Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

குளத்தில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள  பனப்பாக்கம் ஊராட்சியில் இலுப்பாக்கம் காலனியில் வசித்து வந்த விநாயகம் என்பவர் கூலி வேலை  செய்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி  நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. விவசாயின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் …!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் விவசாயம்  செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் ,மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை  குடித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்ல …. மனமுடைந்த தம்பதியினரின் விபரீத முடிவு …. போலீசார் விசாரணை ….!!!

குடும்ப வறுமையால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில்  பூமி கோட்டை பகுதியை சேர்ந்த கோபால்- கண்ணம்மா வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா ஓய்வு பெற்ற பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் 100 நாள் மட்டும் வேலை செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நுழைந்த திருடர்கள் …. மடக்கி பிடித்த கிராம மக்கள் …. கைது செய்த போலீஸ்…!!!

கோவிலுக்குள் நுழைந்து  நகைகளை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகில் உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின்  பரம்பரை அறங்காவலராக யுவக்குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தக் கோவிலுக்குள் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்க 8 பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோவில் அறங்காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் விரைந்து சென்று திருடர்களை பிடிக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடைசியாக எழுதிவைத்த கடிதம் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. கணவர் உட்பட 3 பேர் கைது …!!!

 இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி ஜோதிஸ்ரீ கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் மிதந்த ஆண் பிணம் …. கொலையா இருக்குமோ…? தீவிர விசாரணையில் போலீசார் …!!!

கால்வாயில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கரை அருகே கரி மணல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி வலை கயிற்றால் கை ,கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாயில் இருந்த ஆண் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என் மகனுக்கு பொறுப்பே இல்ல …. வியாபாரி எடுத்த விபரீத முடிவு …. போலீசார் விசாரணை …!!!

திருவள்ளூரில் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே உள்ள பாஞ்சாலை கிராமத்தில் வசித்து வந்த பாபு என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது  மகன் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு பாபு மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில்  நேற்று முன்தினம் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும்போது …. தபால் ஊழியருக்கு நடந்த விபரீதம் …. போலீசார் வலைவீச்சு …!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி – ஜோதி தம்பதியினரின் மகன் வேல் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை வேலைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு போயிட்டு வந்த ….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணையில் போலீஸ் …!!!

வீட்டின் பூட்டை உடைத்து  பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்ற  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காவல்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கச் செயின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த டிரைவர்…. எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை …!!!

தாயை இழந்த துக்கத்தால் மனமுடைந்து மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பருவதராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று இவரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தன் தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதன் பிறகு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திரும்ப வந்திருவான்னு நெனைச்சோம்…. ஆனா இப்படி நடந்துருச்சி ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!!

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள்  பென்னலூர் பேட்டை காவல்  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இறந்த  சிறுவன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் …. மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…!!!

திருவள்ளூரை தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென்று ஆட்சியர் பொன்னையா, வேண்டுகோள் விடுத்துள்ளார் . திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கொரோனா  நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அவர்களுக்கு சால்வை அணிவித்து உணவு வழங்கினர். மேலும்  திருவள்ளூர் மாவட்டத்தை தொற்று  இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டில்களை  பதுக்கி வைத்து ….விற்பனை செய்த வாலிபர் கைது …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை  பதுக்கி வைத்து, விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி பல இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில், உள்ள வயல்வெளி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது பாட்டில்களை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் செஞ்சி ஊராட்சி பகுதியில்…! கொரோனா விழிப்புணர்வு பணி ..!!!

திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று  விழிப்புணர்வு பணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவரான அறிவழகி ராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று  குறித்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மணப்பெண்… நஷ்டஈடு கேட்ட மணமகன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் காணாமல் போனதால் மணமகனின் வீட்டார் நஷ்டஈடு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால்  முடிவு செய்ய பட்டிருந்தது . இந்த திருமணம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக திருமண காகிதங்கள் அச்சிடப்பட்டு, திருமணப்புடவை, நகை உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த துக்கம்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு கட்டாய தாலி…. பெற்றோர் கொடுத்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு வீடு புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டிய வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் வாலிபர் ஒருவர் கட்டாய தாலி கட்டி தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் துறையினர் வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின் உறவினரான விஜய் என்பவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருவள்ளூரில் பரபரப்பு..!!

கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மீனவர் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியில் சிவக்குமார் என்ற மீனவர் வசித்து வருகிறார். சிவக்குமாருடன் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிவக்குமாரின் படகானது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் …!!

நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தண்ணீர்தேவை பூர்த்தி செய்யும் நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அம்மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நீர் தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடுகள் திருட்டு காவல்துறை விசாரணை …!!

ஆவடி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே உள்ள திருமுள்ளைவாயல் சோலம்பெடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் கடையை திறந்து வந்த அன்வர் பாஷா விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அன்வர் பாஷா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை …!!

திருவள்ளூர் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து DSP. நவகுமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 5 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆவின் நிர்வாகத்தின் அலட்சியப் போக்‍கிற்கு எதிர்ப்பு – 500 லிட்டர் பாலை கொட்டி போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து 500 லிட்டர் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருத்தணி அருகே தும்பிகுலம்  கிராமத்தில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இக்கிராமத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் இருந்து நாள்தோறும் 1300 லிட்டர் பாலை திருவள்ளூர் அருகே காக்கலூர் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்க்கு உற்பத்தியாளர்கள் அனுப்பி வருகின்றனர். வாரத்தில் இரண்டு நாட்கள் காலையில் அனுப்பும் 500 லிட்டர் பாலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் ….!!

திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி அங்குள்ள கடற்கரையில் பொதுமக்கள் குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமையான இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கை  தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் இருக்கும் கடற்கரையில் குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் கடற்கரையில் குளித்து பொழுதை கழித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் முழுப் ஊரடங்கு உத்தரவை மீறி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு மேனிலைப்பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு ……!!

திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு மடிக்கணினிகளை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறை தேடி வருகிறது.  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது ஊடகங்கள் பள்ளிகள் மூடப்பட்ட  நிலையில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் பள்ளியில் புகுந்தது. காவலாளியை தாக்கிய கட்டிப்போட்டுவிட்டு கணினி அறையிலிருந்து 14 மடிக்கணினிகளை மற்றும் டிவிகளை திருடிச் சென்றனர். காவலாளியின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே திமுக அதிமுக மோதல் ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தேர்தல் தொடர்பாக திமுக அதிமுக முதல் ஆர்கே பேட்டை ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் திமுக அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். திமுக , அதிமுக தலா 8 கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெற மோதல் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories

Tech |