திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு கார் மூலமாக திருப்பதி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை கீழ்த் திருப்பதியில் இருக்கின்ற பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தபிறகு திருப்பதி மலைக்கு புறப்பட்டார். அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகிய இருவரும் அவரை வரவேற்றனர்.இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]
Tag: திருப்பதி
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் உண்டியல் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல். ஒரு கோடி ரூபாயை எட்டிய உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்ச வருமானமாக கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி உண்டியல் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் […]
திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பணம் கிடைத்துள்ளது என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் திருப்பதி உண்டியலில் ரூ.2, 32,00,000 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் 6-ம் நாளான இன்று காலை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்ஜவர் மலையப்ப சுவாமி காலை, இரவு ஆகிய வேலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில் உற்சவத்தின் 6-ம் நாளான இன்று திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி கோவிலில் இருக்கும் அரங்கநாயக மண்டபத்தை அடைந்து […]
திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த பிரம்மோற்சவத்தை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனினும் கோவிலில் நடைபெறக்கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவை […]
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வருகின்ற 15ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தற்போது வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கே தேவஸ்தான […]
கொரோனவிற்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்களில் கூடுவதற்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினசரி 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற ஆறாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இலவச சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரட்டாசியில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் இந்த வருடம் பக்தர்கள் நலனை கருத்தில் […]
கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார். திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசிய போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த இரண்டு மாத காலத்தில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 743 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 402 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார். ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலில் 2.38 லட்சம் பக்தர்கள் […]
திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் வழக்கமான பூஜைகள் நடந்து கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் கோவில் […]
திருப்பதி கோவிலில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் சில்லரையாக வங்கியில் டெபாசிட் செய்யாமல் இருப்பதாக தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார் திருமலையில் தேவஸ்தானம் பரகமணி சேவ குழு திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் பேசியபோது, “ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியலில் சில்லறை நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் காணிக்கையாக போட்டு வருகின்றனர். அதில் […]
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்து மத்திய அரசு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மூடப்பட்டு இருந்த வழிபட்டு தலங்கள் ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்டன. திருப்பதி கோவிலும் திறந்து வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் உள்ள பலருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து மீண்டும் திருப்பதி கோவில் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பதியில் நாளுக்கு […]
மனைவியையும் மகளையும் நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு தனது காதலியுடன் நபர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஆந்திரா மாநிலம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்ற பெண் தனது 8 வயது மகளுடன் வந்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவரான வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் தன் கணவரை மீட்டுத் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது காதலி விசாரணைக்காக […]
உலக நாடுகளை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கையை ஆந்திர மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது. திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க தடையில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த மே மாதம் இறுதி வரையிலும், இந்தியாவில் பல பிரபல கோவில்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு நிலை ஏற்பட்டதையடுத்து, காளகஸ்தி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கப்பட்டு […]
திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் கடந்த மே மாதம் இறுதி வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திற்கு பிறகு பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், பிரபல கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகளை தொடங்க மத்திய அரசு சார்பில் […]
திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு மூடப்பட்ட திருப்பதி கோவில் திங்கள் கிழமை அன்று திறக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு உள்ளூர் மக்களும் தேவஸ்தான ஊழியர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். […]
திருப்பதி கோவிலுக்கு இ-பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், கோவில் பூஜை வழிபாடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கோவில் வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் மூலம் […]
திருப்பதி அருகே பணத்தை பங்கு வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) ஆகிய மூவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள்.. நண்பர்களான இவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், கோயிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை கத்தி முனையில் மிரட்டி நகைகள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொள்ளை அடித்ததை பிரித்து மது குடிப்பது மற்றும் […]