Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் வாகன விபத்து… போலீசார் நடவடிக்கை எடுக்கணும்… பொதுமக்கள் கோரிக்கை..!!

நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட  எண்ணெய் ஆலைகள், நூல் மில்கள், அரிசி ஆலைகள் உள்ளிட்டவை இருக்கின்றது. இங்கே தினந்தோறும் திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்த செல்கின்றது. இதை தவிர்த்து சுற்றுலா வாகனங்களும் சரக்கு வாகனங்களும் பேருந்து உள்ளிட்டவைகளும் வந்து செல்கின்றது. இந்த இடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் போற இடத்தில எல்லாம் மக்களுக்கு வீடு…!” காகித ஓடம் மிதக்க விட்டு போராட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!!

குடிசை வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம். புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு காலி செய்ய வலியுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 37 வீடுகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அவர்கள் மாற்று இடம் கேட்டு வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இதில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்… ஒளிரும் வில்லைகளை வழங்கும் போலீசார்..!!!

பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை போலீசார் சார்பாக வழங்கப்படுகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், சேலம், எடப்பாடி, திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி, பவானி  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பக்தர்கள் நடைபயணமாக காங்கேயம் வழியாக தைப்பூசத்திற்கு செல்வார்கள். அவ்வாறு பக்தர்கள் நடைபயணம் செல்லும் போது விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸ் சார்பாக ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இரவு நேர நடைப்பயணத்தின் […]

Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் அசத்திய பாஜக…! பள்ளிக்கு ரூ 1 லட்சம் பிளான்…. ஓடோடி வந்த தமிழக அரசு… நன்றி சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது,  அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி. அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு… 100 படுகைகளுடன் தயார்..!!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை… 2 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் சேதம்… விவசாயி கவலை..!!!

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இரண்டு ஏக்கர் அளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் சென்ற இரண்டு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனிடையே சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம் பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் உடைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காங்கயம் நகராட்சியில் 117 மெட்ரிக் டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள்… அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு..!!!

காங்கயம் நகராட்சியில் 117 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் இருக்கும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் நகராட்சியில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்த குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றது. இதில் மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாய பணிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதில் மக்காத கழிவுகளில் ஒரு பகுதியான பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்காக அரியலூரில் உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்… அம்மி கல்லால் அடித்துக் கொலை… கணவனை கைது செய்த போலீசார்..!!!

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாநகரில் மின்தடை… கடுமையான போக்குவரத்து நெரிசல்… இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா..??

திருப்பூர் மாநகரில் மின்தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலை, குமரன் சாலை, புஷ்பா ரவுண்டானா, எஸ்ஏபி சிக்னல் உள்ளிட்ட பல சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இங்கு தானியங்கி சிக்னல் மூலம் போக்குவரத்து சரி செய்யப்படுகின்றது. சிக்னல் இருக்கும்போது போக்குவரத்தை சீர்படுத்துவதே கடினமாக இருக்கும். ஆனால் தற்போது மின்பாதை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படுவதால் சிக்னல் இயங்காமல் போக்குவரத்து போலீசாரே சீர் செய்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா… ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவ-மாணவிகள்..!!!!

சேவூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் அருகே இருக்கும் மாங்கரசுவலையப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு, ராகி, திணை, வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுதானியங்கள் பருப்பு வகைகள், கீரை விதைகள், அரிசி ரகங்கள், எண்ணை வித்துக்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்… பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. ஆலை நிர்வாகம் வாக்குறுதி..!!

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. கற்களை வீசி சேதப்படுத்திய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மதுராபுரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பேருந்து நிலையத்தில் வைத்து சிலர் பேருந்தை வழிமறித்தனர். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடி மீது கற்களை தூக்கி வீசினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ், நந்தா, ரோகித், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கம்… அதிர்ச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள்…!!!

அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் ராஜநகரில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. இந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், சிறுதானியங்கள், உணவு பொருட்கள் என ஏராளமானவற்றை விற்பனை செய்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் வியாபாரம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின் வியாபார பணத்தை அவர் எண்ணிப் பார்த்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இருக்கை வசதியே இல்லை”… ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமரும் மக்கள்… அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..??

ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லாமல் மக்கள் தரையில் அமர்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இருக்கின்றது. இங்கே நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இங்கு வரும் பொது மக்கள் உட்கார இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் முதியவர்களும் புதிதாக ஆதாரத்தை விண்ணப்பிக்க கைக்குழந்தைகளுடன் பெண்களும் வருகின்றார்கள். இங்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர முடியாமல் முதியவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்குங்க… இல்லைனா, குடியரசு தினத்தன்று கால வரையற்ற உண்ணாவிரதம்… ஆட்சியரிடம் மனு…!!!

வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… முழு கொள்ளளவில் நீடித்து வரும் அமராவதி அணை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!!

அமராவதி அணையில் சென்ற 2 மாதங்களாக முழு கொள்ளளவு நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் சாரல் மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்கின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு சென்ற மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு கொள்ளவில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை… அதிரடி காட்டிய அதிகாரிகள் …!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார  அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்தத் திட்டத்தை வங்கியில் அறிமுகப்படுத்துங்கள்… பனியன் ஏற்றுமதி சங்கத்தினர் கோரிக்கை…!!!!

பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் வழிபாதை ஆக்கிரமிப்பு”… பயிர்கள் சேதமாகி நஷ்டம்… ஆர்.டி.ஓ -விடம் விவசாயிகள் மனு…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த  விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு… சிஎஸ்ஐ பள்ளியில் முகாம்..!!!

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். அவர்கள் சட்டம் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி… புதிதாக மையம் திறப்பு…!!!!

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர்… பேருந்தில் அடிபட்டு நேர்ந்த சோகம்… போலீசார் விசாரணை…!!!

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ண்ணரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயிர்களை நாசம் செய்யும் மான், மயில்கள்… சாகும்வரை உண்ணாவிரதம்… விவசாயிகள் முடிவு…!!!

அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேனி வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்..!!!

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நவ30-ம் தேதியே கடைசி.. வரியை செலுத்த வேண்டும்… இல்லையென்றால் சீல்‌.. நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை..!!!

30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி நிர்வாகம் முப்பதாம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் நகராட்சியில் சென்ற மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு சென்ற ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோல சொத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.?” ஆபத்தான நிலையில் தபால் நிலையம்… மக்கள் கோரிக்கை..!!!

தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கடையின் அசத்தல் ஆஃபர்… என்ன தெரியுமா …? பொதுமக்களின் கூட்டத்தால் திணறிபோன காவல் துறையினர்…!!!!!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான  பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த பிரியாணி கடைகள் […]

Categories
திருப்பூர்

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

மடத்துக்குளம் அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அடுத்திருக்கும் சோழமாதேவி வாய்க்காலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு சுமார் 60 வயது இருக்கும் என கருதப்படுகின்றது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் ஆட்டம் போட்ட நாய்… மர்ம போதை ஆசாமி செய்த செயலால் பரபரப்பு…!!!

மர்ம ஆசாமி ஒருவர் நாய்க்கு மது கொடுத்ததால் மயங்கி விழுந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் பிரபல திருமண மண்டபங்கள் இருக்கின்றது. இந்த மண்டபத்தின் அருகே செடி கொடிகள் நிறைந்த பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் மது போதை அதிகமான நிலையில் அங்கே சுற்றி திரிந்த நாய் ஒன்றியத்துக்கு பிளாஸ்டிக் டம்பளரில் மதுபானத்தை ஊற்றி கொடுத்து இருக்கின்றான். அதை குடித்த நாய் அங்கிருந்து நடக்க முயற்சித்தது. ஆனால் நடக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்வரின் “காலை உணவு திட்டம்”…. சரியாக வழங்கப்படுகின்றதா..? அதிகாரி அதிரடி ஆய்வு..!!!

பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் அதிகாரி கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அதிகாரி கருணாகரன் கூறியுள்ளதாவது, தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சென்ற 2 நாட்களாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் குண்டடம் ஊராட்சியில் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(19.11.22) எங்கெல்லாம் மின்தடை….? மக்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (19.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழ நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மலைவாழ் குடியிருப்பில் பெய்த கனமழை… வீடுகள் சேதம்… கோரிக்கையை முன்வைக்கும் மக்கள்..!!!

மலைவாழ் குடியிருப்பில் கனமழை பெய்ததால் வீடுகள் சேதமடைந்தது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கன மழை பெய்ததால் தாக்குபிடிக்க முடியாமல் பழனிசாமி மற்றும் கண்ணன் உள்ளிடோரின் வீடுகள் சேதமடைந்தது. இது பற்றி மலைவாழ் மக்கள் கூறியுள்ளதாவது, வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற எங்களுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் கட்டணம் செலுத்துங்க…!” கேட்காத பொதுமக்கள்… நகராட்சி ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

குடிநீர் கட்டணம் செலுத்தாத 11 வீடுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 11 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த 11 வீடுகளில் மொத்தம் நிலுவைத் தொகையாக 66,254 இருக்கின்றது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செடிக்குள் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி… பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து… போலீசார் விசாரணை…!!!

காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தை அடுத்திருக்கும் பழையூரை சேர்ந்த விவசாயி தங்கமுத்து என்பவர் தனது தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்திருக்கின்றார். இதனால் தற்போது உரம் வைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9: 30 மணி அளவில் தொழிலாளர்கள் உரம் வைப்பதற்காக சென்றார்கள்‌. பாப்பாத்தி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பருத்திச் செடிக்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் சத்தம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்து வரி செலுத்திட்டிங்களா?…. நாளை சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் திடக்கழிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள்”…. வரி நிலுவை…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு… ஆணையாளர் தகவல்..!!!!

பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் 60 வார்டுகள் இருக்கின்றது. இந்த அனைத்து மண்டலத்திற்கும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக் கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் உள்ளிட்டவை தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வசூல் செய்யப்படுகின்றது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொருந்தாது. இதில் 2022-23 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீர்”… வடிகால் அமைத்து வெளியேற்றிய மாணவர்கள்..‌..!!!!

பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வடிகால் அமைத்து மாணவர்கள் வெளியேற்றினார்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதுபோல உடுமலை தளிசாலையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வருகின்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பிளஸ்-2 மாணவி கர்ப்பம்”… தாலியுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்… மடக்கிப்பிடித்து போலீசார் அதிரடி…!!!!!

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார். சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற வாலிபர்…. நகை-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கத்தியை காட்டி பணம் மற்றும் நகையை பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மூலூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளான ராகவி, இனியா, இசைபிரியா, தில்ஷிகா ஆகிய 4 பேரும் செந்தில் குமரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் நான்கு பேரும் செந்தில் குமார் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT:இன்று கனமழை புரட்டி எடுக்கும்…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு 10.39 கோடி கல்வி கடன்..‌. 2 நாட்கள் முகாம்…!!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கல்வி கடன் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவதற்காக கல்லூரி படிப்பிற்கான கல்வி கடன் பெற சிறப்பு முகாம் சென்ற 2 நாட்களாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கல்விக்கடன் பெறுவதற்காக கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்….. திடீரென ஆற்றில் குதித்ததால் பரபரப்பு…. தேடும் பணி தீவிரம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல்…. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி…!!!!

மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துட்டீங்களா?”…. கால அவகாசம் நீட்டிப்பு…. ஆட்சியர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…!!!!!

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதுப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீண்டாமை வேலியை அகற்றுங்க…. அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக புகார்…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்….!!!!!

தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார் கொடுத்தார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலுவபட்டி ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. அதைச் சுற்றி காலி இடமும் இருக்கின்றது. இந்த இடத்தில் அதிமுக நிர்வாகிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மோகம்… ஆண் நண்பருடன் நெருக்கம்… சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்ட மனைவி…. கணவரின் வெறிச்செயல்….!!!!!

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்வதாக கூறியதால் மனைவியை கொலை செய்துள்ளார் கணவன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். அவரின் மனைவி சித்ரா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்தது. சித்ரா அப்பகுதியில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிகம் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவரின் கணவருக்கு இவரின் செயல்பாடு […]

Categories

Tech |