மும்பையில் ஐந்தாயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மும்பையில் ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காத காரணத்தினால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் யாசகம் பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெறும் யாசகத்தில் இருந்து சிறிய தொகையை பொதுமக்கள் உடைய பசியை போக்க நன்கொடையாக கொடுக்கின்றனர். இந்த உணவகத்தில் காலை உணவானது வெறும் ஒரு ரூபாய்க்கும் மதிய உணவானது வெறும் பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இந்த உணவகம் மும்பை அருகில் உள்ள கல்யாண் […]
Tag: திருநங்கைகள்
வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை திருநங்கைகள் பாலில் உறவுக்கு அழைத்து பின்னர் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் […]
திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் […]
திருநங்கை உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என திருநங்கையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா, தோழி அமைப்பு நிர்வாகி சுதா,கேத்ரின், இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம், மோனிகா போன்றோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதன்பின் டுவிட்டரில் […]
தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் திருநங்கைகளுக்கு தேநீர் விருந்து அளித்துள்ளார். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் முனைவர் ரியா தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேத்ரினா இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம் மற்றும் மோனிகா போன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் திருநங்கைகளுக்கு தேனீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்துள்ளார். இதுபற்றி முதல்வர் […]
பிரிட்டனில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். பிரிட்டனில் நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் உலகம் முழுக்க உள்ள LGBT-களது உரிமைகளை முன்னேற்ற திட்டமிடப்பட்டிருந்த முதன்மை மாநாட்டை கைவிடப் போவதாக கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை நான் சரி என்று நினைக்கவில்லை. இது சர்ச்சையான விஷயமாக இருக்கும். இந்த நடைமுறை எனக்கு வித்தியாசமாக தெரிகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் […]
ஊர்க்காவல் படைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரம்பலூர் ஊர்க்காவல் படைக்கு 2 மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கைகள்) தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே விருப்பம் இருப்பவர்கள் பெரம்பலூர் கடைவீதியிலுள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு இன்று (மார்ச்19) மற்றும் வருகிற 29-ஆம் தேதி போன்ற நாட்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுப்பதற்காக புதிய நடத்தை விதிகள் தமிழக காவல்துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நடத்தை விதி 24 சி என்ற பிரிவு தமிழக காவல்துறையில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதியின் கீழ் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் திருநங்கைகளை விசாரணை மேற்கொள்ளலாம். அதேபோல் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் […]
கோவை மாவட்ட ( ஊரக ) காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் சுஜித்ரா பன்னீர்செல்வம் (27) , எஸ்.மஞ்சு (29), பி.வருணஸ்ரீ (21) ஆகிய மூன்று திருநங்கைகள் ஊர்க்காவல் படை பிரிவில் தேர்வாகினர். இதையடுத்து பயிற்சி 45 நாட்களாக நடைபெற்ற நிலையில் இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை ( பிப்.12 ) அன்று பணியில் சேர்ந்தனர் […]
கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கைகள் 2 பேர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதை உறவினர்கள், குடும்பத்தினருக்கு கூறியதற்கு அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் 122-ல் தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கும் திருநங்கை ஜெயதேவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநங்கை கங்காவுக்கு வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த முன்னாள் […]
சேலம் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் அத்துமீறும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கைகளின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் அனைவரையும் வரவழைத்து காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதாவது திருநங்கைகளுக்கு காவல்துறை ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் நீங்கள் […]
கடந்த சனிக்கிழமை இரவு திரிபுராவில் 4 திருநங்கைகள் ஹோட்டல் விருந்து ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை இடைமறித்து பணம் பறித்ததாக கூறி விசாரணை நடத்துவதற்காக அகர்தலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் சேர்ந்து அவர்களின் பாலினத்தை அறிவதற்காக திருநங்கைகளின் ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கிராஸ் டிரஸ் அணிய மாட்டோம் எனவும் மீறி அணிந்தால் எங்களை […]
திருநங்கைகளுக்கு சிறைகளில் தனிஅறை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறைச்சாலைகளில் திருநங்கைகளுகளுக்கென அமைக்கப்படும் அறைகள் மூலம் அவர்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படக் கூடாது எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காகவே தனி அறைகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது .அவர்களுக்கென தங்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை ஆகியவற்றை உறுதிப்படுத்த மாநில அரசுகளைக் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் சிறைச்சாலைகளில் அவர்கள் சேர்க்கை. […]
ஆட்சியரின் உத்தரவின்படி உத்தமபாளையத்தை சேர்ந்த 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையத்தில் வைத்து 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. […]
திருவல்லிக்கேணி தொகுதியில் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சியானது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதியின் தாயார் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் சாதனங்களை வழங்கியபின்னர் கிருத்திகா உதயநிதி பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்பொழுது பத்திரிகையாளர்களில் ஒருவர் கிருத்திகா உதயநிதியிடம், “திருநங்கைகளுக்கும் 50% அரசியல் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, “அரசியலில் நான் […]
கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த திருநங்கைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் Greens கட்சியை வேட்பாளர்களான Tessa Ganserer, Nyke Slawik என்ற இரு திருநங்கைகளும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் எங்கள் இருவரின் வெற்றி Greens கட்சிக்கு மட்டுமின்றி உலகில் உள்ள queer சமுதாயத்திற்கும் rans-emancipatory அமைப்பிற்கும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் என்று 42 வயதான Tessa Ganserer தெரிவித்துள்ளார். மேலும் […]
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறை வசதியை திருநங்கைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான இடத்தை கொடுத்து திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் பாகுபாடுகளை களையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி கழிப்பறை தவிர்த்து தங்களுடைய பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதி […]
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]
நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் கொடுக்கப்படும் நிதியுதவி, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளும் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று கேரள உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர் அனில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாடகை […]
தமிழகத்தில் திருநங்கை என்பதற்கு இனி மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்றும், திருநங்கை என்பதற்கான சுய அறிவிப்பு போதும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கை அல்லது திருநம்பி என்பதற்கு அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்று அதை மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்து அடையாள அட்டை பெற வேண்டும். இதில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை திருநங்கைகள் சந்தித்து வந்தனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திருநங்கைகள் […]
கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த வித இன்னல்களையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் […]
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது, அதில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு சதவிகித […]
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை கொடுக்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் தாங்கி தொடங்கி வைத்து 19 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கியுள்ளார். இதனையடுத்து திருநங்கைகள் அனைவரும் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் உரிமை அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இரண்டு தவணைகளாக அந்த தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 14 வகையான மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை […]
மும்பையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாகியுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இன பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தெரிய வந்த போதிலும் உண்மையில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு பள்ளிக்கூடம் […]
கொரோனா நிவாரண தொகையாக 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் காசோலையை அமைச்சர் வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் அரவிந்த் தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவி தொகையாக வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபோது […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதில் திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக 1500 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா காலத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து உணவு மற்றும் மருந்து உள்ளிட்டவை இன்றி […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற […]
கொரோனா நிவாரண பணிகளுக்கு சென்னையை சேர்ந்த திருநங்கைகள் ரூபாய் 50,000 தொகையை நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண […]
நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே […]
வேலூரில் கொரோனா அடியோடு போக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வரும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் நடைபெற இருந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக வேலூரில் பழையடவுன் பஜனைகோவிலில் வைத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் […]
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திருநங்கைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திருநங்கைகள் இருதரப்பினராக வந்தனர். அப்போழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த திருநங்கைகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
திருநங்கைகள் குறித்து இதுவரை வெளிவராத புராணக்கதைகள் மற்றும் உண்மைகள் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒருவர் நாம் செய்யும் செயல் மற்றும் அவர் நடத்தையை வைத்து இவர்கள் இப்படி தான் என்று நம்மால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறிப்பாக கிராமத்தில் இருக்கும் மக்கள் மற்றவர்களை விட எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். கடவுளே அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சிவபெருமானும் பார்வதியும் இணைந்து ஒரு உருவமாக தான் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். இன்று திருநங்கைகளாக […]
கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]
திருச்சியில் இரவு நேரத்தில் 2 திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர் நகைகள் மற்றும் பணத்தை பறி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அருகேயுள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ரகுமான். இவர் கட்டிட கலை நிபுணரான பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை தொடர்பாக சத்தியமங்கலம் சென்று அங்கு பணிகளை முடித்து விட்டு நாமக்கல் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகள் அவரது காரை வழிமறித்து ரகுமானிடம், இரவு […]
திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]