மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலவனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் மகள் ஜீவா வசித்து வருகின்றார். இவர் திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அப்துல் கலாம் நகர் அருகில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜீவாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை […]
Tag: திருவாரூர்
இ-சேவை மைய அலுவலகத்திற்குள் பணியாளர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் தெற்குத் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் வடபாதிமங்கலத்தில் இ-சேவை மைய பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் […]
திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் தெற்கு வீதி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து செல்வகுமாரின் பெற்றோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர். […]
நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மேலூர் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற சென்றனர். அப்போது நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரான வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட […]
சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கொண்டுவந்த 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த […]
கல்லூரிக்கு சென்ற மாணவி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொட்டாரம் தெற்கு தெருவில் முருகன் மகள் ஸ்டெல்லா வசித்து வருகிறார். இவர் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற ஸ்டெல்லா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் ஸ்டெல்லாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மகளை பாண்டிச்சேரியை சேர்ந்த கோட்டை பாக்கம் […]
சிறுமி திருமணம் குறித்து 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அலிவலம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகள் ராஜாவின் தாய் ராணியிடம் வளர்ந்து வருகின்றனர். இதில் ராஜா நாகப்பட்டினத்தில் இருக்கின்றார். இதனிடையில் பரவாக்கோட்டையை சேர்ந்த காமராஜ் என்பவர் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக […]
முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகுடி கிராமத்தில் முதியவர் தங்கராஜ் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கராஜ் மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் தன் மகள் மாரியம்மாளை பார்க்க மருதுவஞ்சேரி சென்றார். இதனையடுத்து ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு மரத்தில் முதியவர் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள தென்றல்நகர் பகுதியில் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியபோது வடகிழக்கு பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகவே […]
சட்டவிரோதமாக லாரி மற்றும் மினி வேனில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதாகோட்டை புறவழிச் சாலையில் உள்ள கொட்டகையிலிருந்து நாமக்கல்லிற்கு அரிசினை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரி, 3 மினி வேன்களில் அரிசி ஏற்றியது […]
ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் […]
போக்குவரத்து பாதிப்பைத் தடுக்க ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வந்தது. இதனையடுத்து ரயில் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. அதன்பின் விரைவு ரயில் வந்ததால் ரயில்வே கேட் சுமார் ஒரு மணிநேரம் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை-திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை வேளையில் எர்ணாகுளம் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரிசி […]
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 நபர்களுக்கும், 2-ம் கட்ட […]
பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதியின்றி ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சணல் வெடிகுண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் திரி, புஸ்வானம் தயாரிப்பதற்கான மண் குடுவை, ஒலக்கை வெடி போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்த நிலையில் அதனை […]
கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை பகுதியில் பல்லு செந்தில் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜெகதீசன் 2008-ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது […]
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி, […]
செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி அருகில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு செண்டை மேள கலைஞர்கள் 11 பேர் கேரள மாநிலத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிகள் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பாலக்காடு சேட்டப்படி பகுதியில் வசித்து வரும் விஷ்ணு என்ற கலைஞரும் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்து […]
பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு தஞ்சையிலிருந்து அம்மாபேட்டை, அவளிவநல்லூர் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து வழக்கம்போல் அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பின் தஞ்சைக்கு சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து அவளிவநல்லூர் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் திருபுவனம் மருத்துவ தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் அருண்குமார் […]
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளத்தினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துணை […]
காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 40 கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடையின் மேற்கூரையானது இடிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. […]
ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகில் திருக்கண்டீஸ்வரம்-சோத்தக்குடி இணைப்புசாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் ரத்தமாதிரிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுகாதாரதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி நன்னிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குவிந்து கிடந்த ஊசிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியபோது […]
வீணாகும் தண்ணீரைக் கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் இருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்துவரும் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகின்றது. […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இதில் அகிலா அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவிற்கு வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அகிலாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை […]
காற்றுடன் பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காற்றுடன் கனமழை நீடித்ததால் கடைவீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி பழையனூர்,சித்தனங்குடி, திருராமேஸ்வரம், […]
ரயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரயில்வே மேம்பாலம் தஞ்சை-நாகை சாலையை இணைக்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. இந்த சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் செல்லும் பிரதான சாலை செல்வதால் 3 வழிப்பாதையாக இருந்து வருகின்றது. இதில் தஞ்சை-நாகை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் எந்நேரமும் செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே […]
திருட்டுப்போன 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது குறித்து கடந்த 2020-21-ஆம் ஆண்டில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் காவல்துறையினர் திருட்டுபோன செல்போனை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் திருட்டு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி […]
விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடை விதித்ததால் வடமாநில தொழிலாளர்கள் சிலையை விற்பனை முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, அருகில் உள்ள நீரில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் […]
வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பத்மசாலவர் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மன்னார்குடி கீழபாலம் பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக்கிற்கு அருகில் இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் கார்த்திக் கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், […]
ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு ராட்சத தூண்கள் கொண்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்று வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் […]
காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் நாளை முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் கேட் கீப்பர் இல்லாத காரணத்தினால், மொபைல் கேட் கீப்பர்களை பயன்படுத்தி, ரயில்கள் இயங்கி வருகின்றது. இதனால் பயணம் செய்யும் நேரம் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் […]
சிவகாசி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு ஒன்றியதலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ராமராஜ், அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் யூனியன் […]
ஆவூரில் பள்ளி மைதானத்திற்கு வேலி அமைத்துக் கொடுக்க காவல்துறையினர் போலீசார் எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமானது கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானம் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இருப்பதனால் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் மைதானத்தை சுற்று சுவர் அமைத்து மது அருந்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மைதானத்தில் மாணவர்களுக்கு தேவையான உடற்கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் […]
குடமுருட்டி ஆற்றங்கரையில் படித்துறை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் இருக்கின்றது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா மற்றும் ஆவணி மாத தெப்பத்திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள். இவ்வாறு வரும் […]
விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பாக விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் ஸ்மித்தா, பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து […]
வேலங்குடி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து கூறியுள்ளார். அப்போது இந்த ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு போன்ற தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து வெள்ளக் குடியிலிருந்து வேலங்குடி வரை 4 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]
கூடூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. அதாவது நாராயணமங்கலம் திருவாச குளத்தில் 2 படித்துறை கட்டப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து மொச குளம் பகுதியில் இருந்து கீழத்தெரு வரை 1.5 கிலோ மீட்டருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]
காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் கடந்த 2-ஆம் தேதி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மதுபாட்டில்களை டேப் மூலமாக உடலில் ஒட்டி, நூதன முறையில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு […]
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் வந்து சென்றதையடுத்து கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டது. அப்போது நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவர்சந்தை அருகில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கிச் செல்லும் அரசு விரைவு பேருந்து நகர்ந்து வந்தது. அதே […]
சங்க நிர்வாக கூட்டத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்திருத்த சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் பிரபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்பாக மாநில அலுவல செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதனையடுத்து மாநில இணை செயலாளர் ராஜூ, மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், மாநில பொருளாளர் வெங்கடேசன், […]
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் தட்டுப்பாடு இன்றி தமிழ்நாடு […]
மக்கும் குப்பைகள் மூலமாக உரம் தயாரிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 15,036 குடியிருப்பு மற்றும் 3,965 வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வீடுகள், கடைகளில் உருவாகும் குப்பைகளில் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நெய்விளக்குதோப்பு பகுதியிலுள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் […]
களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. எனவே தற்போதைய கட்டிடத்தில் போதிய அளவு வசதிகள் இல்லாததால் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதம் முடிந்தும் கட்டிடம் திறக்கப்படாமல் இருக்கின்றது. இதனை திறந்தால் திருக்களர், […]
பெருங்குடி ஊராட்சி சார்பாக தார் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஊராட்சி சார்பாக வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு போன்ற பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 350 மீட்டர் தூரத்திற்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண் சாலைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. […]
கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமான நிலையில் கடந்த 19-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்தம் மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய இருப்பதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். அதில் பொறியாளர் சங்க […]