திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]
Tag: திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]
நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]
கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]
பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன […]
இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது […]
திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் அருகே உள்ள கடப்பாகுப்பம் என்னும் கிராமத்தில் வசிப்பவர் இந்திரகுமார். மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நண்பர்களோடு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் வகையில் சுமார் 35.6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவு(வாந்தி) கிடைத்துள்ளது. இந்த திமிங்கலத்தின் கழிவில் என்ன இருக்கிறது என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் ambergris எனப்படும் இந்த திமிங்கலத்தின் வாந்தி கழிவானது பல கோடி விலை மதிப்பானதாகும். இந்த திமிங்கல கழிவானது ஒரு கிலோவுக்கு ஒரு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில் மது கடைக்கு சென்று மது அருந்துவார். வடிவேலு மது குடித்துக் கொண்டிருப்பதை கவனிக்காத கடை உரிமையாளர் கடைக்குள் வைத்து வடிவேலுவை பூட்டி விட்டு சென்று விடுவார். பின்னர் நள்ளிரவில் வடிவேலு கடை உரிமையாளருக்கு போன் செய்து ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா கடையை எப்ப சார் திறப்பீங்க என்று கேட்பார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓனர் உடனடியாக கடைக்கு […]
சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயூரநாதர், அருணாச்சலேஸ்வரர், அருணகிரிநாதர், கால பைரவர், நவக்கிரகங்கள், ஆதிமூலர், நாகர், சண்டிகேஸ்வரர், சூரியனார், அபித குஜலாம்பாள், ராஜகணபதி ஆகியோருக்கு தனி சன்னிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன், நேற்றிரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார், சிசிடிவி […]
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் பணியை அந்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்படியே அருகிலிருக்கும் அழிஞ்சி வாக்கம் ஊராட்சியிலுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அப்பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறைக்கு சென்று, அங்குள்ள மாணவ – மாணவிகளுக்கு பாடமும் எடுத்தார். ஒரு கலெக்டர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர், வாலிபர் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து, தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன், முகநூலின் மூலம் பழகியுள்ளார். இதையடுத்து மாரிமுத்துவிடம், ராகினி என்ற அந்த இளம்பெண் பணக்கார பெண்ணாக, தன்னை காட்டிக்கொண்டுள்ளார். மேலும், அப்பெண் மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஆசை வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளார். […]
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால், திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதனால் சிறுவனுடன் உடலுறவு கொண்டதால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போக்சோ […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் சூப்பர் அறிவிப்பு ஒன்றை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடந்த ஜனவரி மாதம் (2022) வெளியிட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஆண்கள் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி ,சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்களை மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் இந்த ரேஷன் கார்டு முக்கியமாக எடுத்துக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அரசு. […]
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது அருகில் பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் தலையில் மாணவர்கள் எறிந்த கல் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் […]
ஆவடியில் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது 68 இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது. […]
செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள […]
ரயிலில் சென்று கொண்டிருந்த மருந்து நிறுவனத்தில் பொது மேலாளர் கிழே விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரகு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனிக்கு சென்றுவிட்டு மீண்டும் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு நாமக்கல் […]
கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரமீளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் டிராக்டரை இயக்க முயற்சி செய்த போது கீழே விழுந்திருந்த ஸ்க்ரூட்ரைவரை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ட்ராக்டர் இயங்கயதால் முரளி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் […]
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பகுதி சப்-இன்ஸ்பெக்டராக மூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சிஅத்திப்பேடு அருகே உள்ள சிங்கிலி குப்பம் விளையாட்டு மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு வாலிபர்கள் சிலர் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர்கள் […]
மதுபாட்டிலில் போதை மாத்திரைகளை கலந்து விற்று வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மருந்து கலந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபாட்டில்களில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து […]
நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். […]
தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்குஅருகில் உள்ள தோமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று இவருடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது, இவர் மீது தனியார் […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் கடத்தி வந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து திருட்டுதனமாக தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரிகளில் உரிய ஆவணம் இன்றி ஆந்திராவிலிருந்து நெல் மூட்டைகளை […]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் […]
டயர் தொழிற்சாலையில் திடீரென்று பாய்லர் வெடித்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த டயர் தொழிற்சாலையில் பழைய ராட்சத டயர்களை பாய்லரில் போட்டு உருக்கி அதிலிருந்து ஒருவிதமான பவுடன் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 […]
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர். இவர் ஏற்கனவே கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 4-ஆம் தேதியன்று பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள […]
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த சகோதரர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (25), சூர்யா (24) என்ற 2 சகோதரர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் திருவள்ளூர் தாலுகா போலீசார் இதற்கு முன்பாகவே இருவரையும் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த […]
புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண் கட்டிட வேலை செய்து வந்துள்ளார் . இந்த கட்டிட பணியில் […]
கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையையொட்டி உள்ள ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கவரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு […]
கூலி தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மனம்பேடு கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி முருகலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர் […]
திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் , சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான […]
திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் சார்பில் நேற்று திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து மாவட்ட அவைத் தலைவர் சரவணன் ,மாவட்ட துணை செயலாளர் புஜ்ஜி […]
மது போதையில் நண்பர்களுக்கு இடையே நடந்த மோதலில் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டிய அவரருடைய 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் புதுகும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் என்பவர் மீது பல்வேறு கொலை , கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் […]
கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது . இந்த சிறப்பு முகாம் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரியான வாசுதேவன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளரான முரளி கிருஷ்ணா ஆகியோர் […]
போலி தங்க நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்த விமல்சந்த் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் இவருடைய கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகையை விற்று புதிய 8 கிராம் தங்க நகைகளை […]
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளவேடு பஜார் பகுதியில் 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் […]
மதுபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சீனிவாசன் நகர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தார். இந்நிலையில் அந்த வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் ,ரூபாய் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் மகன் ஜானகிராமன் , மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் […]
மருத்துவமனையில் மாத்திரைகளை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அங்கிருக்கும் மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபாய் 68,000 மதிப்பிலான சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4, 2 00 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது […]
பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பெட்ரோல் டீசல் , விலை உயர்வைக் கண்டித்து கட்சிக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் ,ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூபாய் 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது .அப்போது நரசிங்கபுரத்தின் வழியே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான மணி என்பவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் […]
வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது […]
குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மதுபோதையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் […]
பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்ததை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன், சீபு நந்தா ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது […]
வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேட்டுக்காலனி பகுதியில் விஜயசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சம்பவ தினத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தன. அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், கொலுசு மற்றும் ரூபாய் 15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் விஜயசாரதி […]