சுவிட்சர்லாந்தில் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. Vaud மாகாணத்தில் அமைந்திருக்கின்ற பணிசறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி உள்ளது. அந்த ஹோட்டல் மிகவும் உயரமான மற்றும் வாகன போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தான் அவர்களால் […]
Tag: தீயணைப்பு வீரர்கள்
80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை. இதனையடுத்து மூதாட்டியின் […]
கோடைக்காலத்தில் தீ உள்ளிட்ட பல விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் தீயணைப்புவீரர்கள் விடுமுறை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்புத்துறை மத்திய மண்டலம், மேற்கு, வடக்கு, தெற்கு, வடமேற்கு என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 331 தீயணைப்பு நிலையங்களுடன் இயங்குகின்றன. அதில் 7,000க்கும் அதிகமான அதிகாரிகள், வீரர்கள் இருக்கின்றனர். காவல்துறையினரை போன்றே இவர்களுக்கும் வாரவிடுமுறை இல்லை. எனினும் கிடைக்கும் நேரத்தில் வீட்டில் தீயணைப்பு வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இதனிடையில் கோடைக்காலம், மழைககாலம், காற்று காலம் என காலத்திற்கேற்ப பணிகள் […]
குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆணிமூர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் […]
மின் கசிவு ஏற்பட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது ஓட்டு வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை […]
கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மகள் சந்தியா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவை காணவில்லை. உடனே இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் […]
வறுகடலை ஆலையில் புகுந்த 8 அடி சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் வறுகடலை தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக்திவேல் […]
கப்பலில் நான்கு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவீடன் சரக்கு கப்பலில் நான்கு நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சரக்கு கப்பலானது மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தது. மேலும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற கப்பல்கள் மூலமாக தண்ணீரை பயன்படுத்தி கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் சரக்கு கப்பலானது மரப்பலகைகளை ஏற்றி வந்ததால் தீயை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை,தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதன்படி வைகை அணை நிரம்பியதால் 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான இராமநாதபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள புல்லங்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது வைகை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. உடனே ஆடு மேய்ப்பவர்கள் தீயணைப்பு […]
நித்திரவிளை அருகே 12 பேருடன் சென்ற கார் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தில் மூழ்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுஜின். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏர்போர்ட்டிற்கு சென்று சுஜினை வழியனுப்பி விட்டு வந்துள்ளனர். திரும்பி வரும் வழியில் நித்திரவிளை அருகே உள்ள நடுவரம்பன்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனை அறியாத […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. அதில் பூண்டி ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மணலி புதுநகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் எதிரில் உள்ள லட்சுமி […]
மழையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கையாள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்படும் இடர்பாடுகளை கையாளுவதற்காக சென்னையில் உள்ள 42 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களில் இருக்கும் 1,000 தீயணைப்பு வீரர்கள் களப்பணியில் உள்ளனர். இவர்கள் நீரை வெளியேற்றுவது மற்றும மீட்பு பணியில் ஈடுபடுவது ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் […]
வடகிழக்கு பருவமழையையோட்டி பேரிடர் மீட்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகள் மற்றும் எளிதில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் […]
வராக நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடலை மீட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் அக்ரஹாரம் பகுதியில் வித்யபாரதி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மதுரையை சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் உள்ள வராக நதியில் ஓடிக்கொண்டிருந்த […]
கூலித்தொழிலாளி வீட்டில் நுழைந்த உடும்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அமராவதி நகர் 3வது தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூக்கையா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போடி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் கண்மாயில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி பெரியகுளம் அடுத்துள்ள நஞ்சாபுரம் கண்மாயில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களுக்கும் செயல்விளக்கம் செய்து கண்பிக்கபட்டுள்ளது. மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேஷன் […]
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் நுழைந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அதை வனபகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள ஒருகால் பாதை தெருவில் வீரராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த வீரராம்குமார் அதிர்ச்சியடைந்து […]
தேனி மாவட்டம் போடி நீதிமன்ற வளாகத்தில் நேற்று தீயணைப்பு வீரர்கள் சார்பில் தீயை தடுப்பதற்கான ஒத்திகையை செய்து காட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் நேற்று தீயணைப்பு துறையினர் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி போடி நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற நிலையில் இதற்கு போடி தீயணைப்பு நிலையத்தின் அலுவலர் சக்திவேல் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் தீ பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தீயிலிருந்து காத்துக்கொள்ள […]
சுவிட்சர்லாந்திலுள்ள கொட்டகை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பன்றிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Wolhusen என்னும் பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் பன்றிகளும், மாடுகளும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 130 தீயணைப்பு வீரர்களும், மீட்புக்குழுவினர்களும் தீ சுற்று வட்டாரத்திற்கு பரவாமல் இருக்க வேண்டும் என்ற […]
விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தன்யாநகர் புதிய வீடு கட்டும் பணிகள் நடக்கும் இடத்தில் டைல்ஸ் கற்கள் வைத்திருக்கும் பெட்டியில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து கட்டிட தொழிலாளர்கள் குடுத்த தகவலின்படி அங்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் திருச்சுழி உள்ள அரசு மருத்துவமனை […]
சுவிஸ் நதி ஒன்றில் உள்ள மீன்களை காப்பாற்றதீயணைப்பு வீரர்கள் புதிய நீரை பாய்ச்சி வருகின்றனர். சுவிட்சர்லாந்து Dardagny என்ற இடத்திலுள்ள நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்துவிட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் நதியில் உள்ள மீன் போன்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நதியில் புதிய நீரை மின் மோட்டார் மூலம் தீயணைப்பு வீரர்கள் பாய்ச்சி வருகின்றனர். இதனிடையே சில மீன்கள் செத்து மிதந்தும் வருகிறது. எனவே தீயணைப்பு வீரர்கள் நதிக்குள் புதிய […]
ஸ்விட்ஸர்லாண்ட் நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டர் மூலம் நதியில் தண்ணீரை பம்ப் செய்து வருகின்றனர். அப்போது தவறுதலாக டார்டாகினி என்ற இடத்தில் உள்ள தண்ணீரில் சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்து விட்டது .அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நதிக்குள் ஆக்சிஜன் […]
மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ […]
கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிளாஸ்மா வங்கியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் விருப்பப்பட்டால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள் தாமாக […]
சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாத்திரம் சிக்கியுள்ளது. அதன்பின் தீயணைப்பு வீரர்களை அழைத்து பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது குழந்தையின் சுட்டித்தனமான […]
உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கக் கூடிய தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றக்கூடிய தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமாகவே சென்னையில் கொரோனா தொற்று அதகிகரித்து வரக் கூடிய நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு கிருமி நாசினிகளை அளிக்கக்கூடிய […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொழில்பேட்டையில் இருந்த பழைய தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களில் கொழுந்துவிட்டு தீ எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.