Categories
அரசியல் மாநில செய்திகள்

இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி… ஆனாலும் எச்சரிக்கையா இருக்கணும்… திருமாவளவன…!!!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொஞ்சம் புத்தி சொல்லுங்க பா அவங்களுக்கு”… பாமக தலைமைக்கு அட்வைஸ் பண்ண திருமாவளவன்…!!!!

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் பாமக தலைவர்களே வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளதாக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவித்ததாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆளுமை வாய்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING:  ஊக்கமூட்டும் தங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி…  நடிகர் சூர்யா அறிக்கை…!!!

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும்,தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களது வாழ்த்தும் பாராட்டும் மனநிறைவை அளிக்கின்றன. ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப் படைப்பின் மூலம் சாத்தியம். உண்மை […]

Categories
அரசியல்

கேரள அரசே நீதி வழங்குங்கள்… மாணவிக்காக குரல் கொடுத்த திருமாவளவன்…!!!!

கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக பேசியதால் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு கேரள அரசு நீதி வழங்க வேண்டும் என்று தேசிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பை சேர்ந்த தீபா மோகன் என்கின்ற மாணவி கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படைப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் என்பவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்முறையை தூண்டிவிடும் பாஜக – திருமா கடும் கண்டனம் …!!

திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக விசிக. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல் எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.ஆர் சற்குணம் மற்றும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க…! சாதிவாரி கணக்கெடுக்கணும்…. திருமா வேண்டுகோள் …!!

செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் அதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாமல் இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்தது சட்டப்படி ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழக்கில்  நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 2011 சென்சஸ் அடிப்படையில் வன்னியர் சமூகத்தின் மொத்த மக்கள் தொகை எது என்று தெரியாது அரசுக்கு…. ஏனென்றால் ஓபிசி மக்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது. மதவாரி கணக்கெடுப்புகள் தான்….  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு இரத்து…. அன்றே சொன்ன ஓபிஎஸ் … திருமாவளவன் அதிர்ச்சி….!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. திமுக பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அவசர அவசரமாக அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும், பாமகவும் எடுத்தேன்,  கவிழ்த்தேன் என்று திடுதிப்பென்று முடிவெடுத்தார்கள், அறிவித்தார்கள். இது சட்டப்படி நாளைக்கு பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அன்றைக்கு விடுதலை சிறுத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெத்து காட்டும் சிறுத்தைகள்…! கொள்கை மாறாமல்… சமரசம் இல்லாமல்… இந்தியாவிலே நாம் தாம்…!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.எந்த அளவிற்கு உறுதிப்பாட்டோடு இந்த களத்தில் நாம் நிற்கிறோம், கொள்கை மாறாமல் நாம் நிற்கிறோம், கோட்பாடு சிதையாமல் நிற்கிறோம், தேர்தல் அரசியல் என்பதற்காக எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் தேர்தல் அரசியல் களத்திலும் சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடித்து இருக்கின்ற ஒரே இயக்கம் இந்திய மண்ணில் விடுதலை சிறுத்தைகள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எங்களுக்கு தான்…! சனாதனிகள் பார்த்துட்டு இருப்பாங்க…. திருமாவளவன் கருத்து …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், ஒரு மா நிலம் இல்லை கவலையே இல்லை திருமா இருக்கிறார் எங்களுக்கு. ஒரு மா என்றால் நூறு குழி அவங்க மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் மா கணக்கு குழிக்கணக்கு தான். இங்க நம்ம பக்கத்துல கடலூர், அரியலூர், பெரம்பலூர் அந்த பக்கம் போனால் காணி கணக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம கவசம் அல்ல கிரீடம்…! ”இப்போல்லாம் சிறுத்தைனு சொல்லுறாங்க”…. கெத்து காட்டி பேசிய திருமா …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், முன்பெல்லாம் சாதி அறிவதற்கு சுற்றி வளைத்து கேட்பார்கள் நீ எந்த ஊர், எந்த மாவட்டம், யாருக்கு சொந்தக்காரர் என்று கேட்பார்கள். முதலில் மாவட்டத்தை கேட்பார்கள், அப்புறம் எந்த ஊர் என்று கேட்பார்கள், அப்புறம் யார் சொந்தக்காரன் என்று கேட்பார்கள் சாதியை கண்டுபிடிப்பதற்கு, இப்போது உடனடியாக அறிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்காங்கே கண்ணிவெடி இருக்கு…! யூடியூபில் பார்த்தால் தெரியாது…. சிறுத்தைகளுக்கு திருமா அட்வைஸ் …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், தந்தை பாவலர் ஆ.பா.தமிழ் அன்பன் கூட எடுத்துச் சொன்னார், நிலம் எல்லாம் புதைந்து இருக்கும் சாதி கண்ணிவெடிகளை மிதிக்காமல் நடக்கிறாய், அதாவது நம்மை காலி செய்வதற்கு அங்கங்க சதி திட்டம் தீட்டுகிறார்கள், அந்த சதி வலையில் சிக்காமல் நெளிவு சுளிவாக போய்க்கொண்டு இருக்கிறாய். இதையெல்லாம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. இது எல்லோராலும் நுட்பமாகப் புரிந்து கொள்ள […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நம்மை காலி செய்ய ஆங்காங்கே சதி திட்டம் தீட்டுகிறார்கள் – திருமாவளவன் பேச்சு …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று அதிலே எனக்கு மிகவும் என்னை கவர்ந்தது நான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஊன்றுகோல் தந்தபோது நீதான் முதுகெலும்பு தந்தாய், இது வந்து அப்படியே சிலிர்க்கிறது உடம்பு, மெய் சிலிர்ப்பு அப்படி என்று சொல்வார்கள் இல்லையா அப்படி மெய்சிலிர்க்கிறது . அதாவது கூனிக்குறுகி இருப்பவர் கையில் ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறது ஒரு பெரிய […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது திருப்பி அடிக்கும் காலம்….. திருமாவளவன் எச்சரிக்கை…!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், மன்னர் மன்னன் காதில் போய் கேட்டேன் இது நியூட்டனின் மூன்றாம் விதி என்று…  திருப்பி அடி என்பதைத்தான் எழுதி இருக்கிறார்களா என்று கேட்டேன், ஆம் என்றார். ஏனென்றால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. எதை செய்தாலும்… நீ ஒருவரை திட்டினால் அதே மாதிரி இன்னொருவர் உன்னை திட்டுவார். டேய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணியே வேண்டாம்…! இது தான் ராஜதந்திரம்… திருமாவளவன் விளக்கம் ..!!

நெளிவு, சுளிவாக செல்வது அடிமைத்தனம் அல்ல, அது ராஜதந்திரம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், நாம் பேசும் பேச்சு, நாம் எழுதும் எழுத்து,  நம்முடைய களத்தில் ஆற்றும் செயல்,  நாம் நடத்தும் போர்,  போராட்டங்கள் ரொம்ப நுட்பமாக கவனித்திருக்கிறார், காதலித்திருக்கிறார். அருவாள் அல்ல போர்க்கருவி, கொடுவாள் அல்ல போர்க்கருவி, ஈட்டி அல்ல போர்க்கருவி,  அறமே போர்க்கருவி. அடிமைப்பட்டு கிடப்பவர்கள் அடிமைத்தனத்திலே கிடைக்க முடியாது. அவர்கள் […]

Categories
அரசியல்

அதிமுகவை விட அதிக வெற்றி…. செம சந்தோஷத்தில் விசிக தலைவர்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில்  நடைபெற்றது. இதில் விசிக கட்சியானது தேர்தலில் மாவட்ட கவுன்சில் பதவிகளை மூன்றில் ஒரு பங்கை வென்று உள்ளது. ஆனால் எதிர் கட்சியிலுள்ள அதிமுகவானது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது,” கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர்களின் தொகுதிகளில் போட்டியிட்டு […]

Categories
அரசியல்

“ஈவிரக்கமே இல்லை” சும்மா சும்மா டுவீட் போடுற பிரதமர்…. இதுக்கு போடாதது அதிர்ச்சியா இருக்கு…!!!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ,உத்தரபிரதேசம் வன்முறை சம்பவத்தில் பிரதமர் ஈவிரக்கமற்றவராக இருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்ககூடிய விளையாட்டு வீரர்களுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டால் கூட அதற்காக […]

Categories
அரசியல்

போலீஸின் நடவடிக்கையை கண்டிக்கிறேன் – திருமாவளவன் பரபரப்பு பேட்டி….

போலீசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் வெற்றி என திருமாவளவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராடுவதே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான். போராட்டம் என்பதே அரசின் கவனத்திற்கு நம்முடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்வதற்காக தான், விளம்பரத்திற்காக அல்ல. அந்த வகையில் மோரூரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து மூன்று கட்ட போராட்டத்தை எனது தலைமையில் நடத்துவது என அறிவிப்பு செய்தேன். முதற்கட்டம் சென்னையில், இரண்டாவது சேலம், மூன்றாவது மதுரையில் என்று […]

Categories
அரசியல்

ஒன்றிய அரசே…! உடனே நடைமுறை படுத்துங்கள்… திருமா கோரிக்கை

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும், இந்திய அளவில் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு. தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. கல்வி வணிக மயமாகி வருகிறது மற்றும் மாநில அரசுகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும் […]

Categories
அரசியல்

எங்களை மட்டும் ஏன் தடுக்கீங்க ? விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டும் தடையா ? திருமாவளவன் பேட்டி …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றுவதில் ஏற்ப்பட்ட மோதல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திருப்பூர் பக்கத்திலிருந்து உள்ள கணியூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ஒரு நோட்டீஸ் கொடுத்து இருந்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கொடியை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் தீர்ப்பு இருந்தால் அது தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைபடுத்த வேண்டும் அல்லது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் […]

Categories
அரசியல்

எல்லா மாவட்டத்திலும் பிரச்சனை இருக்கு…! நடவடிக்கை எடுக்க சொல்லல…. நடந்ததை சொல்லி இருக்கோம் ….!!

விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றுவதில் வந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை, நடந்ததை சொல்லியுள்ளோம் என திருமாவளவன் கூறினார். தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அப்படி செய்வது இல்லை. சில அதிகாரிகள் இந்தக் கொடியை ஏற்றினால் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்கிறார்கள். அதுவே பிறகு பிரச்சனையாக மாறிவிடுகிறது. வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிகாரம் […]

Categories
அரசியல்

யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்படி தான்….!! கூட்டணியில் குண்டை போட்ட திருமா ….!!

எந்த ஆட்சியாக இருந்தாலும் சில பகுதியில் போலீஸ் இப்[படி தான் இருக்கும் என தமிழக முதல்வரை சந்தித்த பின்பு திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவதில் ஏற்ப்பட்ட வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் கூட பல மாவட்டங்களில் பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் தான் முதலில் எதிர்ப்பு […]

Categories
அரசியல்

ஸ்டாலின் பேசணும்னு சொன்னாரு…! எல்லாத்தையுமே சொல்லிட்டோம்…. திருமாவளவன் பரபர பேட்டி …!!!

விடுதலை சிறுத்தைகள் கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் விளக்கிய திருமாவளவன், அண்மையில் சேலம் மாவட்டம் காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்ற தடைவிதித்து நடந்த வன்முறை தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டோம். பல கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகளின் கொடியை பறக்க ஏன் அனுமதிக்கவில்லை என்று அந்த கிராமத்து […]

Categories
அரசியல்

வீரம் எங்கே போனது ? ஸ்டாலினிடம் பம்மும் திருமா… வெளுத்து வாங்கிய ஜெயக்குமார் …!!

திருமாவளவன் ஸ்டாலினை கண்டு பம்முகின்றார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட நிலைமை என்று பாருங்கள். திமுக கூட்டணியில் இருக்கின்ற தோழமை கட்சியே அவர்கள் மாவட்டங்களில் அவருடைய கட்சி கொடியை ஏற்ற கூடிய நிலை இல்லை என்று சொன்னால் அது தோழமை கட்சியில் இருக்கின்றவர்களுக்கு என்ன நிலைமை என்பதை பார்க்க வேண்டும். இந்தியாவிலே தமிழ்நாடும் இருக்கின்றது,இது  ஒரு சுதந்திர நாடு, ஜனநாயக நாடு அப்படிப்பட்ட நிலையில் ஒரு  […]

Categories
அரசியல்

கவனிச்சு கேட்ட ஸ்டாலின்…! நன்றி சொல்லி நெகிந்த திருமா …!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை நட்டுவது தொடர்பான பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் – காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. தமிழக காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இது சம்மந்தமாக பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், மாலை 6.30 மணியளவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சேலம் – மோரூர் வன்முறை […]

Categories
அரசியல்

திமுகவிடம் போய் கேளுங்க…! போராட்டம் நடத்துவோம் … திருமாவளவன் பரபரப்பு

நீட் தீர்மானம் மீது குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என கூறிய திருமாவளவன் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  மாநில அரசுகளுக்கு தரக்கூடிய ஜி.எஸ்.டி பாக்கியை கூட இன்னும் தரவில்லை மத்திய அரசு அது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கியிருக்கிறது. எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பான இந்த […]

Categories
அரசியல்

தாதாவை போல் நடந்து கொள்கிறது ஒன்றிய அரசு – திருமாவளவன்

தாதாவை போல் நடந்து கொள்கிறது ஒன்றிய அரசு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து குறிப்பாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்துகின்ற தேச விரோத நடவடிக்கையை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த திராணி இல்லாத மோடி அரசை கண்டித்தும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா […]

Categories
அரசியல்

திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு…. ஆளுநர் தமிழிசை மீதான வழக்கு ரத்து…!!!

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்பாளராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன்,  கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, விசிக தலைவர் திருமாவளவனை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதன் தொடர்பாக தமிழிசைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யுமாறு வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு…. மத்திய அரசு எதையும் செய்யல…. திருமாவளவன் வருத்தம்…!!!

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் திலீப்பின் நினைவு தினத்தையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு ஈழ தமிழர்களுக்கு ஒரு அங்குலம் கூட நன்மை செய்யவில்லை என தெரிவித்தார். மேலும் ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆறேழு ஆண்டுகளாக ஆட்சியில்  அமர்ந்திருக்கும் பாரதிய […]

Categories
அரசியல்

அடி முதல் நுனி வரை…. அதிமுக ஆட்சியில் ஊழல்…. தொல் திருமா பொளேர்…!!!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “அடிமுதல் நுனிவரை அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பது பேசப்பட்ட நிலையில் தற்பொழுது அது வெளியே தெரியவந்துள்ளது. அதிமுக தலைமை இந்த சோதனை குறித்து எந்த கருத்தையும் வெளியிடவும் இல்லை, தங்களது எதிர்ப்பையும் காட்டவில்லை. அவர்கள் தங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் போராடி இருக்கக்கூடும். தற்பொழுது திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமாக உள்ளது என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விருப்பமனுக்கு கட்டணம் ஏதும் கிடையாது… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற  உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2000 முதல் ரூ.5000 அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பவர்கள் எந்த […]

Categories
மாநில செய்திகள்

அன்பு அண்ணன் திருமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து… சீமான்….!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன்அவர்களுக்கு அன்பு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். விளிம்புநிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமர். தமிழ் தேசிய இனத்தின் உரிமை மீட்பு கழகங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை என்று புகழாரம் […]

Categories
மாநில செய்திகள்

திருமாவளவன் பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது… நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு…!!!

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திருமாவளவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் மனு அளித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு வந்து ஊழியர்கள் மற்றும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

நீட் அறிவிப்பைத் திரும்ப பெறவும்…. திருமாவளவன் வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கான அறிவிப்பை திரும்பப் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டம்…. திருமாவளவன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவுடன் விசிக பயணிக்கும்…. திருமாவளவன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்…. திருமாவளவன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய…. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்…!!

நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நீட் தேர்வு முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் அதன் ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர […]

Categories
மாநில செய்திகள்

அரியலூரில் ஹைட்ரோ கார்பன்…. திருமாவளவன் கண்டனம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வித்துறை… இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது… திருமாவளவன் கண்டனம்…!!!

2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

`மிகுந்த அதிர்ச்சி, தாங்கொணா வேதனை அளிக்கிறது’…… திருமாவளவன் இரங்கல்….!!!!

தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர், மார்க்சிய சிந்தனையாளர் இரா. ஜவஹர் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலமானார். இவரது “கம்யூனிசம் நேற்று இன்று நாளை”, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ஆகிய புத்தகங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவரது மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் ஜவகர் அவர்கள், கொரோனா பாதிப்பால் பலியானார் என்னும் […]

Categories
அரசியல்

இதுதான் உயர்சாதி அரசியல்… திருமாவளவன் ஆவேசம்…!!!

மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று “தேசிய கருப்பு நாளாக” கடைபிடிக்கவும்….திருமாவளவன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை… திருமாவளவன் வலியுறுத்தல்…!!!

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று திருமாவளவன் எம் பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் காட்டி இருக்கும் அக்கறையை நான் பாராட்டுகிறேன். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மேல்முறையீடு… திருமா வேண்டுகோள்…!!!

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு எதிரானது என திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு எதிரானது என்று திருமாவளவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பால் சமூகநீதிக்கும், மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எல்லாமே தெரியும்… நான் திருமா வளர்ப்பு…. சவால் விட்ட விக்ரமன் …!!

அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன்,  நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்….  அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இருந்தால்… திராணி இருந்தால்… துணிச்சல் இருந்தால்… தைரியம் இருந்தால்… நேருக்கு நேரா மோத தயாரா ? சவால் விடுத்த விக்ரமன்…!!

அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன்,  பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறியூட்டி…. தூண்டிவிட்டு…. ஏமாற்றி… திருப்பி விடுறாங்க…. பல சான்றுகள் இருக்கு …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விக்ரமன் பாமக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட தம்பிகள் சூர்யா மற்றும் அர்ஜுனன் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், இரண்டாம் புத்தர் வாழும் அண்ணன் அம்பேத்கர் அவர்கள், அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் தம்பிகள் இரண்டு பேரை இழந்து இருக்கிறோம். தம்பி சூர்யா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்வோம்..! ஓட்டு போட்டாலும்…. போடவில்லை என்றாலும்…. நம்பிக்கையூட்டிய திருமா ….!!

இளம் சமுதாய இளஞர்களை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கின்றது என பேசி திருமாவளவன் நம்பிக்கை ஊட்டினார். அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த சமூகத்து இளம் தலைமுறைகளை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு இருக்கிறது. செய்வோம்..! ஓட்டு போட்டாலும் போடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் விடுதலைக்காக போராடுகின்ற இயக்கம்தான் விடுதலை சிறுத்தை கட்சி. தேர்தல் களம்  முடிந்த சூடு இன்னும் ஆறவில்லை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகனை முதல்வராக…. அவரை மட்டும் ரவுடியாக…. திருமா சொன்ன ”அவர்” …. யார் தெரியுமா ?

அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவர் மறைந்து விட்டார் பாவம் அவரை பற்றி சொல்ல கூடாது. எத்தனை மேடைகளில் பார்த்து விடலாமா? மோதி விடலாமா ? நீ பண்டார பையன் என்பார். சாதியை சொல்லி திட்டுவது. ஏனென்றால் இவர் இப்படி உசுப்பேற்றுவது, மேடையில்…. மகனை மட்டும் முதலமைச்சராக காட்டுவது, அடுத்த முதலமைச்சர் என சொல்வது. ஆனால் காடுவெட்டி குருவை ரவுடியாக காட்டுவது. இன்றைக்கு அந்த சமூகத்தில் இளைஞர்களை […]

Categories

Tech |