துனிசியா நாட்டின் அதிபர் பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். துனிசியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து இந்த நாட்டின் பாராளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தை எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கைஸ் சையத் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட […]
Tag: துனிசியா
துனிசியா நாட்டின் அதிபரான கைஸ் சையத், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக தன் அதிகாரத்தை உயர்த்திக் கொண்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். துனிசியா நாட்டின் பிரதமரை கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதியன்று, அதிபர் கைஸ் சையத், பதவி நீக்கம் செய்தார். மேலும் நாட்டினுடைய நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதத்தில் தனக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் விதத்திலான திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வந்தார். ஆனால், இவை அனைத்தும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட […]
துனிசியா நாட்டில் முதல் பெண் பிரதமராக ரவோதா போடன் ரோம்தானே என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக துனிசியாவில் அரசியல் குழப்பமும், பெரும் பொருளாதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிபர் கைஸ் சயீத் கடந்த ஜூலை மாதம் முந்தைய அரசை கலைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பிறகு புதிய அரசை அமைக்க அதிபர் கைஸ் 4 மாதங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ரவோதா போடன் ரோம்தானே (63) என்பவர் […]
நடுக்கடலில் படகில் தத்தளித்த அகதிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அரசியல், பொருளாதார நெருக்கடி, வறுமை, போன்ற காரணங்களால் மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஐரோப்பியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கடந்த வாரம் மொராக்கோ, வங்கதேசம், எகிப்து, சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த அகதிகள் நடுக்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது SOS Mediterranee என்னும் தொண்டு நிறுவனத்தின் கப்பல் […]
துனிசியா நாட்டின் பிரதமர் அந்நாட்டில் கொரோனாவை முறையாக கையாளாத காரணத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் 18 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதாரத்திலும் துனிசியா மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி கொரோனா தொற்றை முறையாக கையாளாதது தான் இந்த நெருக்கடியான நிலைக்கு காரணம் என்று கூறி பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]
துனிசியா நாட்டிலே அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி அவரை பணி நீக்கம் செய்யதுள்ளனர். ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கொரோனா தொற்றை தவறாக கையாண்டதால் அரசின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கைஸ் சையத் இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் […]
துனிசியா நாட்டில் குழந்தை ஒன்று தன்னந்தனியாக நடுக்கடலில் கதறி அழுதபடி ரப்பர் மிதவை ஒன்றில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியாவில் உள்ள கெலிபியா என்ற பகுதியில் குழந்தை ஒன்று கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மிதந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் நடு கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையை போராடி மீட்டுள்ளனர். மேலும் அந்த குழந்தை இளஞ்சிவப்பு நிற ரப்பர் மிதவை ஒன்றில் கதறி அழுதபடி மிதந்து கொண்டிருந்த […]
துனிசியாவில் சுமார் 130 அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். துனிசியாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஸ்வாரா என்ற நகரத்திலிருந்து 130 அகதிகள் ஒரு படகில் ஐரோப்பா சென்றுள்ளனர். அப்போது சார்சிஸ் நகரத்திற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விழுந்ததில், படகில் இருந்த மக்கள் மொத்தமாக தண்ணீரில் மூழ்கினார்கள். அந்த சமயத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்க போராடியுள்ளனர். அதன் பின்பு உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
பிரான்சில் கொலையான நிர்வாக காவல்துறை பெண் ஊழியரின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கள் மீது போர் அறிவித்ததாக தெரிவித்துள்ளார். பிரான்சில் நிர்வாக காவல்துறை ஊழியரான Stephanie Monferme என்ற பெண்ணை, துனிசியா நாட்டை சார்ந்த 49 வயதுடைய நபர், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் மறைந்த Stephanie Monferme க்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் […]
துனிசியாவில் கொல்லப்பட்ட தன் கணவருக்காக பாதுகாப்பு படையினரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய பெண், தன் குழந்தையுடன் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா என்ற நாட்டில் ஜிகாதிகள் பதுங்கியுள்ள இடமான Mount Selloum என்ற பகுதியில் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினர் தன் கணவனை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் மனித வெடிகுண்டாக மாறியிருக்கிறார். அதாவது இப்பெண்ணின் கணவர் பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தியபோது கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் அந்தப் பெண் பாதுகாப்பு படைகள் தன் அருகில் […]
செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய காவல்படை தெரிவித்துள்ளது .39 சடலங்களை கடலோர காவல் படை குழுக்கள், தன்னார்வ மீன்பிடி படகுகளை கடற்பறை கண்டுபிடித்துள்ளது. மேலும் மற்றொரு படகும் அதே பகுதியில் சென்று […]
ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். […]