Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள் நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரணத்திலும் பிரியாத தம்பதியினர்…. சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் அவருடனேயே உயிரிழந்துவிட்டார். மரணத்திலும் பிரியாத தம்பதியின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கீரிப்பாறை அருகே வெள்ளந்தி பகுதியை சேர்ந்தவர் செம்பொன் காணி. 90 வயதான இவர் மனைவி வள்ளியம்மாள் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த செம்பொன் காணி நேற்று இரவு திடீரென இறந்துவிட்டார். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் இழப்பை தாங்க முடியாத கணவர்… முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 5 சடலங்கள்… அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர், மனைவி இறந்த துக்கத்தில் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவரின் மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. இதில் கடந்த ஜூன் மாதம் ஜெயாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. அதற்காக  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு கருப்பு பூஜை பாதிக்கப்பட்ட தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோரின் புதிய புரோமோ… கண்ணன் இல்லாமலே அம்மாவின் உடல் அடக்கம்… ரசிகர்கள் சோகம்…!!!

பாண்டியன் ஸ்டோரின் புதிய புரோமோவைக் கண்ட ரசிகர்கள் பலரும் அடுத்தடுத்த இவ்வளவு சோகமா என்று கமன்ட் செய்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது துக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி லக்ஷ்மி அம்மா அவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கண்ணன் வந்தால் தான் லட்சுமி அம்மாவை எடுக்க முடியும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் மறைவு: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு…. ஓபிஎஸ்-ஈபிஸ் அறிவிப்பு…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுசூதனன் மறைவையொட்டி ஆகஸ்டு-7 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஓபிஎஸ் -இபிஎஸ் தெரிவித்துள்ளனர். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், நிகழ்ச்சிகள் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு…!!

பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய […]

Categories

Tech |