தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைத்து பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tag: தீபாவளி பண்டிகை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கு ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகளில் 14,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்லும் அங்கிருந்து மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முதல்வர் ஆணையிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் 28,844 பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலமாக14, 24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக்கில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் டாஸ்மாக்கில் 437 ரூபாய் கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், கடந்த 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், 4ஆம் தேதி 225.42 ரூபாய் கோடிக்கும், டாஸ்மாக்கில் மது விற்பனையாகி உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக மதுரை மண்டலம் 51.68 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலம் 47.57 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலம் […]
மகாராஷ்டிராவில் வரும் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களின் கல்வியில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் இம்மாதம் முதல் நகர்ப்புறங்களில் எட்டாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் […]
தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் இன்று 4 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. திட்டக்குடி அடுத்து வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது. இந்த நிலையில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டயர்களை கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் வெளியானதற்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின்போது அனைத்து தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும் என்றும் […]
திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் ஆடை எடுத்தால் ஆடு பரிசு என்று விளம்பரம் செய்துள்ள துணிக்கடையில் மக்கள் கூட்டம் குவிந்தனர். வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் துணிக்கடைகள் மற்றும் வெடிக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நியூ சாரதா என்ற துணிக்கடையில் ஒரு வித்தியாசமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு 1,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் தங்க நாணயம், ஆட்டுக்கிடாய், […]
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்திய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் இந்த மாதம் முடியும் வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன பணிகள் தொடங்கப்படும் என்பது பற்றி கடந்த வாரம் அறிவிப்பு வெளியாக உ120….. ள்ளது. […]
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வரும் 27ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 80% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் 100% ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி […]
தமிழகத்தில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை வருகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, ஆனால் பட்டாசு என்றால் நினைவில் வருவது சிவகாசி தான். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை வாடிக்கையாளர்களுக்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிவகாசியின் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் வகையில் பல வண்ணங்களை தயார் செய்யப்படுகின்றன. […]
சிவகாசி பட்டாசு கடைகளில் டின் பீர் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பவுண்டேன் பட்டாசுகள் மது பிரியர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்டாசுகள் அணி வகுத்துள்ளது. சில பட்டாசு கடைகளில் பார்த்தவுடனே பீர் டின்னா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசுகளுக்கு முன்னணி […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 16,540 […]
தீபாவளியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து இரண்டாவது நாளாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்ல அதிகளவில் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் இல்லாததால் சிரமமின்றி பயணம் செய்ய முடிவதாக பேருந்து பயணிகள் தெரிவித்தனர்.
தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதங்களுக்குப் பின்னர் தீபாவளி பண்டிகையையொட்டி மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25-ஆம் தேதி முதல் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சிரமத்தை குறைக்க இரு மாநிலங்களுக்கு கிடையேயான அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கியது. இரு மாநிலங்களுக்கு இடையே இயக்ககப்படும் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும். வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் தென் […]
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு […]
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு […]
தீபாவளி பண்டிகையொட்டி இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிக அளவிலான பட்டாசு கடைகள் அமைக்கப்படவில்லை. சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடிய பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போதிய இடைவெளியுடன் அச்சமின்றி பட்டாசுகளை வாங்குவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கான பட்டாசுகள் முதல் வாணவேடிக்கைகள் வரை […]
பொதுமக்கள் பசுமை பட்டாசுகள் வெடித்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவில்லை. சாதாரண பட்டாசுகளில் லிதியம் மற்றும் பேரியம் போன்ற […]
தீபாவளி பண்டிகை தொடங்க உள்ளதால் சென்னை தி நகரில் புத்தாடை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அப்பகுதி முழுவதிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி NSP ரோடு பெரிய கடைவீதி சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பொது மக்களின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனால் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க திருச்சி மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் உள்ள கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 காவல் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 11ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தீபாவளி பண்டிகை தொடங்க இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பாக பொதுமக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், […]
மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அன்று அதிக அளவிலான பட்டாசுகள் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]