கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]
Tag: திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீடு பிரிக்கப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்க்க மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. தமிழக அரசு 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு புதுக்கோட்டையில் கொரோனா […]
உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்ற கூடிய வகையில் நாளை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்திருக்கின்ற காவலர் நினைவிடத்தில், நாளை காலை 8 மணி அளவில் காவலர்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற […]
கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்படாது எனவும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவர் எனவும் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]
உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]
நாடு முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பொழுதுபோக்கு பூங்காக்களில் திறப்பதற்கு வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, “பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்படக் கூடாது.பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கின்ற உணவுக் கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவு அருந்த அனுமதி அளிக்க வேண்டும். அங்கு வரும் அனைவரும் கட்டாயம் […]
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 189 நேரடி […]
இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மணாலியில் இருந்து லே […]
இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை வருகின்ற அக்டோபர் 3ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. […]
சீனாவின் வுகான் நகரில் பல மாதங்களுக்குப் பின்னர் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட உடன் சீனாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதிலும் குறிப்பாக வுகான் […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதும், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாலாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளது. அதனால் பள்ளி மற்றும் […]
அஜ்மானில் கொரோனா லேசர் பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவை பரிசோதனை செய்யும் கொரோனா லேசர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வாறான பரிசோதனை மையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. அந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா […]
அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கூடங்களை திறக்கும்படி அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளித்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் தற்போது 53,59,748 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1,69,463 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் […]
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் திரிகூடமலை பகுதியில் இருக்கின்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்தக் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி […]
இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி வழங்கிள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் […]
மூன்று நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொல்கத்தா, மும்பை, நொய்டா போன்ற பல்வேறு நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள் அமைந்திருக்கின்றன. இந்த மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதுபற்றி பிரதமர் பேசிய போது, “இந்தியா மற்ற நாடுகளை விட மிகச் சிறப்பான நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைத் […]
தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், […]
சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். குரங்குசாவடி முதல் சேலம் […]
கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு […]
நாடு முழுவதும் நாளை முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் வழிப்பாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை. எனவே நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நோய் தொற்று குறையாக காரணத்தால் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிப்பாட்டு நெறிமுறைகளை தமிழகத்தில் வெளிப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் […]
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி […]
தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விவரம்: சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக […]