Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை – ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். 16 அடி நீளம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

பீகார் இளைஞர்களை தாங்கி பிடித்த முதல்வர்…. உடனடி நடவடிக்கையால் குவியும் பாராட்டு ….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டார்  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுத்தும் வகையில் மாநில அரசுக்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மாநிலம் முழுவதும் […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 31ஆம் தேதிவரை மூடல் …!!

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் இருந்து வருகினிற்றார். இதனிடையே தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பேருந்து போக்குவரத்து சேவை , ரயில் போக்குவரத்து சேவை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவன […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசி அருகே சோகம்… லாரி மீது பயங்கரமாக மோதிய கார்… கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சண்ட வரட்டும்…. எனக்கு பொறுப்பு கிடைக்கும்….. வெட்டிக் கொண்ட இ.ம.க. நிர்வாகி …!!

பொறுப்புக்காகவும் , மக்களிடையே மத சண்டையை உண்டு பண்ணவும் இந்து மக்கள் கட்சி துணை செயலாளர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தம்மை வழிமறித்த ஒரு கும்பல் தாக்கியதாகவும் , வெட்டியதாகவும்  போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தது. அதே நேரத்தில் இந்து மக்கள் […]

Categories
கடலூர் சற்றுமுன் திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்

அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்   ஈடுபட்டுள்ளனர்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் அருகே பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்!

திருப்பூர் அருகே உடுமேலை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி தாய் யானையுடன் சேர்த்தனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் குடிக்க வந்த நான்கு மாத குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்தது. குட்டி யானை கத்தும் சத்தம் கேட்கவே அங்கு சென்று அப்பகுதி மலைவாழ் மக்கள் பார்த்த்துள்ளனர். அவர்கள் முயற்சி பலனற்று போகவே வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

BREAKING : வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்  திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அவினாசி சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00000 நிதியுதவி..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக 19 பேரின் குடும்பத்திற்கு 2 இலட்சம் வழங்கப்படும் என்றும், அரசு பேருந்து ஓட்டுனரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையாக 30 இலட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூர் அருகே லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! – 18 பேர் பலி!

திருப்பூர் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோரா  விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் […]

Categories

Tech |