லவ் டுடே திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]
Tag: திரையரங்கம்
தமிழகத்தில் ”பீஸ்ட்” திரைப்படம் ரிலீசாகும் தியேட்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனையடுத்து […]
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள RRR திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் திரையரங்கம் ஒன்றில் மேடைக்கு முன் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் வெளியாகவுள்ள RRR திரைப்படத்தை காணவரும் ரசிகர்கள் உற்சாகத்தில் மேடையில் ஏறி, திரைக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வலிமை திரைப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் அஜித். அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று மிகவும் பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தை குறித்து பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இயக்குனர் ஆத்விக் ரவிதரன் வலிமை […]
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் படம் பார்க்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களையும் அனுமதித்து […]
திரையரங்குகள் மூடப்பட்டதால் முன்னணி நடிகை, நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடுகையில் ரிலீசாக உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, திரிஷாவின் ‘ராங்கி’ ஆகிய படங்கள் ஓடிடி […]
பிரபல நடிகர் பகத் பாசில் திரைப்படங்கள் இனி திரையரங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும் உயிர் பலியை வாங்கி வருகிறது. தற்போது அதன் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் சி யூ […]
ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதேபோல இப்படத்தை தெலுங்கில் வக்கீல் ஷாப் என்ற தலைப்பில் இயக்கியுள்ளனர். பவன் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. […]
இந்த படங்களும் ஓடவில்லை என்றால் திரையரங்கை இழுத்து சாத்தி பூட்டி விட்டு செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் முன்பிருந்த அளவிற்கு தற்போது கூட்டம் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் சோகத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தியேட்டர் […]
திரையரங்குகளில் கூட்டங்கள் அதிகரிக்க பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா என்ற தொற்று பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]
தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது திரையரங்குகளில் 100 சதவீதம் இரு கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்வதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதியை கடந்த 4ஆம் தேதி அன்று தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இந்நிலையில் […]
தமிழகத்தில் திரையரங்கம் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்கில் செயல்படுவதற்கு வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் செயல் படலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் எஸ்.ஓ.பி என்று சொல்லக்கூடிய விதிமுறை அடங்கிய வழிகாட்டு நெறிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன ? நடைமுறைகள் என்னென்ன ? என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நோய் […]
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்களே நிராகரிப்பார்கள் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசை தொடர்ந்து கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலின் போது மக்களே நிராகரிப்பார்கள் என்றார். தொடர்ந்து திரையரங்குகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த […]
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால சூழலில் சினிமா உலகம் ஒரு லாபத்தை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது. சாமானிய மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை உணர கூடிய ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளமாக சினிமாத்துறை விளங்குகிறது. வாரத்தில் ஒரு நாளாவது சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார். அதே […]
கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்படாது எனவும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவர் எனவும் […]