திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சங்னாங்குளம் பகுதியில் பகுதியில் காளிச்சந்திரன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து அம்மன் போன்று வேடம் அணிந்து செல்கிறார். தீவிர அம்மன் பக்தரான காளி சந்திரனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தொண்டையில் புற்றுநோய் வந்துள்ளது. இந்த புற்று நோயால் பெரும் சிரமத்திற்கு ஆளான காளி சந்திரனை […]
Tag: திருநெல்வேலி மாவட்டம்
திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் […]
மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தங்களுடைய படகுகளை கூட நிறுத்த முடியாமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கடற்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயமும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது. […]
பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]
மாணவியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த மே மாதம் அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கல்வாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்க கூடாது என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாங்கள் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே டிரான்சிட்பாட்ஸ்க்கு […]
தாக்குதலில் காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 லட்ச ரூபாய் காசோலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் […]
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வள்ளியூர் நான்கு வழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென செந்தில் முருகன் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் […]
கட்டிட காண்டிராக்டரை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 12 – ஆம் தேதியன்று கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் தாக்கி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர். அதன்பிறகு வாகைக்குளம் பகுதியில் வசிக்கும் நல்லமுத்து, சங்கிலிபூதத்தார், குரு சச்சின் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
ஆளில்லா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் நல்லையா – செல்லத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 2½ பவுன் தங்க நகை மற்றும் 10000 ரூபாய் பணம் போன்றவை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]
கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் வெங்கடாசலபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மர்மநபர்கள் 2 பேர் புகுந்து உண்டியலிருந்து 900 ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். அந்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தெற்குப்பட்டி பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரின் நண்பர் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது காவல்துறையினருக்கு […]
கல் குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவி கிணறு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல் குவாரியில் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மணிகண்டன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்த அருகில் உள்ள சக தொழிலாளர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து […]
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து எல்.பி.ஜி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் காலகட்டத்திலும் கேஸ் சிலிண்டர்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து முன் களப் பணியாளர்களுக்கு […]
சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜுன் 28 – ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் நாங்குநேரி பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். […]
ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவிகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் தற்போது அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு தலையணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேங்காய் உருளி மற்றும் சிவபுரம் அருவிகளில் […]
ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் பகுதியில் இருக்கும் சிவன் கோவில் தெருவில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் நண்பரான ஆறுமுகம் இருவரும் பெயிண்டிங் வேலைக்காக பாளயங்கோட்டை பகுதியில் இருக்கும் மகிழ்ச்சி நகருக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலை முடித்து இருவரும் நீண்ட நேரமாகியும் […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ – மாணவியர்களுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் ஜுன் 21 – ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகாசனங்கள் செய்தால் மனதளவிலும், உடல்நிலையிலும் ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் யோகாசன சங்கத்தின் தலைவரான எஸ். […]
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கில்டன்பிரபு – ஆரோக்கியபிரதீபா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கிய பிரதீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் பிரதீபாவை மீட்டு அரசு […]
நெல்லையில் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிர்புறம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா மையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதனையடுத்து மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
நெல்லையில் முன்பகை காரணமாக இளைஞரை வெட்டிய சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முல்லை நகரில் பால முகேஷ்(19) ன்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பலமுகேஷ் அவரது நண்பர்களுடன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பலமுகேஷை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லைசந்திப்புக்கு அருகே உள்ள மோகனூர் வடக்கு தெருவில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு குற்றங்களில் தொடர்பு உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நகை தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள தங்கம் திருமண மண்டபம் 2வது தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் நேற்று திசையன்விளையில் உள்ள அற்புத விநாயகர் சந்திப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி […]
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள பெரும்பத்தை பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் தங்கசாந்தினி(21) களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தினிக்கும் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரெனிஸ் முத்துக்குமார்(25) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தியாகராஜ நகரில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஞான வின்சிகா(26). இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் […]
திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து […]
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அடுத்துள்ள திருப்புடைமருதூர் பகுதியில் சுந்தர் ராஜ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது உறவினருமான முத்துராமன் மற்றும் பேச்சு குட்டியுடன் நேற்று முன்தினம் வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொட்டாரகுறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(30) என்பவரும் அந்த கடையில் இருந்துள்ளார். அப்போது சங்கர் மற்றும் சுந்தர் ராஜ்க்கும் இடையில் […]
நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு […]
நெல்லையில் நேற்று உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்துள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லையில் ரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இந்த முகாம் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ரத்த தானம் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு […]
நெல்லை மாவட்டத்தில் முட்புதருக்குள் 2,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் காணப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்துள்ள வைராவிகுளம் எம்ஜிஆர் நகர் பகுதியில் செடிகளுக்கு நடுவே 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அம்பை சிவில் சப்ளை தாசில்தார் அருண் பிரபாகரனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அலுவலர்கள் மீனாட்சிசுந்தரம், அழகு முத்துமாரியம்மன், கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாண்டி ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது முட்புதருக்குள் […]
நெல்லை கூடங்குளம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள சங்கரன்புதூரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வித்யாவிற்கு 2 மகள்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரும், வித்யாவும் ஒரே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி […]
களக்காடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டரான கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் வடமலைசமுத்திரம், சம்மன்குளம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருக்கும் மரத்தடியில் முத்துசாமி, சுப்பிரமணியன், அருணாச்சலம், வெங்கடேஷ் மற்றும் முத்துராமன் ஆகிய 5 […]
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள டாணாவில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரகுபதி பாண்டியன், சுதாகர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா கவச உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், அதை தினந்தோறும் உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் பல கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் அழகிய நம்பி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான நாகராஜன் சென்னையில் தங்கி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அழகியநம்பியின் மனைவி 8 வருடங்கள் முன்பு இறந்து விட்ட காரணத்தினால் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் இவர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கோவிலுக்கு நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை உடைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் உவரி அடுத்துள்ள குட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அம்மனின் கண்மலர் கீழே கிடந்துள்ளது. மேலும் அம்மன் சிலையில் பல இடங்களில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அடுத்துள்ள அழகனாபுரத்தை சுமித்ரா சுதா(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட காரணத்தினால் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தினால் காற்று வரவில்லை என இரவு பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம […]
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நெல்லை-டவுன் செல்லும் சாலையில் கன்னடியன் கால்வாய் பாலம் உள்ளது. அதன் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் எதிர்புறம் பல ஆண்டுகள் பழமையான மருதமரம் இருந்துள்ளது. இந்நிலையில் தீடிரென நேற்று மரத்தின் கிளை முறிந்து எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆனால் மரம் கிளை முறிந்து விழுந்ததால் சாலையில் போக்குவரத்து […]
நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர் பணியில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கொடிக்கை விடுத்துள்ளனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட […]
நெல்லையில் சொந்த தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிவந்திபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிவந்திப்பட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் வைத்து 3 பேர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி […]
நெல்லையில் கண்டியப்பேரி பகுதியில் அமையவுள்ள இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நெல்லை கண்டியப்பேரி பகுதியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 5329.54 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் மருத்துவமனை ஜப்பான் நிதியுதவியுடன் 28 கோடியே 90 லட்சம் மதிப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டுமான பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகராஜன், […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ள பறையன்குளத்தில் தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக அப்பகுதி இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் தோட்டை சுற்றிப்பார்த்து கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அந்த தோட்டத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை […]
திருநெல்வேலி மாவட்டத்தில் இடதகராறு காரணமாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் லக்ஷ்மிநாராயணன்(41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகையா பாண்டியன்(27) என்பவருக்கும் இடையில் இடதகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து முருகையா பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களான உலகநாதன்(36), ரூபன்(32) ஆகியோருடன் இணைந்து லக்ஷ்மிநாராயணனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லக்ஷ்மிநாராயணனை அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து. இதனையடுத்து ஒர்க்ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் […]
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் செல்லத்துரை(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை நெல்லை அரசு […]
நெல்லையில் பஞ்சாயத்து பெண் ஊழியரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள தரகன்காட்டில் அழகுராஜா மற்றும் அவருடைய மனைவி பாலசரஸ்வதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலசரஸ்வதி திசையன்விளை பஞ்சாயத்து ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வமருதூர் பவுண்ட் தெருவில் வைத்து பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 2 நபர்கள் சரஸ்வதியின் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
திருநெல்வேலியில் கொரோனா ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 22 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள பொட்டல் பகுதியில் வசித்துவந்த அமிர்தராஜ்(56) கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமிர்தராஜ் படப்பகுறிச்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்த அமிர்தராஜ் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
திருநெல்வேலியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளையும், 7 தமிழர்களையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தொகுதி தலைவர் […]
நெல்லையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று நெல்லை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், பணிபுரியும் செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளார். அப்போது எம்.பி ஞானதிரவியம், இராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, திமுக பிரமுகர்கள் உட்பட பலர் […]