கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப், இந்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் ஆகியவற்றின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தார். அதாவது துணை ராணுவ படையினர் தங்கள் குடும்பத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் செலவிட அனுமதி வழங்குவது தான் அந்த திட்டம். துணை ராணுவ படையினர் அடர்ந்த காடுகளிலும், கடும் குளிரிலும், உயரமான […]
Tag: துணை ராணுவ படையினர்
மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் நேற்று மாலை கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகிலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பை போலீஸ் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் காரைக்குடி, எஸ்.புதூர் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர், மின்னமலைப்பட்டி, வாராப்பூர், கட்டுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கொடி அணிவகுப்பிற்கு தலைமை […]
தேர்தலை முன்னிட்டு நாகையில் ஆயுதப்படையினர், துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். […]
நாகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி பதற்றமான […]