17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த தலைமை காவலரின் மகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். வட சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காணவில்லை என்று சிறுமியின் அப்பா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. பின்னர் யார் அந்த இளைஞர் என்று போலீசார் […]
Tag: திருமணம்
பஞ்சாபில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என ஒரு திருமணத்தில் அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது. டெல்லி விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பல்வேறு விதமாக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மொய் பணத்திற்கு பதிலாக டெல்லியில் விவசாயத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இறந்து பெலி தேவி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு மிகவும் பாடுபட்டு தனது நான்கு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார். அதன் […]
புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]
புதுக்கோட்டை அருகே அக்காவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்வதற்கு நிச்சயக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதற்காக கோவிலின் […]
ராஜஸ்தானில் மணப்பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. முன்னதாக மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனினும் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர். மணமக்கள் இருவரும் தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, இருவரும் சடங்குகளை […]
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கஜகஸ்தான் நாட்டில் யூரீ டொலோக்சோ என்ற இளைஞர் பாடிபில்டராக உள்ளார். ஓராண்டுக்கும் மேலாக கார்கோ என்ற பொம்மையை காதலித்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டிற்காக இந்த பொம்மை தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது யூரீ டொலோக்சோ இந்த பொம்மையை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வீடியோவை யூரீ டொலோக்சோ […]
காரியமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மெக்கானிக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரியமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் விஷ்வா. இவர் ஓசூரில் கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். காரிமங்கலம் பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த விஷ்வா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக்கண்டு […]
திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற பெண்ணை கடத்தி காட்டுக்குள் வைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்திலுள்ள கப்ரின் நகரில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நவம்பர் 9ஆம் தேதி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்வெளிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு […]
திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. அதனை அவ்வப்போது பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த காணொளியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து வைப்பது வழக்கம். அண்மைக்காலமாக திருமணத்திற்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கப்படுகின்றது. அதிலும் தீம்கள் அடிப்படையில் அந்த போட்டோ ஷூட் எடுக்கப்படுகிறது. மாடர்னாகவும் கிளாமராகவும் ஆபத்து நிறைந்ததாகவும் போட்டோஷூட் எடுக்கப்படுவதால் தேவையற்றது என கருதத் தோன்றுகிறது. […]
திருமணம் முடிந்த மூன்று வருடம் கழித்து தனது கணவனின் காதலை சேர்த்து வைக்க மனைவி விவாகரத்து வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் போபாலை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். காரணம் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அவரது காதலை சேர்த்து வைக்க நினைத்து விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “அந்த பெண் […]
திருமணம் முடிந்து எட்டு நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் சூலூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மகள் பவித்ரா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். படிப்பு முடிந்ததும் இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் செய்யப்பட்டது. இதனையடுத்து வேல்முருகன் என்பவருக்கு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பவித்ராவை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்ற பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]
ஒரு மணி நேரம் பொறுங்கள் என் காதலன் வருகிறான் என்று உதகையில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாட்டையடுத்து எளிய முறையில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மணமேடையில் ஆனந்த் பிரியதர்ஷினிக்கு தாலிகட்ட முயன்றபோது பிரியதர்ஷினி தாலி கட்டுவதை நிறுத்த சொன்னார். பின்னர் கேட்டதற்கு ஒரு […]
44 வயது நபரை திருமணம் செய்த மகள் தொடர்பாக பெற்றோர் சில உண்மைகளை தெவித்துள்ளனர் காணாமல் போன மகள் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஷு ராஜா. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். திருமணச் சான்றிதழ் இந்நிலையில் அர்ஷு ராஜா 44 வயதான ஒருவரை தான் திருமணம் செய்து விட்டதாக […]
திருமணத்தைத் தொடர்ந்து தடுத்தவரின் கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து பெண் பார்க்க தொடங்கினர். இந்நிலையில் ஆல்பினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் அதே பகுதியில் கடை வைத்திருக்கும் ஜோஷி என்பவர் தவறாக சொல்லி தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து வந்தார். இதுபற்றி ஆல்பினுக்கு ஒருநாள் தெரியவர கோபம் கொண்ட அவர் ஜோஷியிடம் […]
மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த […]
திருப்பூரில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கம்பம் அருகே இருக்கின்ற காமயகவுண்டன்பட்டி பகுதியில் விஷ்ணு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியுடன் ஆசை வார்த்தைகளை பேசி கடத்திச் சென்றுள்ளார். அதன் பிறகு சுருளி அருவி பகுதியில் இருக்கின்ற கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் பெற்றோர் […]
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கணவர் வேறு திருமணம் செய்ய போவதை அறிந்த மனைவி சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஜாம்பியா நாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தேவாலயத்தின் உள்ளே மணமகளுடன் மணமகனாக திருமணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அச்சமயம் தேவாலயத்தின் உள்ளே திடீரென குழந்தையுடன் வந்த பெண் தமிழ் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்த பலரும் திகைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவர் “இது எனது கணவர். இதுவரை நாங்கள் […]
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]
250 பேர் கூடி நடைபெற்ற திருமணம் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றது லண்டனில் இருக்கும் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவை சேர்ந்த ரோமா மற்றும் வினால் பட்டேல் இந்த மாதம் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண விழாவில் 250 பேர் பங்கேற்றனர். லண்டனில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது திருமணம் சுகாதார முறையில் நடைபெற்றதாக […]
மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கலபுரகியை சேர்ந்த மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளைஞர் சிறுமியின் தந்தையிடம் சென்று தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த மகேஷ் தனது […]
சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் மண்டியிட்டு வேண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். அவர்களில் சிம்புவும் ஒருவர். இவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் சிம்பு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் சிலர் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிம்புவின் புகைப்படத்தை […]
நயன்தாரா விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்வார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அவ்வப்போது வெளியான தகவல். அவர்கள் இருவரும் கூட இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததோடு சினிமாத்துறையில் இருவரும் சாதிக்க நினைக்கிறோம் சாதித்த […]
திருமணத்தின் போது மணமகள் வலிப்பு வந்து சரிந்து விழுந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த Hayley என்ற பெண் தனது காதலரான Mathew-வை திருமணம் செய்வதற்காக தேவாலயத்தின் உள்ளே நடந்துசென்று கொண்டிருந்தார். தனது வருங்கால மனைவி வருவதை Mathew ஆசையுடன் திரும்பிப் பார்க்கிறார். Hayley-யை பார்த்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்கின்றனர். ஆனால் மணமேடையை அடைந்த Hayley திடீரென நிலைகுலைந்து கீழே விழுகின்றார். இதனை புரிந்து கொண்ட Mathew சட்டென […]
நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து […]
கேரளாவில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்டதால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கோவிட் சிகிச்சை மையத்தில் திருமணம் நடைபெற்றது. கொச்சி அருகே உள்ள மட்டாஞ்சேரி என்ற இடத்திலுள்ள சிகிச்சை மையத்தில் சாயிசா என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது கொரனோ நோயாளிகள் உற்சாகமாக ஆடி பாடினர். கொச்சியை சேர்ந்த சாயிசாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மணப்பெண்ணிற்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மட்டஞ்சேரி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் […]
கோலாகலமாக நடந்த திருமணம் பலருக்கும் வருத்தத்தை கொடுக்கும் விதமாக அமைந்துவிட்டது. ஜெர்மனியின் ஹெசெ மாகாணத்தில் திருமணம் ஒன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கோலாகலமாக நடந்த அந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஆனால் அத்திருமணம் கொரோனாவை அதிவேகமாக பரப்பும் விழாவாக மாறி மொத்த நகரத்தையும் சிக்க வைத்துவிட்டது. திருமண விழாவில் பங்கேற்ற மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மேலும் தொற்று பரவாமல் இருக்க நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் தனிமைப் படுத்துதல் போன்ற […]
பெண்ணொருவர் பத்து வருடத்தில் எட்டு பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் கட்டுமான ஒப்பந்தகாரராக இருக்கிறார். இவரது மனைவி சென்ற வருடம் மரணமடைந்த நிலையில் கிஷோர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனி ஏஜென்சி தனது விளம்பரத்தில் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தக்க துணையை தேடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிஷோர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிறுவனத்தின் […]
35 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் புதூர்மேடு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கல்பனா எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். கல்பனாவிற்கு அவரது குடும்பத்தில் சுமார் ஒரு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கல்பனாவை ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்து […]
தன்னை விட 20 வயது குறைந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த மார்க்யூஸ் என்ற 39 வயது பாடகர் தன்னை விட 20 வயது குறைவான இளம்பெண்ணை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மார்க்யூஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “இதை இன்னும் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. உன்னை திருமணம் செய்ததால் எனது கனவு நனவாகியுள்ளது. உன்னை திருமணம் செய்த தருணம் எனது உடல் […]
5 கணவன்களை உதறிவிட்டு 6ஆவது கணவருடன் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் இருக்கும் கச்சினஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு.. இவருக்கு வயது 22 ஆகிறது.. இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நானும், இந்த பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளோம்.. எங்களது கல்யாணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அதுமட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுப்பதால், எங்களுக்கு உரிய […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், […]
திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணமகள் புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகன் பெண்ணுக்கு தாலி கட்ட தயாரானான். அப்போது நன்றாக மது அருந்திவிட்டு வந்த வம்சி என்ற இளைஞன் நான் திவ்யாவின் காதலன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு […]
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலனின் வார்டுக்கே சென்று இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்ட திருமணங்கள், தற்போது நடத்த முடியாமலும், சில திருமணங்கள் குறைவான உறவினர்களுடனும் எளிமையாக நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த […]
விஜய் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் திருமணம் கேரளாவில் நடந்து முடிந்தது . தமிழில் கமலஹாசன் நடித்த ‘பாபநாசம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். அதைத்தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’ படத்திலும் வில்லனாக நடித்தார். ‘குபேர ராசி’ படத்தில் நடித்துள்ளார். ‘மூன்று ரசிகர்கள்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ‘பிளஸ் டூ’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மோகன்லால் நடித்த ‘திருஷ்யம்’ என்ற வசூல் சாதனை நிகழ்த்திய படத்தில் வில்லனாக […]
இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது நபரையும் திருமணம் செய்து ஏமாற்ற முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவளி என்ற பெண் 2015-ம் வருடம் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்களில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களில் மீண்டும் வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் […]
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளார். தமிழில் அமரகாவியம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ் . இவர் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் மியா ஜார்ஜுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கொரோனாவால் தேதி […]
நடிகர் ராணா திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து பாகுபலி படத்தின் வில்லனாக மிரட்டி பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். ஹைதராபாத்தில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து தற்போது திருமணத்திற்கு தயராக உள்ளார் நடிகர் ராணா. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். […]
ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் […]
மம்முட்டியின் படத்தில் இணைந்து நடித்த கதாநாயகி பிராச்சி தனது காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிராச்சி தெஹ்லான். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. டெல்லியை சேர்ந்த இவர் கைப்பந்து வீராங்கனை யாகவும் திகழ்கிறார். அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழிலதிபரை மணக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்” நானும் ரோஹித்தும் ஏழு வருடங்களாக காதலித்து […]
மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]
வெவ்வேறு பெயரில் மூன்று ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து சென்ற வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஹைதராபாத்தில் ஆஞ்சநேயலும், சொப்னாவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். விடுமுறை முடிந்ததும் […]
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலின் திருமண பேச்சை தொடங்கியது முதல் இந்த விவகாரம் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்குப் பின்னால் பல பிரச்சினைகள் எழுந்தன. பீட்டர் பால் மனைவி அவரை பிரிந்த பின் வனிதா மற்றும் பீட்டர் பால் மீது இவர்களுக்கு எதிராக பல பேட்டிகளை கொடுத்து சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கினார். இதுகுறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில்… வனிதாவிற்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடந்த வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா […]
தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொல்கத்தாவை சேர்ந்த மன்சி மண்டல் என்பவர் முதுநிலை மருத்துவப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே 3 மாணவிகளுடன் இவர் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மன்சியுடன் தங்கியிருந்த மற்ற மூன்று மாணவிகளும் தங்கள் வகுப்பிற்கு செல்ல இவர் மட்டும் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அவரது […]
திருமணம் நடக்க வேண்டிய நாள் நெருங்கிய நிலையில் மணமகன் மணப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மணமகனை ரஷ்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார் மெரினா பங்களாவா. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தேடப்படும் புது மாப்பிள்ளையான அலெக்சாண்டரை ஆகஸ்ட் மாதத்தில் மெரினா திருமணம் செய்ய இருந்தார். […]
சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருக்கும் சிம்மராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவார் இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம், முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படுகிறார்கள் சிம்மராசி குருப்பார்வை ராசியாகும் ராசிக்கு பகலில் தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம், ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசியாக அமைக்கின்றன. உடலமைப்பு சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய […]