Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஜுலை-11 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வருவார்கள். இந்நிலையில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட விழா ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“7 மாத பெண் குழந்தை கடத்தல் முயற்சி”… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால்  20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த ஊழியர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் சங்கு(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சங்கு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது நெல்லை ரகுமத் நகர் அருகே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற காவலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பொய்லான் நகரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை சித்தா மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சுப்பையா என்பவர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பையா பாஸ்கரை செங்கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் குருநாதன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் குருநாதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று குருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறை நாள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  அறிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் கீழ தெருவில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் தேவநல்லூரில் பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், ராமலட்சுமி என்ற மருமகளும் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டு மாடியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”வியாபாரி படுகொலை” …. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

வியாபாரியை   கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளபதிசமுத்திரம் மேலூர் பகுதியில்  ஜவகர்லால் நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜவகர்லால்  நேரு தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் ஜவகர்லால்  நேருவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. இறைச்சி கடை உரிமையாளர் பலி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.ஜி.ஓ ‘ஏ’காலனியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த மேயர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாநகராட்சி மேயர்  அதிரடியாக வீதிகளில் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தேர்  ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, கழிப்பறை மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு”…. பாளையங்கோட்டையில் அதிகாரிகள் ஆய்வு….!!!!!

தமிழக அரசு உத்தரவின் பேரில் பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் விளைவாக பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி செய்து தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டதின் பெயரில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலம்”…. அவ்வழியாக வந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து…!!!!!

வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலத்தில் அவ்வழியாக சென்ற கார் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. திருச்செந்தூர் பாபநாசம் இடையேயான சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் வீரவநல்லூர் புறவழி சாலையில் தனியார் ஆலை அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென புதிதாகக் கட்டப்பட்டிருந்த பாலத்துக்குள் செங்குத்தாக பாய்ந்து கவிழ்ந்தது. இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கமிஷனரின் அதிரடி உத்தரவு…. கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண்களுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை….!!

கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின்படி துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரின் நேரடி மேற்பார்வையில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் ரசூல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உசேன்பாத் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் லதா, தெய்வானை ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மங்கம்மாள் சாலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பசுபதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பசுபதி இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பசுபதியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில்விளை பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் என்பவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த என்ஜினியர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினியரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடைபயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த வாலிபர் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே குதித்து பெண் குளித்துக் கொண்டிருந்த அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சத்தம் போட்டதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்-அரசு பேருந்து…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கார்-பேருந்து மோதிய விபத்தில் 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜபுரம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி உள்ளார். இவர் பொன்மனையில் உள்ள கனரா வங்கியில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யாழ்நிலா என்ற 1 வயது குழந்தை இருந்துள்ளது. மேலும் பிரேம்குமார் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பிரேம்குமார் தனது தாய், மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற முதியவர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் செல்வதற்கு நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் செல்லும் ஒரு பேருந்து வந்தது. இந்நிலையில் வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஆறுமுகம் என்பவர் பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் ஆறுமுகத்தின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வளைவில் திரும்ப முயன்ற பேருந்து…. தவறி விழுந்து இறந்த பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவலில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக திருக்குறுங்குடிக்கு சென்றுள்ளார். நேற்று இசக்கியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக திருக்குறுங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்த பேருந்து திருக்குறுங்குடி சத்திரம் அருகே இருக்கும் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக இசக்கியம்மாள் படிக்கட்டு வழியாக கீழே தவறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுமளஞ்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நம்பியாறு பாலத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. அண்ணனை மண்வெட்டியால் அடித்து”கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை தம்பி மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆச்சியூர்  பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகவேல், சுப்பையா என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் பம்புசெட் கிணற்றுடன் விவசாய நிலம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதைப்போல் நேற்று நம்பிராஜனுக்கும் அவரது தம்பி அறுமுகவேலுக்கும்   இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நம்பிராஜன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லோடு ஆட்டோ…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரேமா அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகியோருடன் தனது வீட்டின் முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் சீர்வரிசை பொருட்களை இறக்கி வைத்துவிட்டு லோடு ஆட்டோ ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு பேசிக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி…. கடிதங்களை கைப்பற்றிய போலீஸ்…. நெல்லையில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கால்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஐயப்பன் என்பவர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விநாயகர் கோவில் அருகே திடீரென ஐயப்பன் விஷம் குடித்துவிட்டார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் விஷ பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிலர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சர்வேயர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய நபருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழநத்தம் கிராமத்திலிருக்கும் வீட்டுவசதி பிரிவு காலனியில் 5 1/2 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்கு இடத்தை அளந்து தருமாறு செல்வம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளப்பதற்கு வீட்டுவசதி வாரிய சர்வேயர் சின்னையா குமார் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்த மூதாட்டி…. சேலையில் தீப்பிடித்து பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி(80) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக சீதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சீதா திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த சீதாவின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இசக்கிபாண்டி வேலை முடித்துவிட்டு பழவூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு சங்கன்திரடு பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவர் இசக்கிபாண்டியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு இசக்கிபாண்டி பணம் தர மறுத்ததால் தினேஷ் அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொன்டுவரப்பட எரிபொருள்…. தீவிர பாதுகாப்பு பணி …!!!!!!!

ரஷ்யாவில் இருந்து மூலப்பொருள்  கொண்டுவரப்பட்டுள்ளது. திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தற்போது 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2- வது அணு உலை எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும்  கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலாவது அணு உலையில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. சடலமாக கிடந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டல் நடுத்தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெனிலா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனிலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” விவசாயிகளின் தொடர் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர கடைகளின் உரிமத்தை ரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக பதிவாளர்….!!!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்.டி ஆகிய பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களும், முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் தற்போது நடைபெறும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள்   தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை சேர்த்து  சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தேர்வு எழுத விரும்புபவர்கள் பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் ஆனந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலுக்காக ஆனந்த் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கினார். இந்நிலையில் நேற்று மதியம் தண்ணீர் கேன்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் ஆனந்த் அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணத்தை கேட்டதால் தகராறு…. பத்திர எழுத்தாளர் மீது தாக்குதல்…. தந்தை-மகனை கைது செய்த போலீஸ்…!!

பத்திர எழுத்தாளரை தாக்கிய தந்தை, மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் பத்திர எழுத்தாளரான செங்கமலை(60) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்கணேஷ் என்பவர் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் செங்கமலை தனது நண்பரான வேல்முருகன் என்பவருடன் இணைந்து பணத்தை திருப்பித் தருமாறு ஜெய்கணேஷிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்கணேஷ் மற்றும் அவரது மகன் கோகுல், சகோதரர்கள் முத்துக்குமார், மணிகண்டன் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமம் பகுதியில் உடையார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி தாழையூத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று உடையார், தனது உறவினரான நாகராஜன் என்பவருடன் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பரமசிவன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து பரமசிவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய தம்பதியினர்…. விரைந்து செயல்பட்ட போலீஸ்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

லிப்ட்டில் சிக்கிய வயதான தம்பதியினரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவில் விஜிஜான்(84)-மரியா ஜான்(80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் இருக்கும் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து விட்டு நேற்று மாலை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கேரளாவுக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல ரயில் நிலையத்தில் இருக்கும் லிப்டில் தம்பதியினர் ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி பாதியிலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரியில் உரிமம் தடைசெய்யப்பட்டது” ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 17-ஆம் தேதி ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய  படுகாயம் அடைந்த 2  பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தாங்கமுடியாத குரங்குகளின் அட்டகாசம்” பொதுமக்களின் கோரிக்கை…. போராடி பிடித்த வனத்துறையினர்….!!!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில்  100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும்  குரங்குகள் புகுந்து சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  வனத்துறையினர்  குரங்குகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சிக்கிய   5  குரங்குகளை  பிடித்துள்ளனர். அதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பேனர்கள் அகற்றம்” பாதிக்கப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதி மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்  அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  நகராட்சி தலைவர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி  அதிகாரிகள் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாலையை கடக்க முயன்ற 12 அடி மலைப்பாம்பு” பொதுமக்கள் அளித்த தகவல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!!!

சாலையை கடக்க முயன்ற பாம்பை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி சாலையில்  மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக  பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  பாம்புகள் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 2 பேர் உயிரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!!!!

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை  அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று  திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றிவளைத்து வெட்டிய மர்மகும்பல்…. என்ஜினீயருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

இன்ஜினியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சுகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் சுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார். இதனை பார்த்த சுகுமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் வடக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜி என்ற மகளும், விஜயகுமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மானூர் பல்லிக்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வலி தாங்கவே முடியல” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையமான்குளம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயசாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்சர் காரணமாக ஜெயக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணிகளை காய வைத்த பெண்…. தலை சுற்றியதால் நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாரிச்செல்வி வீட்டு மாடியில் துணிகளை காய போட்டுள்ளார். அப்போது தலை சுற்றியதால் எதிர்பாராதவிதமாக மாரிச்செல்வி மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து கொலை செய்யப்பட்டாரா….? கோவில் நிர்வாகி திடீர் இறப்பு…. நெல்லையில் பரபரப்பு…!!

கோவில் நிர்வாகி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் காமராஜர் தெருவில் விவசாயியான வெங்கடேஷ் ராஜா(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் நிர்வாக கமிட்டி துணை செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு சென்ற ராஜாவுடன் சமீபத்தில் விழா நடத்தியது தொடர்பாக மற்றொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகளாக காதலித்த வாலிபர்…. அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் வசிக்கும் வாலிபர் சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வாலிபர் நெல்லையில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் நேற்று இளம்பெண் வேலை பார்க்கும் வங்கிக்கு சென்று தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாட்டி உயிரோடு எரித்து கொலை…. பேத்திகளின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பேத்திகள் பாட்டியை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3-ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி பழுக்க வைக்கிறாங்க….? 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா தலைமையில் அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் இருக்கும் மாம்பழம் மொத்த குடோன்கள், சில்லறை விற்பனை கடைகளில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு கடையில் ஸ்பிரேயர் மூலம் எத்திலின் என்ற ரசாயனம் தெளித்து மாங்காய்களை பழுக்க வைத்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கிருந்த 500 கிலோ மாம்பழங்களை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த 3 மாத குழந்தை…. சடலத்தை தோண்டி எடுத்த போலீசார்…. நெல்லையில் பரபரப்பு…!!

3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் கூலித் தொழிலாளியான பூந்துறை(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சக்திபிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சக்திபிரியா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாத்திட்டாங்க” மலேசிய பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிக்கந்தர்புரத்தில் இம்ரான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இம்ரானை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு செல்ல மறுத்து இம்ரான் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இம்ரான், […]

Categories

Tech |