை சேர்ந்த சதாப் என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறிது நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின்னர் சதாப் ஜோதிகாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை […]
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் திருநங்கை எஸ் ஐ என்ற பெருமையை 2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி பெற்றார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா இரண்டாவது எஸ் ஐ என்ற பெருமையைப் பெறுகிறார். திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவன்யா. இவரது பெற்றோர்கள் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது 31 வயதாகும் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணமான இரண்டு மாதங்கள் பிறகு தனது மனைவி ஒரு திருநங்கை என்று தெரிந்ததும் கணவன் மனைவி குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம்,சாஸ்திரி நகரை சேர்ந்த நபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல் இருவரும் திருமணம் முடிந்து நன்றாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து இருக்க முயன்றபோது, மனைவி பல […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தை திருநங்கை என்பதால் அதை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில் குழந்தை ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்து மருத்துவமனையின் டாக்டர் கூறும்போது 3 […]
வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி 3 நிமிட சிறப்பு செய்தி வாசிப்பு நிகழ்ச்சி வழங்கபட்டது. தாஷ்னுவா அனன் ஷிஷிர் (29) என்பவர் சுகாதாரத்தில் இளங்கலை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களில் முயற்சி எடுத்த பிறகு இறுதியாக “boishakhi “என்ற தொலைக்காட்சி அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. தனது […]
செய்தியை வாசித்து முடித்தவுடன் செய்தி வாசிப்பாளர் கதறியழுத சம்பவமும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்துள்ளது. வங்காளதேசத்தில் செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்களன்று சர்வதேச அளவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வங்கமொழி தொலைக்காட்சியில் போய்சாக்கி நியூஸ் சேனலில் தாஷ்னுவா காலையில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆடிஷன் மூலம் தேர்வாகி பல பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான முறையில் செய்தி […]
திருநங்கைகள் என்பவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஒரு தவறான பார்வையோடும் பார்க்க்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து மூன்றாம் பாலினத்தவர் என்ற பட்டியலில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் பல துறைகளில் மெல்ல மெல்ல காலெடுத்து வைத்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக மகளிர் தினத்தன்று தாஷினுவ அனன் ஷிஷிர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய இந்த முன்னேற்றம் திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் […]
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித்திரிந்த திருநங்கைக்கு காவல்துறை ஆய்வாளர் உதவி செய்துள்ளார். மதுரையில் திருநங்கை ஒருவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்க பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் ஆதரவற்று வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வாறு சுற்றி தெரிந்த திருநங்கை காவல்துறை ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் சுற்றி திரிந்த திருநங்கையை கண்ட காவல் ஆய்வாளர் கவிதா சான்றிதழ்களை சரிபார்த்து மருத்துவராக பணியை தொடர […]
கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் […]
கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது […]
புதிதாக பிரியாணி கடை திறந்த திருநங்கை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது போல் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா இவர் பல வருடங்களாக பிரியாணி விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் ஆர்எஸ் புரத்தில் புதிதாக ட்ரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற கடையை ஆரம்பித்தார். அதோடு அதில் 10 திருநங்கைகளுக்கு வேலையும் கொடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு மக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருந்தது. […]
மரியாதையுடன் வாழ ஆசைப்படும் எங்களை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடவில்லை என்று திருநங்கை ஒருவர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த சஜினா என்ற திருநங்கை பிரியாணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் நாலு திருநங்கைகளுக்கும் இரண்டு பெண்களுக்கும் வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் பிரியாணி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால் தற்போது ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றது. அதற்கு காரணம் அக்கம்பக்கத்தில் […]
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் திருநங்கை சம்யுக்தா பிறந்த நாளான நேற்று அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். […]
கொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால் பரவும் டெங்கு நோய்களைத் தடுப்பது குறித்து ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.