நெல்லை பாளையம்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள வாகை குளத்தில் முத்து மனோ(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய மனோவை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி மனோவிற்கும் சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கைதிகள் மனோவை அடித்து கொலை செய்துள்ளனர். […]
Tag: திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் ஆபாச வார்த்தையில் பேசியதால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் உள்ள மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மானுரில் ஒரு தெருவில் சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வருவதை கண்டு தப்பியோடியதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இளைஞரின் பெற்றோருக்கும் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள இடையன்குடியில் ராஜேஷ்(22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிறுமி தற்போது கர்ப்பம் அடைந்துள்ளதால் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து […]
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மழைநீர் வழித்தடங்களிலிருக்கும் ஆக்கிரமிப்பை உடனே அகற்றுவதற்கு அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகவிருப்பதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தினுடைய அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் விஷ்ணு ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, இயற்கை பேரிடர்கள் மற்றும் மழை போன்ற காலகட்டங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு சமுதாயக்கூடம், பள்ளி போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் நிவாரண உதவி மற்றும் மீட்பு பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற […]
நெல்லையிலிருக்கும் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்காக அமலைச் செடிகள் அகற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக கன்னடியன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்கு பொதுப்பணித் துறையின் சார்பாக பொக்லைன் எந்திரத்தின் மூலம் அமலைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான முக்கிய அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள் புரத்தில் லாரி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த பாஸ்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மன உளைச்சலடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]
திருநெல்வேலியில் கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் அமைந்திருக்கும் நதியுண்ணி கால்வாயின் மூலமாக சுமார் 2000 ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த கால்வாயினுடைய கிளை கால்வாயின் மூலம் தண்ணீர் ஜமீன்மடையின் வழியாக ஊர்க்காடு மற்றும் சாட்டு பத்து வரையில் செல்லும். இந்நிலையில் இந்த கால்வாயில் குப்பைகளும், அமலைச் செடிகளும் தேங்கிக் கிடந்தது. இதனை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ தன்னுடைய சொந்த செலவின் மூலம் பொக்லைன் எந்திரத்தில் வாயிலாக தூர்வாரும் நடவடிக்கையை […]
நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஊராடங்கால் வாழ்வாதாரமிழந்த கோவிலினுடைய பூசாரிகள், பள்ளிவாசல்களில் வாங்கு கூறுபவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தில் பணிபுரிபவர்கள் என மொத்தமாக 100 நபர்களுக்கு மாவட்ட தலைவரான சங்கரபாண்டியன் தலைமையில் நிவாரண பொருள்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரியான தனுஷ்கோடி ஆதித்தன் சுமார் 100 நபர்களுக்கு பலசரக்கு, காய்கறிகள் மற்றும் அரிசி போன்றவற்றை வழங்கினார். மேலும் இதில் கட்சி […]
திருநெல்வேலியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த இசக்கியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேப்பங்குளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இவரது மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர்கள் மத்திய அரசாங்கத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தத்திற்கான சட்டத்தை நிராகரிக்க கோரி திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத்தினுடைய பொது செயலாளரான களந்தை மீராசா என்பவர் தலைமை தாங்கினார். மேலும் இதில் பங்கேற்ற நிர்வாகிகள் முக கவசத்தை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் உள்ளார்கள். அதன்பின் இவர்கள் மத்திய அரசாங்கத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தியது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 84 நிரந்தர மையங்களும், 32 தற்காலிக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்திலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் […]
திருநெல்வேலியில் சோதனைச்சாவடியில் பணி செய்து வரும் காவல்துறையினருக்கு கொரோனாவை தடுப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 30 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு சுழற்சிமுறையில் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். அவ்வாறு பணியாற்றும் காவல் துறையினருக்கு பாளையங்கோட்டை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பாக சானிடைசர், முக கவசம், கொசு ஒழிக்கும் மட்டை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி நெல்லை […]
நெல்லையில் சமூக சேவகர் முக கவசம் விற்ற 14,000 ரூபாயை கொரோனாவிற்கான நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சமூக சேவகரான பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபுராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு ரூபாய் வழங்கும் எண்ணத்தோடு, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி முக கவசத்தையும் விற்றுள்ளார். அதன்மூலம் 14,000 ரூபாயை நிதியாக திரட்டினார். அந்த நிதியை மாவட்ட […]
நெல்லையில் காவல்துறையினர் டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் வாகன சோதனையும் நடத்துகின்றனர். இதனையடுத்து கங்கைகொண்டானில் இருக்கும் துறையூர் காவல்துறையினர் டிரோன் மூலம் அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லையில் அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடை இல்லாததால் முட்டை சாப்பிடுவதற்கு மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன், கோழி இறைச்சி, ஆடு, கருவாடு போன்ற அசைவ கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அசைவப் பிரியர்கள் தற்போது முட்டையின் மீது தங்களுடைய ஆர்வத்தை காட்டுகின்றனர். இந்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் முட்டை விற்பனை மிக அதிகமாக உள்ளது. அதாவது நடமாடும் கடையின் உரிமையாளர்கள் மொத்த வியாபாரிகளிடம், 1 […]
நெல்லையில் மளிகை பொருட்கள் 110 வாகனங்களின் மூலம் விற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மளிகைப் பொருட்களை வாகனங்களின் மூலம் தெருத்தெருவாக விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாநகராட்சியினுடைய மண்டல அதிகாரிகள் அங்கிருக்கும் 55 வார்டுகளுக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதாவது ஒவ்வொரு வார்டிற்கும் மளிகை பொருட்களை ஏற்றிச் செல்ல 2 வாகனங்கள் […]
திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு 36,00,000 மதிப்பீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பல மாவட்டங்களிலிருந்து வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி தேவையான அளவு இல்லை என்கின்ற குறைபாடு இருந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் படித்த முன்னாள் மாணவர்கள், 10 லிட்டர் அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஐந்தும், 5 லிட்டர் அளவிலான […]
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான அருண் ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெற்கு மெயின் சாலையில் வாலிபர் சந்தேகத்திற்கிடமாக பையுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதற்குள் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் ஊற்றடியில் வசித்துவந்த முருகன் என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக […]
நெல்லையில் விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 70 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 70 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக கவசத்தை அணியாத 272 நபர்களுக்கும், சமூக இடைவெளியை […]
திருநெல்வேலியில் பெண் கருப்பு பூஞ்சை நோயினால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் 40 வயதாகின்ற பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக கொரோனாவிலிருந்து குணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சையிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்தப் பெண்ணிற்கு மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மானூர் கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்றுள்ளனர். அவர்களை விசாரணை செய்ததில் பைக்கில் வைத்து சாராயம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அந்த 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் மடத்தூர் காட்டுப் […]
நெல்லையில் விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 185 நபர்களுக்கு கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனாவை விரட்டியடிப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவையின்றி சில நபர்கள் வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியினுடைய காவல்துறை அதிகாரிகள் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரியும் நபர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்வதற்கு முடிவு எடுத்தனர். அதன்படி 7 சோதனைச் சாவடிகளிலும், வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகே […]
நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவின் 2 ஆவது அலையை தடுக்க பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 84 நிரந்தர மையங்களும், 25 தற்காலிக மையங்களும், கூடுதலாக 7 முகாம்களும் தடுப்பூசி போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதாவது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 11 மணி வரையில் வந்த நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் வந்த […]
திருநெல்வேலியில் விலங்குகளுக்கு காவல்துறை துணை கமிஷனரான சீனிவாசன் உணவு வழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் உணவின்றி அவதிப்படும் விலங்குகளுக்கு சில தன்னார்வலர்கள் உணவு வழங்குகின்றனர். அதாவது நெல்லை மாநகர பகுதிகளிலிருக்கும் சுமார் 400 க்கும் மேலான நாய் உள்ளிட்ட பல விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்களை ஊக்குவிக்கவும், ஊரடங்கு நேரத்தில் உணவின்றி அவதிப்படும் விலங்குகளுக்கு மக்கள் தங்களால் முடிந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், நெல்லை சந்திப்பில் தன்னார்வலர்களுடன் இணைந்து […]
நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கும் போது அவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலவிதமான சிகிச்சைகளை அளிப்பதற்கு புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு மருத்துவமனையினுடைய கூட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 100 க்கும் மேலான டாக்டர்கள் […]
நெல்லையில் மாணவியை கடத்தி சென்ற கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவியினுடைய தந்தை புதிதாக வீட்டை கட்டுகிறார். அந்த வீட்டிற்கு புஷ்பராஜ் என்ற வாலிபர் கொத்தனார் வேலை செய்வதற்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியினுடைய தாய் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கொத்தனார் பணிபுரிய வந்த புஷ்பராஜ் தன்னுடைய மகளை ஆசை வார்த்தைகளை […]
திருநெல்வேலியில் தங்க பத்திரத்திற்கான விற்பனை தபால் நிலையங்களில் தொடங்கியுள்ளது. இந்திய அரசாங்கம் தங்க பத்திரத்திற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடுகிறது. அதற்கான விற்பனை நேற்று முதல் ஆரம்பமாகி வருகின்ற 4 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் ஒரு நிதியாண்டிற்கு தனிநபர் குறைந்தபட்சமாக 1 கிராம் அளவிலிருந்து அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். அதுமட்டுமின்றி முதலீடு செய்யும் தொகைக்கு 2.5 சதவீத வட்டி மற்றும் 8 வருடங்கள் கழித்து முடிவடையும் போது அன்று தங்கம் […]
நெல்லையில் சிறுத்தை ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே இருக்கும் மேல ஏர்மால்புரத்தில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து குதறியது. இதனால் ஆடு கதறி கத்தும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதன்பின் அவர்கள் வருவதை கண்ட சிறுத்தை உஷாராகி ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. இதோடு இச்சம்பவம் தொடர்ந்து […]
திருநெல்வேலியில் பணியாற்றிய உதவி காவல்துறை கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் டவுனில் காவல்துறை உதவி கமிஷனராக சதீஷ் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரை கோயம்புத்தூர் மாநகரத்தின் மத்திய பகுதிக்கான சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய இந்த இடம் மாற்றத்திற்கான உத்தரவை தமிழகத்தினுடைய டி.ஜி.பியான திரிபாதி பிறப்பித்தார்.
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மோசாக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு மோசாக் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்காளான மாணவி விஷம் குடித்த மயங்கிக் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் வள்ளியூர் […]
நெல்லையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதற்கு முயன்ற 3 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையிலிருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீட்டில் வைத்து சாராயத்தை காய்ச்சுவதாக டவுன் உதவி காவல்துறை கமிஷனரான சதீஷ்குமாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கமிஷனரின் உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வீட்டில் இருந்தவர்கள் காவல்துறையினர் வருவதை பார்த்தவுடன் தப்பி ஓடினர். இதனையடுத்து அந்த வீட்டில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை […]
நெல்லையில் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தருவையில் டிரைவரான முரளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றுள்ளார். அதன்பின் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளியை போக்சோ சட்டத்தில் […]
திருநெல்வேலியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் 5 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவருடைய தம்பியான ஆவுடையப்பன் என்பவருக்குமிடையே இடப்பிரச்சனை காரணத்தால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் இசக்கி, அவருடைய மகனான திருப்பதி மற்றும் ஆவுடையப்பன், அவருடைய மகன்களான பூல் பாண்டி, குமார் ஆகியோர் ஒருவரையொருவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து […]
நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த நபர்களிடமிருந்து 34 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் முழு ஊரடங்கையும் அமலுக்கு வந்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் ஊரடங்கு விதியை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார். அதன்படி ஒரே நாளில் விதியை […]
நெல்லையில் 480 டன் அளவிலான காய்கறிகள் நடமாடும் வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காய்கறிகளை வாகனங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. இதையொட்டி திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக 339 வாகனங்கள் காய்கறி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. […]
நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி பைக்கில் சுற்றி திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே ஊரடங்கு விதியை மீறி அத்தியாவசிய தேவையின்றி பைக்கில் சுற்றித் திரிந்த ஆதி நாராயணன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் […]
திருநெல்வேலியில் போராட்டம் நடத்திய 6 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பெரியகுளத்தில் முத்துமனோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விசாரணை கைதியாக பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் இருந்தப்போது படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், இதற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலை சம்பவத்திற்கான வழக்குப்பதிவு செய்து, அவர்களை பதவி நீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்து பரப்பாடியில் பொதுமக்கள் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பழனி, முத்துப்பாண்டி, […]
நெல்லையில் காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையைத் தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் காவல்துறையினர் ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்களையும், மோட்டார் சைக்கிளில் சுற்றுபவர்களையும் டிரோன் […]
நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 42 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் உத்தரவின்படி ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்களின் மீது வழக்கு பதிவு மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி மாவட்டம் முழுவதுமாக ஒரே நாளில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததால் […]
நெல்லையில் ஊரடங்கு விதியை மீறியதாக 43 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் ஆணையின்படி ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி ஒரே நாளில் ஊரடங்கு […]
நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 306 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதத்தை விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினுடைய தாக்கம் மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது முழு ஊரடங்கையும் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், முகக் கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருநெல்வேலியில் பொது […]
திருநெல்வேலியில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருக்கும் காவல்துறையினர் பஜார் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஊரடங்கு விதியை மீறி தேவையின்றி பைக்கில் சுற்றித்திரிந்த அதே பகுதியில் வசித்து வரும் சிவபிரதீப் என்பவரையும், காமராஜ் நகரில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பளத்தை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல் துறை தனிப்பிரிவில் சங்கர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தன்னுடைய ஒரு மாதத்திற்கான சம்பள பணமான 60,000 ரூபாயை முதலமைச்சரின் கொரோனாவிற்கான நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த நிவாரண நிதிக்கான சம்மத கடிதத்தை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணனிடம் வழங்கினார். அப்போது காவல்துறையினுடைய முக்கிய அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர்.
திருநெல்வேலியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் சுந்தரி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 4 வருடங்களாக வாத நோயால் அவதிப் பட்டிருக்கிறார். இதனால் சுந்தரிக்கு நடக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து மன அழுத்தத்திலிருந்த சுந்தரி வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் களக்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை […]
நெல்லையில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தில் முத்துமணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையினுள் விசாரணை கைதியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குப்பதிவு மேற்கொண்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டியும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டம் நாங்குநேரியில் 34 காவது நாளாக பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாயத்தினுடைய நல […]
நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராஜபுரத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தல், வழிப்பறி, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அருண் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு மட்டுமல்லாமல் கடலூரிலிருக்கும் மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் அருண்குமாரை குண்டாசில் கைது செய்ய மாவட்டத்தினுடைய கலெக்டரான விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர் அவரை குண்டாஸில் கைது […]
நெல்லையில் லோடு ஆட்டோ-கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 60 வயதாகின்ற முத்தையா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டிலேயே குளிர்பானங்களை தயாரித்து அதனை விற்பனை செய்வதற்காக லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கீழநத்தம் நான்கு வழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் சற்றும் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தையாவையும் லோடு ஆட்டோ டிரைவரையும் அக்கம்பக்கத்தினர் […]
நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 350 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் தற்போது முழு ஊரங்கையும் தமிழக அரசு அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடத்தில் […]
நெல்லையில் ஊரடங்கு விதியை மீறிய 47 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் ஆணையின்படி ஊரடங்கு விதியை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். அதன்படி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஊரடங்கு விதியை மீறிய 45 […]
நெல்லையில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் டவுன், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், பேட்டை, மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி […]