கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 1 புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 9 கவுண்டர்களில் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான […]
Tag: திருப்பதி ஏழுமலையான் கோயில்
உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பதி கோவில் முழுமையாக திறக்கப்பட்டு தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருமலை திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரானா ஊரடங்கு தளர்வு பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் 8 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டை அடித்து தலை […]
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ளுர் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் அளித்துள்ளனர். அரசு உத்தரவு கிடைத்தவுடன் ஒரு சில மணி நேரங்களில் ழுமலையான் கோயிலை மூட முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயிலிலை மூடுவது தொடர்பாக ஆந்திர […]