மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.
Tag: திருமங்கலம்
மதுரை திருமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுக, 1 வார்டில் காங்கிரஸ், 1 வார்டில் தேமுதிக என்று வெற்றி பெற்றிருந்தனர். கடந்த 4ம் தேதி இங்கு அரசு அறிவித்தபடி தேர்தல் நடந்தது. இந்நிலையில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் வருகை புரியாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அதாவது தேர்தல் அலுவலர் அனிதா தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் 19 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று […]
சென்னை திருமங்கலத்தில் ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் மதிவாணன் என்பவர் அம்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து இந்த பள்ளி மாணவி அளித்த புகாரின் பெயரில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஆசிரியர் நேரடி […]
மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், […]
ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]
திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது என்று முக.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணி வசதி, கரண்ட் வசதி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இரவு நேரம் வந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள் வருகின்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் […]
திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை […]