Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த எலெக்ட்ரிசியன்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசேகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் இரவில் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குணசேகரன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து குணசேகரனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் கட்டாயம் போடணும்” சந்தைக்கு வந்த நபர்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

மேலப்பாளையம் சந்தையில் முகக்கவசம் அணியாத 4 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. அங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் 4 பேர் வந்திருந்தனர். இதனைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நபர்…. தட்டிகேட்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் செல்லத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் செல்லத்தாயின் தங்கை தனியாக வீட்டில் இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் மணிபாரதி என்பவர் செல்லத்தாய் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செல்லத்தாயை மணிபாரதி அவதூறாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்லத்தாய் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இறந்து 2 நாட்கள் ஆயிற்று…. மீனவர்களின் தகவல்…. கடற்கரையில் புதைத்த வனத்துறையினர்….!!

இறந்த நிலையில் 2 கடல் ஆமைகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதிக்கு அருகில் உள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 30 கிலோ எடையுள்ள 2 கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து கடலோர காவல்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆமைகள் அழுகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக அக்கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வேட்பாளர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் சமுத்திர பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர் யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை சமுத்திர பாண்டி தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணனின் மனைவியை சமுத்திர பாண்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் சங்கனேரி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் சப்ளை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சங்கனேரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சாரம் செய்பவர்களுக்கு 3 பேர் மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்கள்….!!

குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலத்தாழையுத்து பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6-ஆம் வகுப்பு படித்து வந்த சக்தி என்ற மகன் இருந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் நண்பர்களான கார்த்திக், சக்தி ஆகிய 2 பேரும் காலையில் அப்பகுதியிலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதியதில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது ரசீது என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் முகமது ரசீது நெல்லையிலிருந்து கடையநல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குதிரை ஒன்று சாலையின் குறுக்கே வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே குதிரை பரிதாபமாக உயிரிழந்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை…. சுற்றி திரியும் மிளா…. புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி அமைந்துள்ளது. தற்போது குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கும்போது ஒற்றை மிளா ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் தேயிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் மீது வழக்கு பதிவு…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தந்தை மகனை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அவ்வூரில் நடந்த கொடை விழாவில் சொக்கலிங்கத்தின் மகனான சந்தனகுமார் என்பவருக்கும் அதே ஊரில் வசிக்கும் நெல்லையப்பனின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 26 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 749 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகறாறு…. கூலித் தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை….!!

தகராறில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பரமசிவன் மீண்டும் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து குமார் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் மேலப்பாளையம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் 2 பேரையும் குண்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. சூப்பிரண்டு உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 3\4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையின் மேற்குப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து வெள்ளைதுரையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில்  நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பிளஸ் 1 மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கவுரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாசங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் உமாசங்கர் இரவில் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த கவுரிசங்கரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பெருமாள்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் மன்னர் ராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மன்னர் ராஜாவை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய வேட்பாளர்…. அதிகாரிகள் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெண் வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐயம்மாள் முத்து நகர் பகுதியில் தேர்தல் விதிகள் மற்றும் தடுப்பு விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் களக்காடு ஒன்றிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவனாபேரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு கணேசன் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது பரமசிவன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் பாளையங்கோட்டை தாலுகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொது நிவாரண நிதியிலிருந்து…. வழங்கப்பட்ட நிதியுதவி…. பெற்றுக்கொண்ட காவலரின் குடும்பத்தினர்….!!

பணியின்போது இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுடலைமுத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருக்கும் போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக ஆறுமுகம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பொது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. அரிவாளுடன் மிரட்டிய 2 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை அரிவாளுடன் மிரட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்லவன் கோட்டை பகுதியில் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளுக்குரிய உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுப்ப முடியும் என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளுக்குரிய எந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் சடலத்தை உடனடியாக கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரகுமத் நகர் பகுதியில் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு முன்பு காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திறப்பு விழா…. திறந்து வைத்த எம்.எல்.ஏ…. கலந்து கொண்ட நிர்வாகிகள்….!!

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடல் டிங்கரிங் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் மதியழகி வரவேற்றார். இதனையடுத்து இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. பாதுகாப்பு அலுவலர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை அவரது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 நாட்களுக்கு ஒருமுறை தான் வருது” சிரமப்படும் பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரி….!!

நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதலியார்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் அவர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவான அளவே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையாளர் பெற்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்…. வசமாக சிக்கிய தூய்மை பணியாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நர்சிங் மாணவியிடம் செல்போன் திருடிய பெண் தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மகள் உள்ளார். இவன் நெல்லை அரசு மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் மோனிகா மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை ஒரு மேஜையில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு மோனிகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பெண் வியாபாரி…. அவதூறாக பேசிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

பெண் வியாபாரியை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பால் முத்தையா என்பவர் கடைக்கு சென்று குடிநீர் பாட்டில் மற்றும் டம்ளர் வாங்கியுள்ளார். அதற்கு பணம் கொடுக்காததால் மகாலட்சுமி அவரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது பால் முத்தையா மகாலட்சுமியை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி தேவர்குளம் காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் அதிகாலையில் மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் தண்டவாளத்தில் சிறிதுநேரம் பிணம் கிடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா….? 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வழக்கு பதிவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குண்டுபட்டி கிராமத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்ச்சத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தென்காசி, நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆறுமுகத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் ஏழை எளிய மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் நுழையும் வகையில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினர். இதனையடுத்து 2 ஆண்டு கால ஆராய்ச்சி படிப்பிற்கு 3-வது ஆண்டு கட்டணம் கண்டிப்பாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரிவாள் பட்டறை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகை தந்துள்ளார். அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதோட அட்டகாசம் தாங்க முடியல” நாசமான பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் நல்லதம்பி, பாலன் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூலாங்குளம் பத்துகாட்டில் சொந்தமான விளை நிலங்கள் அமைந்துள்ளது. அதில் அவர்கள் வாழை மற்றும் நெல்களை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் வெளிவந்து அவர்களது விளை நிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதில் சேதமடைந்த வாழைகள் 5 மாதங்களான ஏத்தன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை யாரு எடுத்திருப்பா….? காவலாளி அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தனியார் மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் ரத வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அதன்பின் அவர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தனது சட்டையை கழட்டி அதில் ரூ.2 ஆயிரத்தை வைத்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியன் சீருடையை அணிந்து கொண்டு பணியில் […]

Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், […]

Categories
அரசியல்

மத்திய அரசு திட்டத்தில்…. திமுக போட்டோவை ஒட்டுறாங்க…. அண்ணாமலை குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள திட்டங்களில் 80% மத்திய அரசு வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கீழநத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,  “மக்களுக்கான திட்டங்களில்  80% மத்திய அரசால் கொண்டுவரப்பட்டவை, மாநில அரசிற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை. திமுகவிற்கு எந்த விஷயத்திற்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!

வியாபாரிகள் நலசங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதனையடுத்து துணைத் தலைவர் பெத்துக்கனி, துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறைகாற்றில் சேதமடைந்த வாழைகள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்…. உதவி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளை உதவி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், மகிழடி, ராஜபுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த வாழைகள் ஏத்தன் ரத கதலி வகைகளை சேர்ந்த 8 மாத வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்ட என்ஜினியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிடத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினியரிங் பட்டதாரியான சுடலை என்ற மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய பணிகளில் தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வருகிறார். மேலும் மாயாண்டி அதே பகுதியில் உள்ள இவரது குடும்பத்தினர் புதுவீடு கட்டி வருகின்றனர். அந்த கட்டிட பணிகளை மாயாண்டி மேற்பார்வையிட்டு கொண்டிருந்த போது கட்டிடத்தின் மேலிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருவேலங்குன்று பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் பூல் பாண்டியன் என்பவர் ஜெகனிடம் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த ரூ.500 கேட்டுள்ளார். இதுகுறித்து ஜெகன் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த தாய்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்புரம் இந்திராநகர் பகுதியில் வள்ளிமயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தெற்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை அவரது தாயாரான வள்ளிமயில் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய் திடீரென வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசீம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நசீம் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி நசீம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நசீம் பலத்த காயமடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நிலத்தை மீட்டு தர வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட தமிழர் கட்சியினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

திராவிட தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் முருகேசன், நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ஆதிதிராவிடர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய நபர்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு சி.என். கிராமத்தில் சுடலைகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாய்க்கால் பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் வசிக்கும் பேராட்சி என்பவர் சுடலை கண்ணனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுடலை கண்ணன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேராட்சியை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைள்…. போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மனிதநேய ஜனநாயக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் தலைமையில் நடைபெற்றது. இதில் டெல்லி விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மைதீன், முத்துக்குமார், செய்யது அலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்திய நாட்டின் 75 வது வருட சுதந்திர தினத்தை ஒட்டி காடுகள் மற்றும் புலிகள் பற்றிய முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் சார்பில் சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பாளையங்கோட்டையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை களக்காடு – […]

Categories

Tech |