பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சத்தியகாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சத்திய காந்தாவின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுடைய பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]
Tag: தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என் புதூர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ராஜசேகர் பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த புள்ளி மானை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுகம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் எங்கும் நகராமல் பாம்பு சாலையிலேயே படுத்து கொண்டது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்பு சாலையில் படுத்து கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பாம்பை […]
சிலிண்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் ரீட்டா நகரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மாள் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென கியாஸ் வாசனை வருவதை உணர்ந்த மாரியம்மாள் எழுந்து பார்த்த போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது. ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்ணெய் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தனாக்கோட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சுப்ரமணியனுக்கு சொந்தமான ஒரு பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனடியாக தீயணைத்து துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.
கிணற்றுகள் விழுந்த நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் புது காலணியில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டு நாய்க்குட்டிகள் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி 2 நாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக […]
ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து […]