Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விழாவில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்…. ஒருவர் பலி…. திடுக்கிடும் செய்தி….!!!!!

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ். இவருடைய ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து 15 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வ முருகன் என்பவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உஷார் மக்களே…! ஹெட்செட்டால் பறிபோன உயிர்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்….!!!!!

திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல் இருக்கும். இதனால் வெங்கடேஷ் தனது செல்போனில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்ட படியே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் உடல் சிதறி […]

Categories
மாநில செய்திகள்

3 தலைமுறைக்கும் மேல்…. சாவை இப்படித்தான் எடுத்துட்டு போறோம்….ஒரு கிராமத்தின் வேதனை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்ற தாலுகாவில் அன்னியூர் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பாகசாலை என்ற கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இவர்கள், இங்கு  3 தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு உரிய  சுடுகாடானது, ஆற்றின் மறு கரையில் உள்ளது. இந்நிலையில் இந்த சுடுகாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, ஆற்றில் இறங்கி  செல்வார்கள். மேலும்  மழைக்காலங்களில், ஆற்றில் தண்ணீர் சென்று […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

Just in: கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 பேரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானம் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளத்தை சுற்றி வரும் தெப்பம்…. விடிய விடிய நடக்கும் திருவிழா…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….

பிரசித்தி பெற்ற கோவிலில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக தியாகராஜர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதுடன், கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒரு முறை குளத்தை தெப்பம் சுற்றிவர 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, திமுக அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை  17% இருந்து 31% ஆக உயர்த்தினார். இதனால் அரசு ஊழியர்களின் ஊதியமானது  உயர்ந்து, தற்போது  ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் அடுத்த வாக்குறுதி,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இதனால் இந்த கோரிக்கையை முன்வைத்து, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திருவாரூரை அலேக்காக தூக்கிய திமுக…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல்

“முதல்வர் சொந்த மாவட்டத்துல இந்த நிலைமையா?”…. தொடரும் அவலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்குளம் கிராமத்தில் மக்கள் மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். அதாவது அங்குள்ள கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவும், கிராமத்திற்குள் நுழையவும் கோரையாற்றின் மேல்கரை பகுதியில் அமைந்துள்ள ஒத்தையடி ஆபத்தான பாதையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் இந்த ஒத்தையடி பாதையின் இருபுறமும் முட்புதர்களும், முள் மரங்களும், செடி கொடிகளும் அமைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் ஏதோ காட்டுப்பகுதிக்குள் செல்வது போல் உணர்கின்றனர். மேலும் அந்த கிராமத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று….. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கடந்த டிசம்பர் 5 தேதி கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

பள்ளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இவர்களில் ஒரு ஆசிரியருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தேசிய கைத்தறி தினம்… அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி… தொடங்கி வைத்த ஆட்சியர்…

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில்  கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்தும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கௌரவிக்கும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கூடுவதை தடுக்க… குளத்தின் கதவுகளை அடைத்த அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ஆடி அம்மவசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கமலாலயம் குளத்தின் கதவுகளை நிர்வாகிகள் அடைத்துள்ளனர். கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி அம்மாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மட்டும் கோவில்களுக்குள் சென்று பூஜை செய்துகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கமலாலயம் குளத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 வருடங்களாக நடைபெற்ற வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் சேகரை பகுதியில் விஜய் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜய் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஆசிரியர்… வழியில் நடந்த விபரீதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சக்தி குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் பால்ராஜ் நகரை சேர்ந்த கலைமதி என்ற ஆசிரியையும் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மடப்புரம் ஆட்டூர் வழியாக சென்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்… புறப்பட்டு சென்ற சங்கத்தினர்… நடைபெறும் 5 நாள் போராட்டம்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக பறிபோன உயிர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் அவரது மனைவி லதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் யோகேஸ்வரன்(2). இந்நிலையில்நேற்று மதியம் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளான். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்கள் இடம் எங்களுக்கு வேண்டும்… தாசில்தார் அலுவலகம் முற்றுகை… பெண்கள் கதறி அழுததால் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்டத்தில் வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கொருக்கை ஊராட்சியில் உள்ள கண்ணன் மேடு மேலத்தெருவில் சுமார் 110க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். அப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் மேல தெருவில் ஒருகாலத்தில் குளம் இருந்ததாகவும், அதனை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள்… வேதனையடைந்த விவசாயிகள்… வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்துவிடும் படி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள சிங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மூலம் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த மாதத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வயல்வெளிகள் மிகவும் வறண்டு கிடைப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து தண்ணீர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களை கண்டித்த பெற்றோர்… சாவிலும் பிரியாத நண்பர்கள்… திருவாரூரில் நடந்த சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோர்கள் கண்டித்ததால் ஒரே நேரத்தில் 3 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்துள்ள கப்பலுடையான் பகுதியில் ஆனந்த்(26), ஆசைத்தம்பி(28), அசோக்குமார்(26) ஆகிய 3 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் மற்றும் ஆனந்த் ஊருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கமுகக்குடியை சேர்ந்தவர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா கட்டிக்கொடுங்க… நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டி தருமாறு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் ரெங்கநாதபுரம், வடக்கு தெரு, தெற்கு தெரு, எக்கல், சோத்திரியம், கண்டகரயம் போன்ற பகுதிகளில் உள்ள 580 குடும்ப அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் அந்த ரேசன்கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விண்ணப்பித்த பொதுமக்கள்… 1,838 பேருக்கு புதிய அட்டைகள்… வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் 1,838 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஸ்மார்ட் கார்டு வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்து ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 1,838 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூரில் 246, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்னால திருப்பி கொடுக்க முடியல… வங்கி ஊழியர்கள் நெருக்கடி… ஊராட்சி மன்ற தலைவர் எடுத்த முடிவு…

திருவாரூர் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரியில் முருகானந்தம்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சேரி ஊராட்சி தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள  வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து கடனை வாங்கிய முருகானந்தம் அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி அதிகாரிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… கோரிக்கை விடுத்த சிறுவன்… உதவி செய்த மாவட்ட ஆட்சியர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் இணையம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த மாற்றுதிறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள ஆணைக்குப்பத்தில் மாற்றுத்திறனாளியான ஜெயதேவ்(12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருவதால் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சிறுவனை நேரில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கலைந்து போங்க… தொடர்ந்து எழுந்த கோஷங்கள்… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு…!!

திருவாரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் அதிமுக நிர்வாகியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கிய நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து மேலப்பூவனூர் கிராமத்தில் நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த திட்டதை கொண்டுவர வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நடித்துள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்க வேண்டும், 2 ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்பதிவில்லா இலவச ரயில் பெட்டியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தீயில் கருகிய விதை நெல்கள்… 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டகை திடீரென தீப்பிடித்து எறிந்ததில் 2 லட்சம் மதிப்புள்ள வேளாண் கருவி மற்றும் விதை நெல்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கோமல் பகுதியில் உள்ள ஆதனூரில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் குருவை சாகுபடி செய்வதற்காக 20 மூட்டை விதை நெல் வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அங்கு பம்புசெட் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவன் செய்த கொடூரம்… 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சும்மா தான் பேசுனேன்… பாதி எறிந்த சிறுமியின் உடல்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியில் வைத்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் இளைஞரையும், சிறுமியையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 23 பவுன் நகை… அதிர்ச்சியடைந்த பால் வியாபாரி… 3 பேரை தேடி வரும் போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பால் வியாபாரியிடம் இருந்து மர்ம நபர்கள் 23 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாடர்ன் நகரில் நெடுமாறன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல நெடுமாறன் பால் கொள்முதல் செய்வதற்காக அவருடைய மொபட்டில் மன்னார்குடியில் இருந்து மதுக்கூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுந்தரக்கோட்டை அருகில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை கண்டிப்பா குறைக்கனும்… முக்குலத்து புலிகள் கட்சியினர்… 12 பேரை கைது செய்த போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜா தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து திருவாரூர் நகர செயலாளர் யோகானந்த், திருத்துறைப்பூண்டி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்துகொண்ட தங்கை… மனமுடைந்த அண்ணன் செய்த காரியம்… கதறி அழும் பெற்றோர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த சகோதரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள அம்மையப்பனை அருகில் உள்ள இலங்குடியில் ஜெயராஜ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது தங்கை சில தினங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் தங்கை ஓடிப்போன துக்கத்தில் செய்ராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மனவுளைச்சலில் இருந்து மீள முடியாமல் ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள்… குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவற்றை நிறைவேற்ற வேண்டும்… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்… நிறைவேற்றாத வாக்குறுதிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் புதுத்தெருவில் வைத்து அதிமுக நிர்வாகிகள் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறுவேற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கப்படும் என்றும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றும் கூறியிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்… மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தினர் கோரிக்கை…!!

திருவாரூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளத்தை நம்பியும், கடலை நம்பியும் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும்  அதை சார்த்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனையடுத்து மீன், கருவாடு போன்ற வியாபாரிகளும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றினால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய நபர்… மின்கம்பத்தில் தொங்கிய பிணம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மின்கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள தெற்கு தென்பரை பாமணி ஆற்றங்கரை அருகில் மின்கம்பம் ஓன்று உள்ளது. இதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து திருமக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனிமே வாழ முடியாது… விரக்தியடைந்த முதியவர்… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையிலும், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள கீழதிருமதிகுன்னம் பகுதியில் விவசாயம் செய்துவரும் கலியமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெகு நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலிக்கு பல்வேறு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகாததால் கலியமூர்த்தி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த முதியவர் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரிபட்டு வராது…ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை… !!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழில் சங்கத்தினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டமானது ஊராட்சி ஒன்றிய செயலாளரான சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க நகர பொருளாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்… போலீஸ் சூப்பிரண்டின் பாராட்டு…!!

கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தி குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்கு போலீஸ் சூப்பிரண்ட் காவலர்களை அழைத்து பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாநல்லூர் கிராமத்தில் முத்துக்குமாரசாமி – மெல்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுகன்யா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சுகன்யாவிற்கு திடீரென உடல்நிலை குறைவால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்ற சமயத்தில் சுகன்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… இயற்கை உரத்திற்கான வழி… விவசாயிகளின் புது முயற்சி…!!

விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரத்திற்காக விளை நிலங்களில் செம்மறி ஆடுகளை மேய விடுகின்றனர். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி செய்து வழக்கமாகும். தற்போது காவிரி நீர் பிரச்சினையாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், நெல் சாகுபடி 2 போகமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஜுன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… திருவாரூரில் கோர தாண்டவம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 114 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னார்குடி விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள தொகுதியாகும். ஏராளமான சிவாலயங்கள் உள்ள இப்பகுதியில் வைணவக் கோயிலான ராஜகோபாலசுவாமி திருக்கோவில் உள்ளது. தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து சம உரிமை மாநாடு நடத்தியது மன்னார்குடியில் தான். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. மன்னார்குடி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,58,433 ஆகும். மன்னார்குடியிலிருந்து […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ கோவிலும், ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரும் திருவாரூர் சிறப்பு அம்சங்களாகும். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த பகுதியில் நெல், பருத்தி, பயறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் பிறந்த பகுதியாகும். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. கால்நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக திகழும் திருவாரூர் […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

திருத்துறைபூண்டி தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், பொங்கு சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புனித தலங்கள் உள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதி இது. தற்போது திமுகவின் ஆடலரசன் எம்எல்ஏவாக உள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,39,136 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் முன்விரோதம்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. காவல்துறையின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. காணாமல் தேடிய பெற்றோர்…. கிடைத்த தகவலால் அதிர்ந்த சொந்தங்கள்….!!

விளையாட சென்ற  சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜன்-கமலா தம்பதியினர். இவர்களுடைய  மகன் ஆதவன் வயது 8, இந்த சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் பதற்றம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் அச்சிறுவனின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள் விழாக்கள்

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரம் ஆச்சு நெல் மூட்டையை எடுக்கல… விவசாயி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை …!!

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் விவசாயியை தாக்கிய சம்பவத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அசோக் குமார் என்பவர் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள அபிஷேக கட்டளை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார். இதனை அடுத்து இவர் வழக்கம் போல அவருடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு பிப் 15 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” வீடு புகுந்து தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவி இருவரையும் வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தரசன் என்பவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகரின் மீது முத்தரசனுக்கு கடும் கோபம் எழுந்தது. இதையடுத்து முத்தரசன் அவரது உறவினர்கள் 3 பேரை சேர்த்துக் கொண்டு சேகரை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற சேகரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானதாக இருக்கும் – உதயநிதி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் கபடி, சிலப்பட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தல் ஆச்சி மாற்றத்திற்காக இருக்கும் என்று கூறினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உழவர் திட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாய்லரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த CCTV காட்சி …!!

தாராபுரம் அருகே ரைஸ்மில்லில் 30 அடி பாய்லரில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் திருமணம் ஆனவர் இவர் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தம் ரைஸ்மில்லில் வேலை பார்த்த போது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் […]

Categories

Tech |