திருவையாறு அருகே உள்ள கோவில் குளத்தின் கரையை ஆக்கிரமித்திருந்த குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அடுத்திருக்கும் கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்த கோவில் குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஞ்சை ஆட்சியர் தினேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று […]
Tag: திருவையாறு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திருமணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார். மதுரை ஐகோர்ட்டானது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரக்கோரி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை […]
திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம் பறக்கும் படையினர் கைப்பற்றினர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில் ,பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த 40 வயதுடைய டாக்டர் ஜீவா என்பது தெரியவந்தது .இவர் உரிய ஆவணம் […]
திருவையாறு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வரகூர் கிராமத்தின் அருகே பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறக்கியுள்ளார் அப்போது கனமழையின் காரணமாக பழுதடைய மின்சாரம் கம்பி பேருந்தில் இருந்தவர்கள் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]
திருவையாறு அருகே ரூ 10,000 மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் மேலப்பேட்டை தெருவில் அமைந்துள்ளது ஜனமுத்தீஸ்வரர் திருக்கோயில்.. இந்தக் கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த கணபதி குருக்கள் தினமும் பூஜை செய்துவருகின்றார். இந்நிலையில் நேற்றும் கணபதி குருக்கள் பூஜைகளை முடித்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டு காலை பூஜைக்கு வந்தார்.. அப்போது கோயிலின் பரிவார தெய்வங்கள் கோபுரத்திலிருந்த 6 செம்பு கலசங்களை காணவில்லை. திருடுபோன […]