வாய்த்தகராறு காரணமாக மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]
Tag: திருவாரூர்
ஆற்றில் குளிப்பதற்காக சென்ற வெற்றிலை வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் சாகுல் ஹமீது(30) என்பவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியிலேயே வெற்றிலை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மதியம் சாகுல் ஹமீது வெற்றிலை வியாபாரம் செய்ய கங்களாஞ்சேரி பகுதிக்கு சென்றிருந்தார். வேலைக்கு சென்ற அவர் நேற்று மதியம் முதல் வீட்டுக்கு வரவில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தேடி […]
திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா உட்பட 1050 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், மின்வாரிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி இன்றி 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது காவல்துறை மூன்று பிரிவின் […]
நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமியை வியாபாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சமீபத்தில் கூட புதுக்கோட்டை அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 7 […]
கடன் தொல்லையால் பெண் உடலில் தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (35) என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு அபிநயா(12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கியிடமும், சிலரிடமும் […]
குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர் பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]
குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று […]
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தின் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்திய பருவ தேர்வு முடிவுகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]
திருவாரூரில் இன்று 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 99 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று […]
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு […]
திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி […]
திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா, நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில் தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் […]
கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]
திருவாரூரில் செல்போனை சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல […]
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு […]
திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, கோவை, […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]