பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். […]
Tag: துணைவேந்தர்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேல்ராஜ் துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வித் துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புதியதாக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணைவேந்தராக பணியாற்றி வந்த நடராஜன் ஓய்வு பெற்றார். அதன்பின் துணைவேந்தராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து துணைவேந்தராக தற்போது பல்கலைக்கழக பேராசிரியர் தேவேந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்திற்கு மத்திய உயர் கல்வித்துறையின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த […]
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு ஏற்றவாறு தமிழக அரசு மத்திய அரசின் […]
மாநில அரசை பரிந்துரை செய்யாமல் தானாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரரான முத்தரசன், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு அதனை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது ஓபிசி மாணவர்களுக்கு மத்திய […]
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்துள்ளது தவறு என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படுகிறார் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, “மாநில அரசின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாக கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தருக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா?. இதற்கு தமிழக அரசு ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். […]
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிதி தேவை இல்லை என்று கூறுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி உதவி தேவை இல்லை என்று கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வராக?.ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு […]